Corpus pasurams 2412–2421

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 31 · corpus 2412

Pasuram 31

Study resources at Uveda
மேல் நான்முகன் * அரனை இட்ட விடு சாபம் *
 தான் நாரணன் ஒழித்தான் தாரகையுள் ** வானோர்
 பெருமானை * ஏத்தாத பேய்காள் ! * பிறக்கும்
 கரு மாயம் பேசின் கதை (31)

Pasuram 32 · corpus 2413

Pasuram 32

Study resources at Uveda
கதைப் பொருள் தான் * கண்ணன் திருவயிற்றின் உள்ள *
 உதைப்பளவு போது போக்கு இன்றி ** வதைப் பொருள் தான்
 வாய்ந்த குணத்துப் * படாதது அடைமினோ *
 ஆய்ந்த குணத்தான் அடி 32

Pasuram 33 · corpus 2414

Pasuram 33

Study resources at Uveda
அடிச் சகடம் சாடி * அரவு ஆட்டி * யானை
 பிடித்து ஒசித்துப் * பேய் முலை நஞ்சு உண்டு ** வடிப் பவள
 வாய்ப் பின்னை தோளிக்கா * வல் ஏற்று எருத்து இறுத்து *
 கோ பின்னும் ஆனான் குறிப்பு 33

Pasuram 34 · corpus 2415

Pasuram 34

Study resources at Uveda
குறிப்பு எனக்குக் * கோட்டியூர் மேயானை ஏத்த *
 குறிப்பு எனக்கு நன்மை பயக்க ** வெறுப்பனோ?
 வேங்கடத்து மேயானை * மெய் வினை நோய் எய்தாமல் *
 தான் கடத்தும் தன்மையான் தாள் 34

Pasuram 35 · corpus 2416

Pasuram 35

Study resources at Uveda
தாளால் உலகம் * அளந்த அசைவே கொல்? *
 வாளா கிடந்தருளும் வாய்திறவான் ** நீள் ஓதம்
 வந்து அலைக்கும் மா மயிலை * மாவல்லிக் கேணியான் *
 ஐந்தலை வாய் நாகத்து அணை 35

Pasuram 36 · corpus 2417

Pasuram 36

Study resources at Uveda
நாகத்து அணைக் குடந்தை * வெஃகா திரு எவ்வுள் *
 நாகத்து அணை அரங்கம் பேர் அன்பில் ** நாகத்து
 அணைப் பாற்கடல் கிடக்கும் * ஆதி நெடுமால் *
 அணைப்பார் கருத்தன் ஆவான் (36)

Pasuram 37 · corpus 2418

Pasuram 37

Study resources at Uveda
வான் உலவு தீவளி * மா கடல் மா பொருப்பு *
 தான் உலவு வெம் கதிரும் தண் மதியும் ** மேல் நிலவு
 கொண்டல் பெயரும் * திசை எட்டும் சூழ்ச்சியும் *
 அண்டம் திருமால் அகைப்பு 37

Pasuram 38 · corpus 2419

Pasuram 38

Study resources at Uveda
அகைப்பு இல் மனிசரை * ஆறு சமயம்
 புகைத்தான் * பொரு கடல் நீர் வண்ணன் ** உகைக்குமேல்
 எத் தேவர் வாலாட்டும் * எவ்வாறு செய்கையும் *
 அப்போது ஒழியும் அழைப்பு 38

Pasuram 39 · corpus 2420

Pasuram 39

Study resources at Uveda
அழைப்பன் * திருவேங்கடத்தானைக் காண *
 இழைப்பன் * திருக்கூடல் கூட ** மழைப் பேர்
 அருவி * மணி வரன்றி வந்து இழிய * யானை
 வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு 39

Pasuram 40 · corpus 2421

Pasuram 40

Study resources at Uveda
வெற்பு என்று * வேங்கடம் பாடினேன் * வீடு ஆக்கி
 நிற்கின்றேன் * நின்று நினைக்கின்றேன் ** கற்கின்ற
 நூல் வலையில் பட்டிருந்த * நூலாட்டி கேள்வனார் *
 கால் வலையில் பட்டிருந்தேன் காண் 40

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.