Pasuram 31 · corpus 2112
Pasuram 31
புரி ஒரு கை பற்றி * ஓர் பொன் ஆழி ஏந்தி *
அரி உருவும் ஆள் உருவும் ஆகி ** எரி உருவ
வண்ணத்தான் மார்பு இடந்த * மால் அடியை அல்லால் * மற்று
எண்ணத்தான் ஆமோ இமை? 31
Poigai Azhwar · Reading part · pasurams 31–40
Corpus pasurams 2112–2121
This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 31 · corpus 2112
புரி ஒரு கை பற்றி * ஓர் பொன் ஆழி ஏந்தி *
அரி உருவும் ஆள் உருவும் ஆகி ** எரி உருவ
வண்ணத்தான் மார்பு இடந்த * மால் அடியை அல்லால் * மற்று
எண்ணத்தான் ஆமோ இமை? 31
Pasuram 32 · corpus 2113
இமையாத கண்ணால் * இருள் அகல நோக்கி *
அமையாப் பொறி புலன்கள் ஐந்தும் நமையாமல் **
ஆகத்து அணைப்பார் * அணைவரே * ஆயிர வாய்
நாகத்து அணையான் நகர் 32
Pasuram 33 · corpus 2114
நகரம் அருள்புரிந்து * நான்முகற்குப் பூமேல் *
பகர மறை பயந்த பண்பன் ** பெயரினையே
புந்தியால் சிந்தியாது * ஓதி உரு எண்ணும் *
அந்தியால் ஆம் பயன் அங்கு என்? 33
Pasuram 34 · corpus 2115
என் ஒருவர் மெய் என்பர் * ஏழ் உலகு உண்டு * ஆல் இலையில்
முன் ஒருவன் ஆய முகில் வண்ணா ** நின் உருகிப்
பேய்த் தாய் முலை தந்தாள் * பேர்ந்திலளால் * பேர் அமர்க் கண்
ஆய்த் தாய் முலை தந்த ஆறு? 34
Pasuram 35 · corpus 2116
ஆறிய அன்பு இல் * அடியார் தம் ஆர்வத்தால் *
கூறிய குற்றமாக் கொள்ளல் நீ தேறி **
நெடியோய் அடி * அடைதற்கு அன்றே * ஈர் ஐந்து
முடியான் படைத்த முரண் 35
Pasuram 36 · corpus 2117
முரணை வலி * தொலைதற்கு ஆம் என்றே * முன்னம்
தரணி தனது ஆகத்தானே ** இரணியனைப்
புண் நிரந்த வள் உகிரால் * பொன் ஆழிக் கையால் * நீ
மண் இரந்து கொண்ட வகை? 36
Pasuram 37 · corpus 2118
வகை அறு நுண் கேள்வி * வாய்வார்கள் * நாளும்
புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி ** திசை திசையின்
வேதியர்கள் * சென்று இறைஞ்சும் வேங்கடமே * வெண் சங்கம்
ஊதிய வாய் மால் உகந்த ஊர் 37
Pasuram 38 · corpus 2119
ஊரும் வரி அரவம் * ஒண் குறவர் மால் யானை *
பேர் எறிந்த பெரு மணியை ** கார் உடைய
மின் என்று * புற்று அடையும் வேங்கடமே * மேல சுரர்
எம் என்னும் மாலது இடம் 38
Pasuram 39 · corpus 2120
இடந்தது பூமி * எடுத்தது குன்றம் *
கடந்தது கஞ்சனை முன் அஞ்ச ** கிடந்ததுவும்
நீர் ஓத மா கடலே * நின்றதுவும் வேங்கடமே *
பேர் ஓத வண்ணர் பெரிது 39
Pasuram 40 · corpus 2121
பெரு வில் பகழிக் * குறவர் கைச் செந்தீ *
வெருவிப் புனம் துறந்த வேழம் ** இரு விசும்பில்
மீன் வீழக் * கண்டு அஞ்சும் வேங்கடமே * மேல் அசுரர்
கோன் வீழக் கண்டு உகந்தான் குன்று 40
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.