Corpus pasurams 2302–2311

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 21 · corpus 2302

Pasuram 21

Study resources at Uveda
பேசுவார் * எவ்வளவு பேசுவர் * அவ்வளவே
 வாச மலர்த் துழாய் மாலையான் ** தேசு உடைய
 சக்கரத்தான் * சங்கினான் சார்ங்கத்தான் * பொங்கு அரவ
 வக்கரனைக் கொன்றான் வடிவு 21

Pasuram 22 · corpus 2303

Pasuram 22

Study resources at Uveda
வடிவு ஆர் முடி கோட்டி * வானவர்கள் * நாளும்
 கடி ஆர் மலர் தூவி காணும் படியானை **
 செம்மையால் உள் உருகிச் * செவ்வனே நெஞ்சமே! *
 மெய்ம்மையே காண விரும்பு 22

Pasuram 23 · corpus 2304

Pasuram 23

Study resources at Uveda
விரும்பி விண் மண் அளந்த * அஞ் சிறைய வண்டு ஆர் *
 சுரும்பு தொளையில் சென்று ஊத ** அரும்பும்
 புனந் துழாய் மாலையான் * பொன் அம் கழற்கே *
 மனம் துழாய் மாலாய் வரும் 23

Pasuram 24 · corpus 2305

Pasuram 24

Study resources at Uveda
வருங்கால் இரு நிலனும் * மால் விசும்பும் காற்றும் *
 நெருங்கு தீ நீர் உருவும் ஆனான் ** பொருந்தும்
 சுடர் ஆழி * ஒன்று உடையான் சூழ் கழலே * நாளும்
 தொடர் ஆழி நெஞ்சே! தொழுது 24

Pasuram 25 · corpus 2306

Pasuram 25

Study resources at Uveda
தொழுதால் பழுது உண்டே? * தூ நீர் உலகம் *
 முழுது உண்டு மொய் குழலாள் ஆய்ச்சி ** விழுது உண்ட
 வாயானை * மால் விடை ஏழ் செற்றானை * வானவர்க்கும்
 சேயானை நெஞ்சே சிறந்து? 25

Pasuram 26 · corpus 2307

Pasuram 26

Study resources at Uveda
சிறந்த என் சிந்தையும் * செங்கண் அரவும் *
 நிறைந்த சீர் நீள் கச்சியுள்ளும் ** உறைந்ததுவும்
 வேங்கடமும் வெஃகாவும் * வேளுக்கைப் பாடியுமே *
 தாம் கடவார் தண் துழாயார் 26

Pasuram 27 · corpus 2308

Pasuram 27

Study resources at Uveda
ஆரே துயர் உழந்தார் * துன்பு உற்றார் ஆண்டையார்? *
 காரே மலிந்த கருங் கடலை ** நேரே
 கடைந்தானை * காரணனை நீர் அணைமேல் * பள்ளி
 அடைந்தானை நாளும் அடைந்து 27

Pasuram 28 · corpus 2309

Pasuram 28

Study resources at Uveda
அடைந்தது அரவு அணை மேல் * ஐவர்க்கு ஆய் * அன்று
 மிடைந்தது * பாரத வெம் போர் ** உடைந்ததுவும்
 ஆய்ச்சிபால் மத்துக்கே * அம்மனே! வாள் எயிற்றுப் *
 பேய்ச்சி பால் உண்ட பிரான் 28

Pasuram 29 · corpus 2310

Pasuram 29

Study resources at Uveda
பேய்ச்சி பால் உண்ட * பெருமானைப் பேர்ந்து எடுத்து *
 ஆய்ச்சி முலை கொடுத்தாள் அஞ்சாதே ** வாய்த்த
 இருள் ஆர் திருமேனி * இன் பவளச் செவ்வாய் *
 தெருளா மொழியானைச் சேர்ந்து 29

Pasuram 30 · corpus 2311

Pasuram 30

Study resources at Uveda
சேர்ந்த திருமால் * கடல் குடந்தை வேங்கடம் *
 நேர்ந்த என் சிந்தை நிறை விசும்பும் ** வாய்ந்த
 மறை பாடகம் அனந்தன் * வண் துழாய்க் கண்ணி *
 இறை பாடி ஆய இவை 30

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.