Pasuram 61 · corpus 2142
Pasuram 61
உலகும் உலகு இறந்த ஊழியும் * ஒண் கேழ்
விலகு * கருங் கடலும் வெற்பும் ** உலகினில்
செந்தீயும் * மாருதமும் வானும் * திருமால் தன்
புந்தியில் ஆய புணர்ப்பு 61
Poigai Azhwar · Reading part · pasurams 61–70
Corpus pasurams 2142–2151
This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 61 · corpus 2142
உலகும் உலகு இறந்த ஊழியும் * ஒண் கேழ்
விலகு * கருங் கடலும் வெற்பும் ** உலகினில்
செந்தீயும் * மாருதமும் வானும் * திருமால் தன்
புந்தியில் ஆய புணர்ப்பு 61
Pasuram 62 · corpus 2143
புணர் மருதின் ஊடு போய்ப் * பூங் குருந்தம் சாய்த்து *
மணம் மருவ மால் விடை ஏழ் செற்று ** கணம் வெருவ
ஏழ் உலகும் தாயினவும் * எண் திசையும் போயினவும் *
சூழ் அரவப் பொங்கு அணையான் தோள் 62
Pasuram 63 · corpus 2144
தோள் அவனை அல்லால் தொழா * என் செவி இரண்டும் *
கேள் அவனது இன் மொழியே கேட்டிருக்கும் ** நா நாளும்
கோள் நாகணையான் * குரை கழலே கூறுவதே *
நாணாமை நள்ளேன் நயம் 63
Pasuram 64 · corpus 2145
நயவேன் பிறர் பொருளை * நள்ளேன் கீழாரோடு *
உயவேன் உயர்ந்தவரோடு அல்லால் ** வியவேன்
திருமாலை அல்லது * தெய்வம் என்று ஏத்தேன் *
வரும் ஆறு என் நம் மேல் வினை? 64
Pasuram 65 · corpus 2146
வினையால் அடர்ப்படார் * வெம் நரகில் சேரார் *
தினையேனும் தீக்கதிக்கண் செல்லார் ** நினைதற்கு
அரியானை * சேயானை * ஆயிரம் பேர்ச் செங்கண்
கரியானைக் கை தொழுதக்கால் 65
Pasuram 66 · corpus 2147
காலை எழுந்து * உலகம் கற்பனவும் * கற்று உணர்ந்த
மேலைத் தலை மறையோர் வேட்பனவும் ** வேலைக்கண்
ஓர் ஆழியான் அடியே * ஓதுவதும் ஓர்ப்பனவும் *
பேர் ஆழி கொண்டான் பெயர் 66
Pasuram 67 · corpus 2148
பெயரும் கருங் கடலே * நோக்கும் ஆறு * ஒண் பூ
உயரும் * கதிரவனே நோக்கும் ** உயிரும்
தருமனையே நோக்கும் * ஒண் தாமரையாள் கேள்வன் *
ஒருவனையே நோக்கும் உணர்வு 67
Pasuram 68 · corpus 2149
உணர்வார் ஆர் உன்பெருமை? * ஊழிதோறு ஊழி *
உணர்வார் ஆர் உன் உருவம் தன்னை ** உணர்வார் ஆர்
விண்ணகத்தாய் ! மண்ணகத்தாய்! * வேங்கடத்தாய்! * நால்வேதப்
பண்ணகத்தாய் ! நீ கிடந்த பால்? 68
Pasuram 69 · corpus 2150
பாலன் தனது உருவாய் * ஏழ் உலகு உண்டு * ஆல் இலையின்
மேல் அன்று நீ வளர்ந்த மெய் என்பர் ** ஆல் அன்று
வேலை நீர் உள்ளதோ? * விண்ணதோ? மண்ணதோ? *
சோலை சூழ் குன்று எடுத்தாய் ! சொல்லு 69
Pasuram 70 · corpus 2151
சொல்லும் தனையும் தொழுமின் விழும் உடம்பு *
செல்லும் தனையும் திருமாலை ** நல் இதழ்த்
தாமத்தால் வேள்வியால் * தந்திரத்தால் மந்திரத்தால் *
நாமத்தால் ஏத்துதிரேல் நன்று 70
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.