Corpus pasurams 2402–2411

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 21 · corpus 2402

Pasuram 21

Study resources at Uveda
இவையா! பில வாய் * திறந்து எரி கான்ற *
 இவையா ! எரிவட்டக் கண்கள் ** இவையா
 எரி பொங்கிக் காட்டும் * இமையோர் பெருமான் *
 அரி பொங்கிக் காட்டும் அழகு (21)

Pasuram 22 · corpus 2403

Pasuram 22

Study resources at Uveda
அழகியான் தானே * அரி உருவன் தானே *
 பழகியான் தாளே பணிமின் ** குழவியாய்த்
 தான் ஏழ் உலகுக்கும் * தன்மைக்கும் தன்மையனே *
 மீன் ஆய் உயிர் அளிக்கும் வித்து 22

Pasuram 23 · corpus 2404

Pasuram 23

Study resources at Uveda
வித்தும் இடவேண்டும் கொல்லோ? * விடை அடர்த்த *
 பத்தி உழவன் பழம் புனத்து ** மொய்த்து எழுந்த
 கார் மேகம் அன்ன * கரு மால் திருமேனி *
 நீர் வானம் காட்டும் நிகழ்ந்து 23

Pasuram 24 · corpus 2405

Pasuram 24

Study resources at Uveda
நிகழ்ந்தாய் * பால் பொன் பசுப்புக் * கார் வண்ணம் நான்கும்
 இகழ்ந்தாய் * இருவரையும் வீய ** புகழ்ந்தாய்
 சினப் போர்ச் சுவேதனைச் * சேனாபதியாய் *
 மனப் போர் முடிக்கும் வகை 24

Pasuram 25 · corpus 2406

Pasuram 25

Study resources at Uveda
வகையால் மதியாது * மண் கொண்டாய் * மற்றும்
 வகையால் * வருவது ஒன்று உண்டே ** வகையால்
 வயிரம் குழைத்து உண்ணும் * மாவலி தான் என்னும் *
 வயிர வழக்கு ஒழித்தாய் மற்று 25

Pasuram 26 · corpus 2407

Pasuram 26

Study resources at Uveda
மற்றுத் தொழுவார் * ஒருவரையும் யான் இன்மை *
 கற்றைச் சடையான் கரிக் கண்டாய் ** எற்றைக்கும்
 கண்டுகொள் கண்டாய் * கடல்வண்ணா! * யான் உன்னைக்
 கண்டு கொளகிற்குமாறு 26

Pasuram 27 · corpus 2408

Pasuram 27

Study resources at Uveda
மால் தான் புகுந்த * மட நெஞ்சம் * மற்றதுவும்
 பேறாகக் * கொள்வனோ ? பேதைகாள்! ** நீறாடி
 தான் காண மாட்டாத * தார் அகலச் சேவடியை *
 யான் காண வல்லேற்கு இது 27

Pasuram 28 · corpus 2409

Pasuram 28

Study resources at Uveda
இது இலங்கை ஈடு அழியக் * கட்டிய சேது *
 இது விலங்கு வாலியை வீழ்த்ததுவும் ** இது இலங்கை
 தான் ஒடுங்க வில் நுடங்கத் * தண் தார் இராவணனை *
 ஊன் ஒடுங்க எய்தான் உகப்பு 28

Pasuram 29 · corpus 2410

Pasuram 29

Study resources at Uveda
உகப்பு உருவன் தானே * ஒளி உருவன் தானே *
 மகப்பு உருவன் தானே மதிக்கில் ** மிகப் புருவம்
 ஒன்றுக்கு ஒன்று * ஓசனையான் வீழ * ஒரு கணையால்
 அன்றிக்கொண்டு எய்தான் அவன் 29

Pasuram 30 · corpus 2411

Pasuram 30

Study resources at Uveda
அவன் என்னை ஆளி * அரங்கத்து அரங்கில் *
 அவன் என்னை எய்தாமல் காப்பான் ** அவன் என்னது
 உள்ளத்து * நின்றான் இருந்தான் கிடக்குமே *
 வெள்ளத்து அரவு அணையின்மேல் 30

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.