Corpus pasurams 2252–2261

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 71 · corpus 2252

Pasuram 71

Study resources at Uveda
இடங்கை வலம்புரி நின்று ஆர்ப்ப * எரி கான்று
 அடங்கார் * ஒடுங்குவித்தது ஆழி ** விடம் காலும்
 தீ வாய் அரவு அணைமேல் * தோன்றல் திசை அளப்பான் *
 பூ ஆர் அடி நிமிர்த்த போது 71

Pasuram 72 · corpus 2253

Pasuram 72

Study resources at Uveda
போது அறிந்து வானரங்கள் * பூஞ்சுனை புக்கு * ஆங்கு அலர்ந்த
 போது அரிந்துகொண்டு ஏத்தும் போது ** உள்ளம் போது
 மணி வேங்கடவன் * மலர் அடிக்கே செல்ல *
 அணி வேங்கடவன் பேர் ஆய்ந்து 72

Pasuram 73 · corpus 2254

Pasuram 73

Study resources at Uveda
ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் * ஆதி நடு அந்திவாய் *
 வாய்ந்த மலர் தூவி வைகலும் ** ஏய்ந்த
 பிறைக் கோட்டுச் * செங்கண் கரி விடுத்த பெம்மான் *
 இறைக்கு ஆட்படத் துணிந்த யான் 73

Pasuram 74 · corpus 2255

Pasuram 74

Study resources at Uveda
யானே தவம் செய்தேன் * ஏழ் பிறப்பும் எப்பொழுதும் *
 யானே தவம் உடையேன் எம் பெருமான் ! ** யானே
 இருந்த தமிழ் நல் மாலை * இணை அடிக்கே சொன்னேன் *
 பெருந் தமிழன் நல்லேன் பெருகு 74

Pasuram 75 · corpus 2256

Pasuram 75

Study resources at Uveda
பெருகு மத வேழம் * மாப் பிடிக்கு முன் நின்று *
 இரு கண் இள மூங்கில் வாங்கி ** அருகு இருந்த
 தேன் கலந்து நீட்டும் * திருவேங்கடம் கண்டீர் *
 வான் கலந்த வண்ணன் வரை 75

Pasuram 76 · corpus 2257

Pasuram 76

Study resources at Uveda
வரைச் சந்தனக் குழம்பும் * வான் கலனும் பட்டும் *
 விரைப் பொலிந்த வெண் மல்லிகையும் நிரைத்துக்கொண்டு **
 ஆதிக்கண் நின்ற * அறிவன் அடி இணையே *
 ஓதிப் பணிவது உறும் 76

Pasuram 77 · corpus 2258

Pasuram 77

Study resources at Uveda
உறும் கண்டாய் நல் நெஞ்சே ! * உத்தமன் நல் பாதம் *
 உறும் கண்டாய் ஒண் கமலம் தன்னால் ** உறும் கண்டாய்
 ஏத்திப் பணிந்து அவன் பேர் * ஈர் ஐஞ்ஞூறு எப்பொழுதும் *
 சாற்றி உரைத்தல் தவம் 77

Pasuram 78 · corpus 2259

Pasuram 78

Study resources at Uveda
தவம் செய்து * நான் முகனே பெற்றான் * தரணி
 நிவந்து அளப்ப * நீட்டிய பொன் பாதம் ** சிவந்த தன்
 கை அனைத்தும் * ஆரக் கழுவினான் * கங்கை நீர்
 பெய்து அனைத்துப் பேர் மொழிந்து பின் 78

Pasuram 79 · corpus 2260

Pasuram 79

Study resources at Uveda
பின் நின்று * தாய் இரப்ப கேளான் * பெரும் பணைத் தோள்
 முன் நின்று * தான் இரப்பாள் மொய்ம் மலராள் ** சொல் நின்ற
 தோள் நலத்தான் * நேர் இல்லாத் தோன்றல் * அவன் அளந்த
 நீள் நிலம் தான் அத்தனைக்கும் நேர் 79

Pasuram 80 · corpus 2261

Pasuram 80

Study resources at Uveda
நேர்ந்தேன் அடிமை * நினைந்தேன் அது ஒண் கமலம் *
 ஆர்ந்தேன் உன் சேவடிமேல் அன்பாய் ** ஆர்ந்த
 அடிக் கோலம் * கண்டவர்க்கு என்கொலோ * முன்னைப்
 படிக் கோலம் கண்ட பகல்? 80

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.