Corpus pasurams 2422–2431

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 41 · corpus 2422

Pasuram 41

Study resources at Uveda
காணல் உறுகின்றேன் * கல் அருவி முத்து உதிர *
 ஓண விழவில் ஒலி அதிர ** பேணி
 வரு வேங்கடவா ! * என் உள்ளம் புகுந்தாய் *
 திருவேங்கடம் அதனைச் சென்று (41)

Pasuram 42 · corpus 2423

Pasuram 42

Study resources at Uveda
சென்று வணங்குமினோ * சேண் உயர் வேங்கடத்தை *
 நின்று வினை கெடுக்கும் நீர்மையால் ** என்றும்
 கடிக் கமல நான்முகனும் * கண் மூன்றத்தானும் *
 அடிக் கமலம் இட்டு ஏத்தும் அங்கு 42

Pasuram 43 · corpus 2424

Pasuram 43

Study resources at Uveda
மங்குல் தோய் சென்னி * வட வேங்கடத்தானை *
 கங்குல் புகுந்தார்கள் * காப்பு அணிவான் ** திங்கள்
 சடை ஏற வைத்தானும் * தாமரை மேலானும் *
 குடை ஏற தாம் குவித்துக் கொண்டு (43)

Pasuram 44 · corpus 2425

Pasuram 44

Study resources at Uveda
கொண்டு குடங்கால் * மேல் வைத்த குழவியாய் *
 தண்ட அரக்கன் தலை தாளால் பண்டு எண்ணி *
 போம் குமரன் நிற்கும் * பொழில் வேங்கட மலைக்கே *
 போம் குமரருள்ளீர்! புரிந்து 44

Pasuram 45 · corpus 2426

Pasuram 45

Study resources at Uveda
புரிந்து மலர் இட்டுப் * புண்டரீகப் பாதம் *
 பரிந்து படுகாடு நிற்ப ** தெரிந்து எங்கும்
 தான் ஓங்கி நிற்கின்றான் * தண் அருவி வேங்கடமே *
 வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு 45

Pasuram 46 · corpus 2427

Pasuram 46

Study resources at Uveda
வைப்பன் மணி விளக்கா * மா மதியை * மாலுக்கு என்று
 எப்பொழுதும் * கை நீட்டும் யானையை ** எப்பாடும்
 வேடு வளைக்கக் * குறவர் வில் எடுக்கும் வேங்கடமே *
 நாடு வளைத்து ஆடுது மேல் நன்று 46

Pasuram 47 · corpus 2428

Pasuram 47

Study resources at Uveda
நன் மணி வண்ணன் ஊர் * ஆளியும் கோளரியும் *
 பொன் மணியும் முத்தமும் பூ மரமும் ** பன்மணி நீ
 ரோடு பொருது உருளும் * கானமும் வானரமும் *
 வேடும் உடை வேங்கடம் (47)

Pasuram 48 · corpus 2429

Pasuram 48

Study resources at Uveda
வேங்கடமே * விண்ணோர் தொழுவதுவும் * மெய்ம்மையால்
 வேங்கடமே * மெய் வினை நோய் தீர்ப்பதுவும் ** வேங்கடமே
 தானவரை வீழத் * தன் ஆழிப் படை தொட்டு *
 வானவரைக் காப்பான் மலை 48

Pasuram 49 · corpus 2430

Pasuram 49

Study resources at Uveda
மலை ஆமைமேல் வைத்து * வாசுகியைச் சுற்றி *
 தலை ஆமை தான் ஒரு கை பற்றி ** அலையாமல்
 பீறக் கடைந்த * பெருமான் திரு நாமம் *
 கூறுவதே யாவர்க்கும் கூற்று (49)

Pasuram 50 · corpus 2431

Pasuram 50

Study resources at Uveda
கூற்றமும் சாரா * கொடு வினையும் சாரா * தீ
 மாற்றமும் சாரா வகை அறிந்தேன் ** ஆற்றங்
 கரைக் கிடக்கும் * கண்ணன் கடல் கிடக்கும் * மாயன்
 உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு 50

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.