Pasuram 51 · corpus 2432
Pasuram 51
எனக்கு ஆவார் ஆர் ஒருவரே? * எம் பெருமான்
தனக்கு ஆவான் * தானே மற்று அல்லால் ** புனக் காயா
வண்ணனே ! * உன்னைப் பிறர் அறியார் * என் மதிக்கு
விண் எல்லாம் உண்டோ விலை 51
Thirumazhisai Azhwar · Reading part · pasurams 51–60
Corpus pasurams 2432–2441
This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 51 · corpus 2432
எனக்கு ஆவார் ஆர் ஒருவரே? * எம் பெருமான்
தனக்கு ஆவான் * தானே மற்று அல்லால் ** புனக் காயா
வண்ணனே ! * உன்னைப் பிறர் அறியார் * என் மதிக்கு
விண் எல்லாம் உண்டோ விலை 51
Pasuram 52 · corpus 2433
விலைக்கு ஆட்படுவர் * விசாதி ஏற்று உண்பர் *
தலைக்கு ஆட்பலி திரிவர் தக்கோர் ** முலைக் கால்
விடம் உண்ட வேந்தனையே * வேறா ஏத்தாதார் *
கடம் உண்டார் கல்லாதவர் (52)
Pasuram 53 · corpus 2434
கல்லாதவர் இலங்கை கட்டழித்த * காகுத்தன்
அல்லால் * ஒரு தெய்வம் யான் இலேன் ** பொல்லாத
தேவரைத் * தேவர் அல்லாரை * திருவு இல்லாத்
தேவரைத் தேறேல்மின் தேவு 53
Pasuram 54 · corpus 2435
தேவராய் * நிற்கும் அத் தேவும் * அத் தேவரில்
மூவராய் நிற்கும் * முது புணர்ப்பும் ** யாவராய்
நிற்கின்றது எல்லாம் * நெடுமால் என்று ஓராதார் *
கற்கின்றது எல்லாம் கடை 54
Pasuram 55 · corpus 2436
கடை நின்று அமரர் கழல் தொழுது * நாளும்
இடைநின்ற * இன்பத்தர் ஆவர் ** புடைநின்ற
நீர் ஓத மேனி * நெடுமாலே ! * நின் அடியை
யார் ஓத வல்லார் அவர்? 55
Pasuram 56 · corpus 2437
அவர் இவர் என்று இல்லை * அனங்க வேள் தாதைக்கு *
எவரும் எதிர் இல்லை கண்டீர் ** உவரிக்
கடல் நஞ்சம் உண்டான் கடன் என்று * வாணற்கு
உடன் நின்று தோற்றான் ஒருங்கு 56
Pasuram 57 · corpus 2438
ஒருங்கு இருந்த நல் வினையும் * தீவினையும் ஆவான் *
பெரும் குருந்தம் சாய்த்தவனே பேசில் ** மருங்கு இருந்த
வானவர் தாம் தானவர் தாம் * தாரகை தான் * என் நெஞ்சம்
ஆனவர் தாம் அல்லாதது என்? 57
Pasuram 58 · corpus 2439
என் நெஞ்சம் மேயான் * இருள் நீக்கி எம்பிரான் *
மன் அஞ்ச முன் ஒருநாள் மண் அளந்தான் ** என் நெஞ்சம்
மேயானை * இல்லா விடை ஏற்றான் * வெவ்வினை தீர்த்து
ஆயானுக்கு ஆக்கினேன் அன்பு 58
Pasuram 59 · corpus 2440
அன்பு ஆவாய் * ஆர் அமுதம் ஆவாய் * அடியேனுக்கு
இன்பு ஆவாய் * எல்லாமும் நீ ஆவாய் ** பொன் பாவை
கேள்வா! * கிளர் ஒளி என் கேசவனே * கேடு இன்றி
ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள் 59
Pasuram 60 · corpus 2441
ஆள் பார்த்து உழிதருவாய் * கண்டுகொள் என்றும் * நின்
தாள் பார்த்து உழி தருவேன் தன்மையை ** கேட்பார்க்கு
அரும் பொருளாய் * நின்ற அரங்கனே! * உன்னை
விரும்புவதே விள்ளேன் மனம் 60
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.