Corpus pasurams 2352–2361

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 71 · corpus 2352

Pasuram 71

Study resources at Uveda
களிறு முகில் குத்தக் * கை எடுத்து ஓடி *
 ஒளிறு மருப்பு ஒசி கை யாளி ** பிளிறி
 விழ * கொன்று நின்று அதிரும் * வேங்கடமே * மேல் நாள்
 குழக் கன்று கொண்டு எறிந்தான் குன்று 71

Pasuram 72 · corpus 2353

Pasuram 72

Study resources at Uveda
குன்று ஒன்றின் ஆய * குற மகளிர் கோல் வளைக் கை *
 சென்று விளையாடும் தீம் கழை போய் ** வென்று
 விளங்கு மதி கோள் விடுக்கும் * வேங்கடமே * மேலை
 இளங் குமரர் கோமான் இடம் 72

Pasuram 73 · corpus 2354

Pasuram 73

Study resources at Uveda
இடம் வலம் ஏழ் பூண்ட * இரவித் தேர் ஓட்டி *
 வட முக வேங்கடத்து மன்னும் ** குடம் நயந்த
 கூத்தனாய் நின்றான் * குரை கழலே கூறுவதே *
 நாத்தன்னால் உள்ள நலம் 73

Pasuram 74 · corpus 2355

Pasuram 74

Study resources at Uveda
நலமே வலிது கொல்? * நஞ்சு ஊட்டு வன் பேய் *
 நிலமே புரண்டு போய் வீழ ** சலமே தான்
 வெம் கொங்கை உண்டானை * மீட்டு ஆய்ச்சி ஊட்டுவான் *
 தன் கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து 74

Pasuram 75 · corpus 2356

Pasuram 75

Study resources at Uveda
சார்ந்து அகடு தேய்ப்பத் * தடாவிய கோட்டு உச்சிவாய் *
 ஊர்ந்து இயங்கும் வெண் மதியின் ஒண் முயலை ** சேர்ந்து
 சின வேங்கை பார்க்கும் * திருமலையே * ஆயன்
 புன வேங்கை நாறும் பொருப்பு 75

Pasuram 76 · corpus 2357

Pasuram 76

Study resources at Uveda
பொருப்பிடையே நின்றும் * புனல் குளித்தும் * ஐந்து
 நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா ** விருப்பு உடைய
 வெஃகாவே சேர்ந்தானை * மெய்ம் மலர் தூய்க் கை தொழுதால் *
 அஃகாவே தீவினைகள் ஆய்ந்து 76

Pasuram 77 · corpus 2358

Pasuram 77

Study resources at Uveda
ஆய்ந்த அரு மறையோன் * நான்முகத்தோன் நன் குறங்கில் *
 வாய்ந்த குழவியாய் வாள் அரக்கன் ** ஏய்ந்த
 முடிப் போது * மூன்று ஏழ் என்று எண்ணினான் * ஆர்ந்த
 அடிப் போது நங்கட்கு அரண் 77

Pasuram 78 · corpus 2359

Pasuram 78

Study resources at Uveda
அரண் ஆம் நமக்கு என்றும் * ஆழி வலவன் *
 முரன் நாள் வலம் சுழிந்த மொய்ம்பன் ** சரண் ஆமேல்
 ஏது கதி? ஏது நிலை? * ஏது பிறப்பு? என்னாதே *
 ஓது கதி மாயனையே ஓர்த்து 78

Pasuram 79 · corpus 2360

Pasuram 79

Study resources at Uveda
ஓர்த்த மனத்தராய் * ஐந்து அடக்கி ஆராய்ந்து *
 பேர்த்தால் பிறப்பு ஏழும் பேர்க்கலாம் ** கார்த்த
 விரை ஆர் நறும் துழாய் * வீங்கு ஓத மேனி *
 நிரை ஆர மார்வனையே நின்று 79

Pasuram 80 · corpus 2361

Pasuram 80

Study resources at Uveda
நின்று எதிராய * நிரை மணித் தேர் வாணன் தோள் *
 ஒன்றிய ஈர் ஐஞ்ஞூறு உடன் துணிய ** வென்று இலங்கும்
 ஆர் படு வான் * நேமி அரவு அணையான் * சேவடிக்கே
 நேர் படுவான் தான் முயலும் நெஞ்சு 80

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.