Pasuram 61 · corpus 2242
Pasuram 61
நின்றது ஓர் பாதம் * நிலம் புதைப்ப * நீண்ட தோள்
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் ** அன்று
கரு மாணியாய் * இரந்த கள்வனே! * உன்னைப்
பிரமாணித்தார் பெற்ற பேறு! 61
Bhoothath Azhwar · Reading part · pasurams 61–70
Corpus pasurams 2242–2251
This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 61 · corpus 2242
நின்றது ஓர் பாதம் * நிலம் புதைப்ப * நீண்ட தோள்
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் ** அன்று
கரு மாணியாய் * இரந்த கள்வனே! * உன்னைப்
பிரமாணித்தார் பெற்ற பேறு! 61
Pasuram 62 · corpus 2243
பேறு ஒன்றும் முன் அறியேன் * பெற்று அறியேன் பேதைமையால் *
மாறு என்று சொல்லி வணங்கினேன் ** ஏறின்
பெருத்தெருத்தம் கோடு ஒசிய * பெண் நசையின் பின் போய் *
எருத்து இறுத்த நல் ஆயர் ஏறு 62
Pasuram 63 · corpus 2244
ஏறு ஏழும் * வென்று அடர்த்த எந்தை * எரி உருவத்து
ஏறு ஏறி * பட்ட இடுசாபம் ** பாறு ஏறி
உண்ட தலை வாய் நிறையக் * கோட்டு அம் கை ஒண் குருதி *
கண்ட பொருள் சொல்லின் கதை 63
Pasuram 64 · corpus 2245
கதையும் பெரும் பொருளும் கண்ணா ! * நின் பேரே
இதயம் * இருந்தவையே ஏத்தில் ** கதையும்
திருமொழியாய் நின்ற * திருமாலே ! * உன்னைப்
பரு மொழியால் காணப் பணி 64
Pasuram 65 · corpus 2246
பணிந்தேன் திருமேனி * பைங் கமலம் கையால் *
அணிந்தேன் உன் சேவடிமேல் அன்பாய் ** துணிந்தேன்
புரிந்து ஏத்தி * உன்னை புகலிடம் பார்த்து * ஆங்கே
இருந்து ஏத்தி வாழும் இது 65
Pasuram 66 · corpus 2247
இது கண்டாய் நல் நெஞ்சே ! * இப் பிறவி ஆவது *
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது ** இது கண்டாய்
நாரணன் பேர் ஓதி * நரகத்து அருகு அணையா *
காரணமும் வல்லையேல் காண் 66
Pasuram 67 · corpus 2248
கண்டேன் திருமேனி * யான் கனவில் * ஆங்கு அவன் கைக்
கண்டேன் * கனலும் சுடர் ஆழி ** கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் * ஓட்டுவித்து * பின்னும்
மறு நோய் செறுவான் வலி 67
Pasuram 68 · corpus 2249
வலி மிக்க வாள் எயிற்று * வாள் அவுணர் மாள *
வலி மிக்க வாள் வரை மத்து ஆக * வலி மிக்க
வாள் நாகம் சுற்றி * மறுகக் கடல் கடைந்தான் *
கோள் நாகம் கொம்பு ஒசித்த கோ 68
Pasuram 69 · corpus 2250
கோ ஆகி * மா நிலம் காத்து * நம் கண் முகப்பே
மா ஏகிச் செல்கின்ற மன்னவரும் ** பூ மேவும்
செங் கமல நாபியான் * சேவடிக்கே ஏழ் பிறப்பும் *
தண் கமலம் ஏய்ந்தார் தமர் 69
Pasuram 70 · corpus 2251
தமர் உள்ளம் தஞ்சை * தலை அரங்கம் தண்கால் *
தமர் உள்ளும் தண் பொருப்பு வேலை ** தமர் உள்ளும்
மாமல்லை கோவல் * மதிள் குடந்தை என்பரே *
ஏ வல்ல எந்தைக்கு இடம் 70
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.