Corpus pasurams 2312–2321

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 31 · corpus 2312

Pasuram 31

Study resources at Uveda
இவை அவன் கோயில் * இரணியனது ஆகம் *
 அவை செய்து அரி உருவம் ஆனான் ** செவி தெரியா
 நாகத்தான் * நால் வேதத்து உள்ளான் * நறவு ஏற்றான்
 பாகத்தான் பாற்கடல் உளான் 31

Pasuram 32 · corpus 2313

Pasuram 32

Study resources at Uveda
பாற்கடலும் வேங்கடமும் * பாம்பும் பனி விசும்பும் *
 நூல் கடலும் நுண் நூல தாமரை மேல் ** பாற்பட்டு
 இருந்தார் மனமும் * இடமாகக் கொண்டான் *
 குருந்து ஒசித்த கோபாலகன் 32

Pasuram 33 · corpus 2314

Pasuram 33

Study resources at Uveda
பாலகனாய் * ஆல் இலைமேல் பைய * உலகு எல்லாம்
 மேல் ஒருநாள் * உண்டவனே! மெய்ம்மையே ** மாலவனே!
 மந்தரத்தால் * மா நீர்க் கடல் கடைந்து * வான் அமுதம்
 அந்தரத்தார்க்கு ஈந்தாய் நீ அன்று 33

Pasuram 34 · corpus 2315

Pasuram 34

Study resources at Uveda
அன்று இவ் உலகம் * அளந்த அசைவே கொல்? *
 நின்று இருந்து வேளுக்கை நீள் நகர்வாய் ** அன்று
 கிடந்தானைக் * கேடு இல் சீரானை * முன் கஞ்சைக்
 கடந்தானை நெஞ்சமே! காண் 34

Pasuram 35 · corpus 2316

Pasuram 35

Study resources at Uveda
காண் காண் என * விரும்பும் கண்கள் * கதிர் இலகு
 பூண் தார் * அகலத்தான் பொன் மேனி ** பாண்கண்
 தொழில் பாடி * வண்டு அறையும் தொங்கலான் * செம்பொன்
 கழல் பாடி யாம் தொழுதும் கை 35

Pasuram 36 · corpus 2317

Pasuram 36

Study resources at Uveda
கைய கனல் ஆழி * கார்க் கடல் வாய் வெண் சங்கம் *
 வெய்ய கதை சார்ங்கம் வெம் சுடர் வாள் ** செய்ய
 படை பரவை பாழி * பனி நீர் உலகம் *
 அடி அளந்த மாயன் அவர்க்கு 36

Pasuram 37 · corpus 2318

Pasuram 37

Study resources at Uveda
அவற்கு அடிமைப் பட்டேன் * அகத்தான் புறத்தான் *
 உவர்க்கும் கருங் கடல் நீர் உள்ளான் ** துவர்க்கும்
 பவள வாய்ப் பூமகளும் * பல் மணிப் பூண் ஆரம் *
 திகழும் திருமார்பன் தான் 37

Pasuram 38 · corpus 2319

Pasuram 38

Study resources at Uveda
தானே தனக்கு உவமன் * தன் உருவே எவ் உருவும் *
 தானே தவ உருவும் தாரகையும் ** தானே
 எரி சுடரும் மால் வரையும் * எண் திசையும் * அண்டத்து
 இரு சுடரும் ஆய இறை 38

Pasuram 39 · corpus 2320

Pasuram 39

Study resources at Uveda
இறை ஆய் நிலன் ஆகி * எண் திசையும் தான் ஆய் *
 மறை ஆய் மறைப் பொருள் ஆய் வான் ஆய் ** பிறை வாய்ந்த
 வெள்ளத்து அருவி ** விளங்கு ஒலி நீர் வேங்கடத்தான் *
 உள்ளத்தின் உள்ளே உளன் 39

Pasuram 40 · corpus 2321

Pasuram 40

Study resources at Uveda
உளன் கண்டாய் நல் நெஞ்சே! * உத்தமன் என்றும்
 உளன் கண்டாய் * உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் **
 விண் ஒடுங்கக் கோடு உயரும் * வீங்கு அருவி வேங்கடத்தான் *
 மண் ஒடுங்க தான் அளந்த மன் 40

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.