Corpus pasurams 2442–2451

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 61 · corpus 2442

Pasuram 61

Study resources at Uveda
மனக் கேதம் சாரா * மதுசூதன் தன்னை *
 தனக்கே தான் தஞ்சமாக் கொள்ளில் ** எனக்கே தான்
 இன்று ஒன்றி நின்று உலகை * ஏழ் ஆணை ஓட்டினான் *
 சென்று ஒன்றி நின்ற திரு 61

Pasuram 62 · corpus 2443

Pasuram 62

Study resources at Uveda
திரு நின்ற பக்கம் * திறவிது என்று ஓரார் *
 கரு நின்ற கல்லார்க்கு உரைப்பர் ** திருவு இருந்த
 மார்வன் * சிரீதரன் தன் வண்டு உலவு தண் துழாய் *
 தார் தன்னைச் சூடித் தரித்து 62

Pasuram 63 · corpus 2444

Pasuram 63

Study resources at Uveda
தரித்திருந்தேன் ஆகவே * தாரா கணப் போர் *
 விரித்து உரைத்த வெம் நாகத்து உன்னை ** தெரித்து எழுதி
 வாசித்தும் கேட்டும் * வணங்கி வழிபட்டும் *
 பூசித்தும் போக்கினேன் போது 63

Pasuram 64 · corpus 2445

Pasuram 64

Study resources at Uveda
போதான * இட்டு இறைஞ்சி ஏத்துமினோ * பொன் மகரக்
 காதானை * ஆதிப் பெருமானை ** நாதானை
 நல்லானை நாரணனை * நம் ஏழ் பிறப்பு அறுக்கும்
 சொல்லானை * சொல்லுவதே சூது 64

Pasuram 65 · corpus 2446

Pasuram 65

Study resources at Uveda
சூது ஆவது என் நெஞ்சத்து எண்ணினேன் * சொல் மாலை
 மாது ஆய * மாயவனை மாதவனை ** யாதானும்
 வல்லவா * சிந்தித்திருப்பேற்கு * வைகுந்தத்து
 இல்லையோ சொல்லீர் இடம்? 65

Pasuram 66 · corpus 2447

Pasuram 66

Study resources at Uveda
இடம் ஆவது * என் நெஞ்சம் இன்றெல்லாம் * பண்டு
 பட நாகணை * நெடிய மாற்கு ** திடமாக
 வையேன் * மதிசூடி தன்னோடு * அயனை நான்
 வையேன் ஆட் செய்யேன் வலம் (66)

Pasuram 67 · corpus 2448

Pasuram 67

Study resources at Uveda
வலம் ஆக * மாட்டாமை தான் ஆக * வைகல்
 குலம் ஆக * குற்றம் தான் ஆக ** நலம் ஆக
 நாரணனை நா பதியை * ஞானப் பெருமானை *
 சீரணனை ஏத்தும் திறம் 67

Pasuram 68 · corpus 2449

Pasuram 68

Study resources at Uveda
திறம்பேன்மின் கண்டீர் * திருவடி தன் நாமம் *
 மறந்தும் புரம் தொழா மாந்தர் ** இறைஞ்சியும்
 சாதுவராய்ப் * போதுமின்கள் என்றான் * நமனும் தன்
 தூதுவரைக் கூவிச் செவிக்கு (68)

Pasuram 69 · corpus 2450

Pasuram 69

Study resources at Uveda
செவிக்கு இன்பம் ஆவதுவும் * செங்கண் மால் நாமம் *
 புவிக்கும் புவி அதுவே கண்டீர் ** கவிக்கு
 நிறை பொருளாய் * நின்றானை நேர்பட்டேன் * பார்க்கில்
 மறைப் பொருளும் அத்தனையே தான் 69

Pasuram 70 · corpus 2451

Pasuram 70

Study resources at Uveda
தான் ஒருவன் ஆகித் * தரணி இடந்து எடுத்து *
 ஏன் ஒருவனாய் எயிற்றில் தாங்கியதும் ** யான் ஒருவன்
 இன்றா அறிகின்றேன் அல்லேன் * இரு நிலத்தைச்
 சென்று ஆங்கு அடிப்படுத்த சேய் 70

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.