Pasuram 51 · corpus 2132
Pasuram 51
எளிதில் இரண்டு அடியும் காண்பதற்கு * என் உள்ளம்
தெளியத் * தெளிந்தொழியும் செவ்வே ** களியில்
பொருந்தாதவனைப் * பொரல் உற்று * அரியாய்
இருந்தான் திருநாமம் எண் 51
Poigai Azhwar · Reading part · pasurams 51–60
Corpus pasurams 2132–2141
This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 51 · corpus 2132
எளிதில் இரண்டு அடியும் காண்பதற்கு * என் உள்ளம்
தெளியத் * தெளிந்தொழியும் செவ்வே ** களியில்
பொருந்தாதவனைப் * பொரல் உற்று * அரியாய்
இருந்தான் திருநாமம் எண் 51
Pasuram 52 · corpus 2133
எண்மர் பதினொருவர் * ஈர் அறுவர் ஓர் இருவர் *
வண்ண மலர் ஏந்தி வைகலும் ** நண்ணி
ஒரு மாலையால் * பரவி ஓவாது * எப்போதும்
திருமாலைக் கை தொழுவர் சென்று 52
Pasuram 53 · corpus 2134
சென்றால் குடை ஆம் * இருந்தால் சிங்காசனம் ஆம் *
நின்றால் மரவடி ஆம் நீள் கடலுள் ** என்றும்
புணை ஆம் மணி விளக்கு ஆம் * பூம் பட்டு ஆம் புல்கும்
அணை ஆம் * திருமாற்கு அரவு 53
Pasuram 54 · corpus 2135
அரவம் அடல் வேழம் * ஆன் குருந்தம் புள் வாய் *
குரவை குடமுலை மல் குன்றம் ** கரவு இன்றி
விட்டு இறுத்து மேய்த்து ஒசித்து * கீண்டு கோத்து ஆடி * உண்டு
அட்டு எடுத்த செங்கண் அவன் 54
Pasuram 55 · corpus 2136
அவன் தமர் * எவ் வினையர் ஆகிலும் * எம் கோன்
அவன் தமரே * என்று ஒழிவது அல்லால் * நமன் தமரால்
ஆராயப்பட்டு * அறியார் கண்டீர் * அரவு அணைமேல்
பேர் ஆயற்கு ஆட்பட்டார் பேர் 55
Pasuram 56 · corpus 2137
பேரே வரப் * பிதற்றல் அல்லால் என் பெம்மானை *
ஆரே அறிவார்? அது நிற்க ** நேரே
கடிக் கமலத்து உள் இருந்தும் * காண்கிலான் * கண்ணன்
அடிக்கமலம் தன்னை அயன் 56
Pasuram 57 · corpus 2138
அயல் நின்ற வல் வினையை * அஞ்சினேன் அஞ்சி *
உய நின் திருவடியே சேர்வான் ** நயம் நின்ற
நல் மாலை கொண்டு * நமோ நாரணா என்னும் *
சொல் மாலை கற்றேன் தொழுது 57
Pasuram 58 · corpus 2139
தொழுது மலர் கொண்டு * தூபம் கை ஏந்தி *
எழுதும் எழு வாழி நெஞ்சே * பழுது இன்றி
மந்திரங்கள் கற்பனவும் * மால் அடியே கைதொழுவான் *
அந்தரம் ஒன்று இல்லை அடை 58
Pasuram 59 · corpus 2140
அடைந்த அரு வினையோடு * அல்லல் நோய் பாவம் *
மிடைந்தவை மீண்டு ஒழிய வேண்டில் ** நுடங்கு இடையை
முன் இலங்கை வைத்தான் * முரண் அழிய * முன் ஒரு நாள்
தன் வில் அங்கை வைத்தான் சரண் 59
Pasuram 60 · corpus 2141
சரணா மறை பயந்த * தாமரையானோடு *
மரண் ஆய மன் உயிர்கட்கு எல்லாம் ** அரண் ஆய
பேர் ஆழி கொண்ட * பிரான் அன்றி மற்று அறியாது *
ஓர் ஆழி சூழ்ந்த உலகு 60
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.