Corpus pasurams 2102–2111

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 21 · corpus 2102

Pasuram 21

Study resources at Uveda
நின்று நிலம் அங்கை * நீர் ஏற்று மூவடியால் *
சென்று திசை அளந்த செங்கண் மாற்கு ** என்றும்
படை ஆழி புள் ஊர்தி * பாம்பு அணையான் பாதம் *
அடை ஆழி நெஞ்சே அறி 21

Pasuram 22 · corpus 2103

Pasuram 22

Study resources at Uveda
அறியும் உலகு எல்லாம் * யானேயும் அல்லேன் *
பொறி கொள் சிறை உவணம் ஊர்ந்தாய் ** வெறி கமழும்
காம்பு ஏய் மென்தோளி * கடை வெண்ணெய் உண்டாயை *
தாம்பே கொண்டு ஆர்த்த தழும்பு 22

Pasuram 23 · corpus 2104

Pasuram 23

Study resources at Uveda
தழும்பு இருந்த சார்ங்க நாண் * தோய்ந்தவாம் அங்கை *
தழும்பு இருந்த தாள் சகடம் சாடி ** தழும்பு இருந்த
பூங்கோதையாள் வெருவ * பொன் பெயரோன் மார்பு இடந்த *
வீங்கு ஓத வண்ணர் விரல் 23

Pasuram 24 · corpus 2105

Pasuram 24

Study resources at Uveda
விரலோடு வாய் தோய்ந்த * வெண்ணெய் கண்டு * ஆய்ச்சி
உரலோடு உறப் பிணித்த நான்று ** குரல் ஓவாது
ஏங்கி நினைந்து * அயலார் காண இருந்திலையே? *
ஓங்கு ஓத வண்ணா! உரை 24

Pasuram 25 · corpus 2106

Pasuram 25

Study resources at Uveda
உரை மேல் கொண்டு * என் உள்ளம் ஓவாது * எப்போதும்
வரைமேல் * மரதகமே போலத் ** திரைமேல்
கிடந்தானை * கீண்டானை * கேழலாய்ப் பூமி
இடந்தானை ஏத்தி எழும் 25

Pasuram 26 · corpus 2107

Pasuram 26

Study resources at Uveda
எழுவார் விடைகொள்வார் * ஈன் துழாயானை *
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார் **
வினைச் சுடரை நந்துவிக்கும் * வேங்கடமே * வானோர்
மனச் சுடரைத் தூண்டும் மலை 26

Pasuram 27 · corpus 2108

Pasuram 27

Study resources at Uveda
மலையால் குடை கவித்து * மா வாய் பிளந்து *
சிலையால் மராமரம் ஏழ் செற்று ** கொலை யானைப்
போர்க் கோடு ஒசித்தனவும் * பூங் குருந்தம் சாய்த்தனவும் *
கார்க் கோடு பற்றியான் கை 27

Pasuram 28 · corpus 2109

Pasuram 28

Study resources at Uveda
கைய வலம்புரியும் நேமியும் * கார் வண்ணத்து
ஐய ! * மலர்மகள் நின் ஆகத்தாள் ** செய்ய
மறையான் நின் உந்தியான் * மா மதிள் மூன்று எய்த *
இறையான் நின் ஆகத்து இறை 28

Pasuram 29 · corpus 2110

Pasuram 29

Study resources at Uveda
இறையும் நிலனும் * இரு விசும்பும் காற்றும் *
அறை புனலும் செந்தீயும் ஆவான் ** பிறை மருப்பின்
பைங்கண் மால் யானை * படு துயரம் காத்து அளித்த *
செங்கண் மால் கண்டாய் தெளி 29

Pasuram 30 · corpus 2111

Pasuram 30

Study resources at Uveda
தெளிது ஆக * உள்ளத்தைச் செந்நிறீஇ * ஞானத்து
எளிது ஆக * நன்கு உணர்வார் சிந்தை ** எளிது ஆகத்
தாய் நாடு கன்றே போல் * தண் துழாயான் அடிக்கே *
போய் நாடிக்கொள்ளும் புரிந்து 30

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.