Pasuram 61 · corpus 2342
Pasuram 61
பண்டு எல்லாம் வேங்கடம் * பாற்கடல் வைகுந்தம் *
கொண்டு அங்கு உறைவார்க்கு கோயில் போல் ** வண்டு
வளம் கிளரும் நீள் சோலை * வண் பூங் கடிகை *
இளங் குமரன் தன் விண்ணகர் 61
Pey Azhwar · Reading part · pasurams 61–70
Corpus pasurams 2342–2351
This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 61 · corpus 2342
பண்டு எல்லாம் வேங்கடம் * பாற்கடல் வைகுந்தம் *
கொண்டு அங்கு உறைவார்க்கு கோயில் போல் ** வண்டு
வளம் கிளரும் நீள் சோலை * வண் பூங் கடிகை *
இளங் குமரன் தன் விண்ணகர் 61
Pasuram 62 · corpus 2343
விண்ணகரம் வெஃகா * விரி திரை நீர் வேங்கடம் *
மண் நகரம் மா மாட வேளுக்கை ** மண்ணகத்த
தென் குடந்தை * தேன் ஆர் திருவரங்கம் தென்கோட்டி *
தன் குடங்கை நீர் ஏற்றான் தாழ்வு 62
Pasuram 63 · corpus 2344
தாழ் சடையும் நீள் முடியும் * ஒண் மழுவும் சக்கரமும் *
சூழ் அரவும் பொன் நாணும் தோன்றுமால் ** சூழும்
திரண்டு அருவி பாயும் * திருமலைமேல் எந்தைக்கு *
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து 63
Pasuram 64 · corpus 2345
இசைந்த அரவமும் * வெற்பும் கடலும் *
பசைந்து அங்கு அமுது படுப்ப ** அசைந்து
கடைந்த வருத்தமோ? * கச்சி வெஃகாவில் *
கிடந்து இருந்து நின்றதுவும் அங்கு? 64
Pasuram 65 · corpus 2346
அங்கற்கு இடர் இன்றி * அந்திப் பொழுதத்து *
மங்க இரணியனது ஆகத்தை ** பொங்கி
அரி உருவமாய்ப் பிளந்த * அம்மான் அவனே *
கரி உருவம் கொம்பு ஒசித்தான் காய்ந்து 65
Pasuram 66 · corpus 2347
காய்ந்து இருளை மாற்றிக் * கதிர் இலகு மா மணிகள் *
ஏய்ந்த பணக் கதிர்மேல் வெவ்வுயிர்ப்ப ** வாய்ந்த
மது கைடவரும் * வயிறு உருகி மாண்டார் *
அது கேடு அவர்க்கு இறுதி ஆங்கு 66
Pasuram 67 · corpus 2348
ஆங்கு மலரும் * குவியுமால் உந்திவாய் *
ஓங்கு கமலத்தின் ஒண் போது ** ஆம் கைத்
திகிரி சுடர் என்றும் * வெண் சங்கம் * வானில்
பகரும் மதி என்றும் பார்த்து 67
Pasuram 68 · corpus 2349
பார்த்த கடுவன் * சுனை நீர் நிழல் கண்டு *
பேர்த்து ஓர் கடுவன் எனப் பேர்ந்து ** கார்த்த
களங் கனிக்குக் * கை நீட்டும் வேங்கடமே * மேல் நாள்
விளங் கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு 68
Pasuram 69 · corpus 2350
வெற்பு என்று * வேங்கடம் பாடும் * வியன் துழாய்
கற்பு என்று சூடும் * கருங் குழல்மேல் ** மல் பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த * நீள் கடல் நீர் ஆடுவான் *
பூண்ட நாள் எல்லாம் புகும் 69
Pasuram 70 · corpus 2351
புகு மதத்தால் * வாய் பூசிக் கீழ் தாழ்ந்து * அருவி
உகு மதத்தால் * கால் கழுவிக் கையால் ** மிகு மதத் தேன்
விண்ட மலர் கொண்டு * விறல் வேங்கடவனையே *
கண்டு வணங்கும் களிறு 70
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.