Pasuram 51 · corpus 2332
Pasuram 51
அவனே அரு வரையால் * ஆ நிரைகள் காத்தான் *
அவனே அணி மருதம் சாய்த்தான் ** அவனே
கலங்காப் பெரு நகரம் * காட்டுவான் கண்டீர் *
இலங்காபுரம் எரித்தான் எய்து 51
Pey Azhwar · Reading part · pasurams 51–60
Corpus pasurams 2332–2341
This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 51 · corpus 2332
அவனே அரு வரையால் * ஆ நிரைகள் காத்தான் *
அவனே அணி மருதம் சாய்த்தான் ** அவனே
கலங்காப் பெரு நகரம் * காட்டுவான் கண்டீர் *
இலங்காபுரம் எரித்தான் எய்து 51
Pasuram 52 · corpus 2333
எய்தான் மராமரம் * ஏழும் இராமனாய் *
எய்தான் அம் மான் மறியை ஏந்திழைக்கு ஆய் ** எய்ததுவும்
தென் இலங்கைக் கோன் வீழ * சென்று குறள் உரு ஆய் *
முன் நிலம் கைக்கொண்டான் முயன்று 52
Pasuram 53 · corpus 2334
முயன்று தொழு நெஞ்சே! * மூரி நீர் வேலை *
இயன்ற மரத்து ஆல் இலையின் மேலால் ** பயின்று அங்கு ஓர்
மண் நலம் கொள் வெள்ளத்து * மாயக் குழவியாய் *
தண் அலங்கல் மாலையான் தாள் 53
Pasuram 54 · corpus 2335
தாளால் சகடம் * உதைத்து பகடு உந்தி *
கீளா மருது இடை போய் கேழல் ஆய் ** மீளாது
மண் அகலம் கீண்டு * அங்கு ஓர் மாது உகந்த மார்வற்கு *
பெண் அகலம் காதல் பெரிது 54
Pasuram 55 · corpus 2336
பெரிய வரை மார்பில் * பேர் ஆரம் பூண்டு *
கரிய முகிலிடை மின் போல ** தெரியுங்கால்
பாண் ஒடுங்க * வண்டு அறையும் பங்கயமே * மற்று அவன் தன்
நீள் நெடுங் கண் காட்டும் நிறம் 55
Pasuram 56 · corpus 2337
நிறம் வெளிது செய்து * பசிது கரிது என்று *
இறை உருவம் யாம் அறியோம் எண்ணில் ** நிறைவு உடைய
நா மங்கை தானும் * நலம் புகழ் வல்லளே *
பூ மங்கை கேள்வன்பொலிவு 56
Pasuram 57 · corpus 2338
பொலிந்து இருண்ட கார் வானில் * மின்னே போல் தோன்றி *
மலிந்து திரு இருந்த மார்வன் ** பொலிந்து
கருடன்மேல் கொண்ட * கரியான் கழலே *
தெருள் தன்மேல் கண்டாய் தெளி 57
Pasuram 58 · corpus 2339
தெளிந்த சிலாதலத்தின் * மேல் இருந்த மந்தி *
அளிந்த கடுவனையே நோக்கி ** விளங்கிய
வெண் மதியம் * தா என்னும் வேங்கடமே * மேல் ஒரு நாள்
மண் மதியில் கொண்டு உகந்தான் வாழ்வு 58
Pasuram 59 · corpus 2340
வாழும் வகை அறிந்தேன் * மை போல் நெடு வரைவாய் *
தாழும் அருவி போல் தார் கிடப்ப ** சூழும்
திரு மா மணி வண்ணன் * செங்கண் மால் * எங்கள்
பெருமான் அடி சேரப் பெற்று 59
Pasuram 60 · corpus 2341
பெற்றம் பிணை மருதம் * பேய் முலை மாச் சகடம் *
முற்றக் காத்து ஊடு போய் உண்டு உதைத்து ** கற்றுக்
குணிலை * விளங் கனிக்குக் கொண்டு எறிந்தான் * வெற்றிப்
பணிலம் வாய் வைத்து உகந்தான் பண்டு 60
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.