Corpus pasurams 2322–2331

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 41 · corpus 2322

Pasuram 41

Study resources at Uveda
மன்னு மணி முடி நீண்டு * அண்டம் போய் எண் திசையும் *
 துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே ** மின்னை
 உடையாகக் கொண்டு * அன்று உலகு அளந்தான் * குன்றம்
 குடையாக ஆ காத்த கோ 41

Pasuram 42 · corpus 2323

Pasuram 42

Study resources at Uveda
கோவலனாய் * ஆ நிரைகள் மேய்த்து குழல் ஊதி *
 மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன் ** மேவி
 அரி உருவம் ஆகி * இரணியனது ஆகம் *
 தெரி உகிரால் கீண்டான் சினம் 42

Pasuram 43 · corpus 2324

Pasuram 43

Study resources at Uveda
சின மா மத களிற்றின் * திண் மருப்பைச் சாய்த்து *
 புனம் மேய பூமி அதனை ** தனமாகப்
 பேர் அகலத்துள் ஒடுக்கும் * பேர் ஆர மார்வனார் *
 ஓர் அகலத்து உள்ளது உலகு 43

Pasuram 44 · corpus 2325

Pasuram 44

Study resources at Uveda
உலகமும் * ஊழியும் ஆழியும் * ஒண் கேழ்
 அலர் கதிரும் * செந்தீயும் ஆவான் ** பல கதிர்கள்
 பாரித்த * பைம் பொன் முடியான் அடி இணைக்கே *
 பூரித்து என் நெஞ்சே! புரி 44

Pasuram 45 · corpus 2326

Pasuram 45

Study resources at Uveda
புரிந்து மத வேழம் * மாப் பிடியோடு ஊடி *
 திரிந்து சினத்தால் பொருது ** விரிந்த சீர்
 வெண் கோட்டு * முத்து உதிர்க்கும் வேங்கடமே * மேல் ஒரு நாள்
 மண் கோட்டுக் கொண்டான் மலை 45

Pasuram 46 · corpus 2327

Pasuram 46

Study resources at Uveda
மலை முகடு மேல் வைத்து * வாசுகியைச் சுற்றி *
 தலை முகடு தான் ஒரு கை பற்றி ** அலை முகட்டு
 அண்டம் போய் நீர் தெறிப்ப * அன்று கடல் கடைந்தான் *
 பிண்டமாய் நின்ற பிரான் 46

Pasuram 47 · corpus 2328

Pasuram 47

Study resources at Uveda
நின்ற பெருமானே! நீர் ஏற்று * உலகு எல்லாம்
 சென்ற பெருமானே! * செங்கண்ணா! ** அன்று
 துரக வாய் கீண்ட * துழாய் முடியாய்! * நங்கள்
 நரக வாய் கீண்டாயும் நீ 47

Pasuram 48 · corpus 2329

Pasuram 48

Study resources at Uveda
நீ அன்றே நீர் ஏற்று * உலகம் அடி அளந்தாய்? *
 நீ அன்றே நின்று நிரை மேய்த்தாய்? ** நீ அன்றே
 மா வாய் உரம் பிளந்து * மா மருதின் ஊடு போய் *
 தேவாசுரம் பொருதாய் செற்று? 48

Pasuram 49 · corpus 2330

Pasuram 49

Study resources at Uveda
செற்றதுவும் * சேரா இரணியனை * சென்று ஏற்றுப்
 பெற்றதுவும் * மா நிலம் பின்னைக்கு ஆய் ** முற்றல்
 முரி ஏற்றின் * முன் நின்று மொய்ம் பொழித்தாய் ! * மூரிச்
 சுரி ஏறு சங்கினாய்! சூழ்ந்து 49

Pasuram 50 · corpus 2331

Pasuram 50

Study resources at Uveda
சூழ்ந்த துழாய் அலங்கல் * சோதி மணி முடி மால் *
 தாழ்ந்த அருவித் தட வரைவாய் ** ஆழ்ந்த
 மணி நீர்ச் சுனை வளர்ந்த * மா முதலை கொன்றான் *
 அணி நீல வண்ணத்தவன் 50

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.