Pasuram 71 · corpus 2152
Pasuram 71
நன்று பிணி மூப்புக் * கையகற்றி நான்கு ஊழி *
நின்று நிலம் முழுதும் ஆண்டாலும் * என்றும்
விடல் ஆழி நெஞ்சமே * வேண்டினேன் கண்டாய் *
அடல் ஆழி கொண்டான் மாட்டு அன்பு 71
Poigai Azhwar · Reading part · pasurams 71–80
Corpus pasurams 2152–2161
This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 71 · corpus 2152
நன்று பிணி மூப்புக் * கையகற்றி நான்கு ஊழி *
நின்று நிலம் முழுதும் ஆண்டாலும் * என்றும்
விடல் ஆழி நெஞ்சமே * வேண்டினேன் கண்டாய் *
அடல் ஆழி கொண்டான் மாட்டு அன்பு 71
Pasuram 72 · corpus 2153
அன்பு ஆழியானை * அணுகு என்னும் நா அவன் தன் *
பண்பு ஆழித் தோள் பரவி ஏத்து என்னும் * முன்பு ஊழி
காணானைக் காண் என்னும் கண் * செவி கேள் என்னும் *
பூண் ஆரம் பூண்டான் புகழ் 72
Pasuram 73 · corpus 2154
புகழ்வாய் பழிப்பாய் * நீ பூந் துழாயானை *
இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே! ** திகழ் நீர்க்
கடலும் மலையும் * இரு விசும்பும் காற்றும் *
உடலும் உயிரும் ஏற்றான் 73
Pasuram 74 · corpus 2155
ஏற்றான் புள் ஊர்ந்தான் * எயில் எரித்தான் மார்வு இடந்தான் *
நீற்றான் நிழல் மணி வண்ணத்தான் ** கூற்று ஒருபால்
மங்கையான் * பூமகளான் வார் சடையான் * நீள் முடியான்
கங்கையான் நீள் கழலான் காப்பு 74
Pasuram 75 · corpus 2156
காப்பு உன்னை உன்னக் கழியும் * அரு வினைகள்
ஆப்பு உன்னை உன்ன அவிழ்ந்தொழியும் ** மூப்பு உன்னைச்
சிந்திப்பார்க்கு இல்லை * திருமாலே * நின் அடியை
வந்திப்பார் காண்பர் வழி 75
Pasuram 76 · corpus 2157
வழி நின்று * நின்னைத் தொழுவார் * வழுவா
மொழி நின்ற * மூர்த்தியரே ஆவர் ** பழுது ஒன்றும்
வாராத வண்ணமே விண் கொடுக்கும் * மண் அளந்த
சீரான் திருவேங்கடம் 76
Pasuram 77 · corpus 2158
வேங்கடமும் * விண்ணகரும் வெஃகாவும் * அஃகாத
பூங் கிடங்கின் * நீள் கோவல் பொன் நகரும் ** நான்கு இடத்தும்
நின்றான் இருந்தான் * கிடந்தான் நடந்தானே *
என்றால் கெடுமாம் இடர் 77
Pasuram 78 · corpus 2159
இடர் ஆர் படுவார் * எழு நெஞ்சே * வேழம்
தொடர் வான் * கொடு முதலை சூழ்ந்த ** படம் உடைய
பைந் நாகப் பள்ளியான் * பாதமே கைதொழுதும் *
கொய்ந் நாகப் பூம் போது கொண்டு 78
Pasuram 79 · corpus 2160
கொண்டானை அல்லால் * கொடுத்தாரை யார் பழிப்பார்? *
மண் தா என இரந்து மாவலியை ** ஒண் தாரை
நீர் அங்கை தோய * நிமிர்ந்திலையே? * நீள் விசும்பில்
ஆரம் கை தோய அடுத்து 79
Pasuram 80 · corpus 2161
அடுத்த கடும் பகைஞர்க்கு * ஆற்றேன் என்று ஓடி *
படுத்த பெரும் பாழி சூழ்ந்த விடத்து அரவை **
வல்லாளன் கைக்கொடுத்த * மா மேனி மாயவனுக்கு *
அல்லாதும் ஆவரோ ஆள்? 80
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.