Corpus pasurams 2212–2221

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 31 · corpus 2212

Pasuram 31

Study resources at Uveda
பிரான் என்றும் நாளும் * பெரும் புலரி என்றும் *
 குரா நல் செழும் போது கொண்டு ** வராகத்து
 அணி உருவன் * பாதம் பணியும் அவர் கண்டீர் *
 மணி உருவம் காண்பார் மகிழ்ந்து 31

Pasuram 32 · corpus 2213

Pasuram 32

Study resources at Uveda
மகிழ்ந்தது சிந்தை * திருமாலே * மற்றும்
 மகிழ்ந்தது * உன் பாதமே போற்றி ** மகிழ்ந்தது
 அழல் ஆழி சங்கம் * அவை பாடி ஆடும் *
 தொழில் ஆகம் சூழ்ந்து துணிந்து 32

Pasuram 33 · corpus 2214

Pasuram 33

Study resources at Uveda
துணிந்தது சிந்தை * துழாய் அலங்கல் * அங்கம்
 அணிந்தவன் பேர் * உள்ளத்துப் பல்கால் ** பணிந்ததுவும்
 வேய் பிறங்கு சாரல் * விறல் வேங்கடவனையே *
 வாய் திறங்கள் சொல்லும் வகை 33

Pasuram 34 · corpus 2215

Pasuram 34

Study resources at Uveda
வகையால் அவனி * இரந்து அளந்தாய் பாதம் *
 புகையால் நறு மலரால் முன்னே ** மிக வாய்ந்த
 அன்பு ஆக்கி ஏத்தி * அடிமைப்பட்டேன் உனக்கு *
 என் பாக்கியத்தால் இனி 34

Pasuram 35 · corpus 2216

Pasuram 35

Study resources at Uveda
இனிது என்பர் காமம் * அதனிலும் ஆற்ற *
 இனிது என்பர் தண்ணீரும் எந்தாய் ** இனிது என்று
 காமம் நீர் வேளாது * நின் பெருமை வேட்பரேல் *
 சேம நீர் ஆகும் சிறிது 35

Pasuram 36 · corpus 2217

Pasuram 36

Study resources at Uveda
சிறியார் பெருமை * சிறிதின் கண் எய்தும் *
 அறியாரும் தாம் அறியார் ஆவர் ** அறியாமை
 மண் கொண்டு மண் உண்டு * மண் உமிழ்ந்த மாயன் என்று *
 எண் கொண்டு என் நெஞ்சே ! இரு 36

Pasuram 37 · corpus 2218

Pasuram 37

Study resources at Uveda
இரும் தண் கமலத்து * இரு மலரின் உள்ளே *
 திருந்து திசைமுகனைத் தந்தாய் ** பொருந்திய நின்
 பாதங்கள் ஏத்திப் * பணியாவேல் * பல் பிறப்பும்
 ஏதங்கள் எல்லாம் எமக்கு 37

Pasuram 38 · corpus 2219

Pasuram 38

Study resources at Uveda
எமக்கு என்று இரு நிதியம் * ஏமாந்து இராதே *
 தமக்கு என்றும் சார்வம் அறிந்து ** நமக்கு என்றும்
 மாதவனே என்னும் * மனம் படைத்து * மற்று அவன் பேர்
 ஓதுவதே நாவினால் ஓத்து 38

Pasuram 39 · corpus 2220

Pasuram 39

Study resources at Uveda
ஓத்தின் பொருள் முடிவும் இத்தனையே * உத்தமன் பேர்
 ஏத்தும் * திறம் அறிமின் ஏழைகாள் ** ஓத்து அதனை
 வல்லீரேல் * நன்று அதனை மாட்டீரேல் * மாதவன் பேர்
 சொல்லுவதே ஓத்தின் சுருக்கு 39

Pasuram 40 · corpus 2221

Pasuram 40

Study resources at Uveda
சுருக்காக வாங்கி * சுலாவி நின்று * ஐயார்
 நெருக்கா முன் * நீர் நினைமின் கண்டீர் ** திருப் பொலிந்த
 ஆகத்தான் * பாதம் அறிந்தும் அறியாத *
 போகத்தால் இல்லை பொருள் 40

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.