Corpus pasurams 2232–2241

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 51 · corpus 2232

Pasuram 51

Study resources at Uveda
மதிக் கண்டாய் நெஞ்சே ! * மணிவண்ணன் பாதம் *
 மதிக் கண்டாய் மற்று அவன் பேர் தன்னை ** மதிக் கண்டாய்
 பேர் ஆழிநின்று * பெயர்ந்து கடல் கடைந்த
 நீர் ஆழி வண்ணன் நிறம் 51

Pasuram 52 · corpus 2233

Pasuram 52

Study resources at Uveda
நிறம் கரியன் * செய்ய நெடு மலராள் மார்வன் *
 அறம் பெரியன் ஆர் அது அறிவார் ? ** மறம் புரிந்த
 வாள் அரக்கன் போல்வானை * வானவர் கோன் தானத்து *
 நீள் இருக்கைக்கு உய்த்தான் நெறி 52

Pasuram 53 · corpus 2234

Pasuram 53

Study resources at Uveda
நெறியார் குழல் கற்றை * முன்நின்று பின் தாழ்ந்து *
 அறியாது இளங் கிரி என்று எண்ணி ** பிரியாது
 பூங்கொடிக்கள் வைகும் * பொரு புனல் குன்று என்னும் *
 வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு 53

Pasuram 54 · corpus 2235

Pasuram 54

Study resources at Uveda
வெற்பு என்று இரும் சோலை * வேங்கடம் என்று இவ் இரண்டும் *
 நிற்பு என்று நீ மதிக்கும் நீர்மை போல் ** நிற்பு என்று
 உளம் கோயில் * உள்ளம் வைத்து உள்ளினேன் * வெள்ளத்து
 இளங் கோயில் கைவிடேல் என்று 54

Pasuram 55 · corpus 2236

Pasuram 55

Study resources at Uveda
என்றும் மறந்தறியேன் * ஏழ் பிறப்பும் எப்பொழுதும் *
 நின்று நினைப்பு ஒழியா நீர்மையால் ** வென்றி
 அடல் ஆழி கொண்ட * அறிவனே! * இன்பக்
 கடல் ஆழி நீ அருளிக் காண் 55

Pasuram 56 · corpus 2237

Pasuram 56

Study resources at Uveda
காணக் கழி காதல் * கைமிக்குக் காட்டினால் *
 நாணப்படும் என்றால் நாணுமே? ** பேணிக்
 கரு மாலைப் * பொன் மேனி காட்டாமுன் காட்டும் *
 திருமாலை நங்கள் திரு 56

Pasuram 57 · corpus 2238

Pasuram 57

Study resources at Uveda
திருமங்கை நின்றருளும் * தெய்வம் நா வாழ்த்தும் *
 கருமம் கடைப்பிடிமின் கண்டீர் ** உரிமையால்
 ஏத்தினோம் பாதம் * இருந் தடக்கை எந்தை பேர் *
 நால் திசையும் கேட்டீரே? நாம் 57

Pasuram 58 · corpus 2239

Pasuram 58

Study resources at Uveda
நாம் பெற்ற நன்மையும் * நா மங்கை நல் நெஞ்சத்து *
 ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து ** வேம்பின்
 பொருள் நீர்மை ஆயினும் * பொன் ஆழி பாடு என்று *
 அருள் நீர்மை தந்த அருள் 58

Pasuram 59 · corpus 2240

Pasuram 59

Study resources at Uveda
அருள் புரிந்த சிந்தை * அடியார்மேல் வைத்து *
 பொருள் தெரிந்து காண்குற்ற அப்போது ** இருள் திரிந்து
 நோக்கினேன் நோக்கி * நினைந்தேன் அது ஒண் கமலம் *
 ஓக்கினேன் என்னையும் அங்கு ஓர்ந்து 59

Pasuram 60 · corpus 2241

Pasuram 60

Study resources at Uveda
ஓர் உருவன் அல்லை * ஒளி உருவம் நின் உருவம் *
 ஈர் உருவன் என்பர் இரு நிலத்தோர் ** ஓர் உருவம்
 ஆதியாம் வண்ணம் * அறிந்தார் அவர் கண்டீர் *
 நீதியால் மண் காப்பார் நின்று 60

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.