Corpus pasurams 2122–2131

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 41 · corpus 2122

Pasuram 41

Study resources at Uveda
குன்று அனைய குற்றம் செய்யினும் * குணம் கொள்ளும் *
இன்று முதலாக என் நெஞ்சே ** என்றும்
புறன் உரையே ஆயினும் * பொன் ஆழிக் கையான் *
 திறன் உரையே சிந்தித்திரு 41

Pasuram 42 · corpus 2123

Pasuram 42

Study resources at Uveda
திருமகளும் மண்மகளும் * ஆய்மகளும் சேர்ந்தால் *
 திருமகட்கே தீர்ந்தவாறு என்கொல் * திருமகள்மேல்
 பால் ஓதம் சிந்தப் * பட நாகணைக் கிடந்த *
 மால் ஓத வண்ணர் மனம்? 42

Pasuram 43 · corpus 2124

Pasuram 43

Study resources at Uveda
மன மாசு தீரும் * அரு வினையும் சாரா *
தனம் ஆய தானே கைகூடும் ** புனம் மேய
பூந் துழாயான் அடிக்கே * போதொடு நீர் ஏந்தி *
 தாம் தொழா நிற்பார் தமர் 43

Pasuram 44 · corpus 2125

Pasuram 44

Study resources at Uveda
தமர் உகந்தது எவ் உருவம் * அவ் உருவம் தானே *
தமர் உகந்தது எப் பேர் மற்று அப் பேர் ** தமர் உகந்தது
எவ் வண்ணம் சிந்தித்து * இமையாது இருப்பரே *
அவ் வண்ணம் ஆழியான் ஆம் 44

Pasuram 45 · corpus 2126

Pasuram 45

Study resources at Uveda
ஆமே, அமரர்க்கு * அறிய? அது நிற்க *
நாமே அறிகிற்போம் நல் நெஞ்சே ** பூ மேய
மா தவத்தோன் தாள் பணிந்த * வாள் அரக்கன் நீள் முடியை *
பாதம் அத்தால் எண்ணினான் பண்பு 45

Pasuram 46 · corpus 2127

Pasuram 46

Study resources at Uveda
பண் புரிந்த நான்மறையோன் * சென்னிப் பலி ஏற்ற *
வெண் புரி நூல் மார்பன் வினை தீர ** புண் புரிந்த
ஆகத்தான் * தாள் பணிவார் கண்டீர் * அமரர் தம்
போகத்தால் பூமி ஆள்வார் 46

Pasuram 47 · corpus 2128

Pasuram 47

Study resources at Uveda
வாரி சுருக்கி * மதக் களிறு ஐந்தினையும் *
சேரி திரியாமல் செந்நிறீஇ ** கூரிய
மெய்ஞ்ஞானத்தால் * உணர்வார் காண்பரே * மேல் ஒருநாள்
கைந் நாகம் காத்தான் கழல் 47

Pasuram 48 · corpus 2129

Pasuram 48

Study resources at Uveda
கழல் ஒன்று எடுத்து * ஒரு கை சுற்றி ஓர் கைமேல் *
சுழலும் சுராசுரர்கள் அஞ்ச ** அழலும்
செரு ஆழி ஏந்தினான் * சேவடிக்கே செல்ல *
மருவு ஆழி நெஞ்சே மகிழ் 48

Pasuram 49 · corpus 2130

Pasuram 49

Study resources at Uveda
மகிழ் அலகு ஒன்றே போல் * மாறும் பல் யாக்கை *
நெகிழ முயல்கிற்பார்க்கு அல்லால் ** முகிழ் விரிந்த
சோதிபோல் தோன்றும் * சுடர் பொன் நெடு முடி * எம்
ஆதி காண்பார்க்கும் அரிது 49

Pasuram 50 · corpus 2131

Pasuram 50

Study resources at Uveda
அரிய புலன் ஐந்து அடக்கி * ஆய் மலர் கொண்டு * ஆர்வம்
புரியப் பரிசினால் புல்கில் ** பெரியனாய்
மாற்றாது வீற்றிருந்த * மாவலிபால் * வண் கை நீர்
ஏற்றானைக் காண்பது எளிது 50

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.