Pasuram 41 · corpus 2222
Pasuram 41
பொருளால் அமர் உலகம் * புக்கு இயலல் ஆகாது *
அருளால் அறம் அருளும் அன்றே ? ** அருளாலே
மா மறையோர்க்கு ஈந்த * மணிவண்ணன் பாதமே *
நீ மறவேல் நெஞ்சே! நினை 41
Bhoothath Azhwar · Reading part · pasurams 41–50
Corpus pasurams 2222–2231
This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 41 · corpus 2222
பொருளால் அமர் உலகம் * புக்கு இயலல் ஆகாது *
அருளால் அறம் அருளும் அன்றே ? ** அருளாலே
மா மறையோர்க்கு ஈந்த * மணிவண்ணன் பாதமே *
நீ மறவேல் நெஞ்சே! நினை 41
Pasuram 42 · corpus 2223
நினைப்பன் திருமாலை * நீண்ட தோள் காண *
நினைப்பார் பிறப்பு ஒன்றும் நேரார் ** மனைப்பால்
பிறந்தார் பிறந்து எய்தும் * பேரின்பம் எல்லாம் *
துறந்தார் தொழுதார் அத் தோள் 42
Pasuram 43 · corpus 2224
தோள் இரண்டு எட்டு ஏழும் * மூன்றும் முடி அனைத்தும் *
தாள் இரண்டும் வீழச் * சரம் துரந்தான் ** தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம் * அவை தொழுவது அன்றே ? * என்
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு 43
Pasuram 44 · corpus 2225
சிறந்தார்க்கு எழு துணையாம் * செங்கண் மால் நாமம் *
மறந்தாரை மானிடமா வையேன் ** அறம் தாங்கும்
மாதவனே! என்னும் * மனம் படைத்து * மற்று அவன்பேர்
ஓதுவதே நாவினால் உள்ளு 44
Pasuram 45 · corpus 2226
உளது என்று இறுமாவார் * உண்டு இல்லை என்று *
தளர்தல் அதன் அருகும் சாரார் ** அளவு அரிய
வேதத்தான் வேங்கடத்தான் * விண்ணோர் முடி தோயும் *
பாதத்தான் பாதம் பயின்று 45
Pasuram 46 · corpus 2227
பயின்றது அரங்கம் திருக்கோட்டி * பல் நாள்
பயின்றதுவும் * வேங்கடமே பல்நாள் ** பயின்றது
அணி திகழும் சோலை * அணி நீர் மலையே *
மணி திகழும் வண் தடக்கை மால் 46
Pasuram 47 · corpus 2228
மாலை அரி உருவன் * பாதமலர் அணிந்து *
காலை தொழுது எழுமின் கைகோலி ** ஞாலம்
அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த * அண்ணலை மற்று அல்லால் *
உளம் கிடந்த ஆற்றால் உணர்ந்து 47
Pasuram 48 · corpus 2229
உணர்ந்தாய் மறை நான்கும் * ஓதினாய் நீதி *
மணந்தாய் மலர் மகள் தோள் மாலே ** மணந்தாய் போய்
வேய் இரும் சாரல் * வியல் இரு ஞாலம் சூழ் *
மா இரும் சோலை மலை 48
Pasuram 49 · corpus 2230
மலை ஏழும் * மா நிலங்கள் ஏழும் அதிர *
குலை சூழ் குரை கடல்கள் ஏழும் ** முலை சூழ்ந்த
நஞ்சு உரத்துப் பெண்ணை * நவின்று உண்ட நாவன் என்று *
அஞ்சாது என்நெஞ்சே அழை 49
Pasuram 50 · corpus 2231
அழைப்பன் திருமாலை * ஆங்கு அவர்கள் சொன்ன *
பிழைப்பு இல் பெரும் பெயரே பேசி ** இழைப்பு அரிய
ஆயவனே! யாதவனே ! * என்றவனை யார் முகப்பும் *
மாயவனே ! என்று மதித்து 50
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.