Pasuram 71 · corpus 2452
Pasuram 71
சேயன் அணியன் * சிறியன் மிகப் பெரியன் *
ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன் ** அன்று
ஓதிய * வாக்கு அதனைக் கல்லார் * உலகத்தில்
ஏதிலர் ஆம் மெய்ஞ் ஞானம் இல் (71)
Thirumazhisai Azhwar · Reading part · pasurams 71–80
Corpus pasurams 2452–2461
This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 71 · corpus 2452
சேயன் அணியன் * சிறியன் மிகப் பெரியன் *
ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன் ** அன்று
ஓதிய * வாக்கு அதனைக் கல்லார் * உலகத்தில்
ஏதிலர் ஆம் மெய்ஞ் ஞானம் இல் (71)
Pasuram 72 · corpus 2453
இல்லறம் இல்லேல் * துறவறம் இல் என்னும் *
சொல் அறம் அல்லனவும் சொல் அல்ல ** நல்லறம்
ஆவனவும் * நால் வேத மாத் தவமும் * நாரணனே
ஆவது ஈது அன்று என்பார் ஆர்? (72)
Pasuram 73 · corpus 2454
ஆரே அறிவார்? * அனைத்து உலகும் உண்டு உமிழ்ந்த *
பேர் ஆழியான் தன் பெருமையை ** கார் செறிந்த
கண்டத்தான் * எண் கண்ணான் காணான் * அவன் வைத்த
பண்டைத் தானத்தின் பதி 73
Pasuram 74 · corpus 2455
பதிப் பகைஞர்க்கு ஆற்றாது * பாய் திரை நீர்ப் பாழி *
மதித்து அடைந்த வாள் அரவம் தன்னை ** மதித்து அவன் தன்
வல் ஆகத்து ஏற்றிய * மா மேனி மாயவனை *
அல்லாது ஒன்று ஏத்தாது என் நா 74
Pasuram 75 · corpus 2456
நாக் கொண்டு மானிடம் பாடேன் நலம் ஆகத்
தீக் கொண்ட * செஞ்சடையான் சென்று ** என்றும் பூக் கொண்டு
வல்லவாறு * ஏத்த மகிழாத * வைகுந்தச்
செல்வனார் * சேவடிமேல் பாட்டு 75
Pasuram 76 · corpus 2457
பாட்டும் முறையும் * படு கதையும் பல் பொருளும் *
ஈட்டிய தீயும் இரு விசும்பும் ** கேட்ட
மனுவும் * சுருதி மறை நான்கும் * மாயன்
தன மாயையில் பட்ட தற்பு (76)
Pasuram 77 · corpus 2458
தற்பு என்னைத் * தான் அறியானேலும் * தடங் கடலைக்
கல் கொண்டு தூர்த்த கடல் வண்ணன் ** என் கொண்ட
வெவ்வினையும் நீங்க * விலங்கா மனம் வைத்தான் *
எவ் வினையும் மாயுமால் கண்டு 77
Pasuram 78 · corpus 2459
கண்டு வணங்கினார்க்கு * என்னாம்கொல் ? * காமன் உடல்
கொண்ட * தவத்தாற்கு உமை உணர்த்த ** வண்டு அலம்பும்
தார் அலங்கல் நீள் முடியான் * தன் பெயரே கேட்டிருந்து * அங்கு
ஆர் அலங்கல் ஆனமையால் ஆய்ந்து 78
Pasuram 79 · corpus 2460
ஆய்ந்துகொண்டு * ஆதிப் பெருமானை * அன்பினால்
வாய்ந்த * மனத்து இருத்த வல்லார்கள் ** ஏய்ந்த தம்
மெய் குந்தம் ஆக * விரும்புவரே * தாமும் தம்
வைகுந்தம் காண்பார் விரைந்து 79
Pasuram 80 · corpus 2461
விரைந்து அடைமின் மேல் ஒரு நாள் * வெள்ளம் பரக்க *
கரந்து உலகம் காத்து அளித்த கண்ணன் ** பரந்து உலகம் *
பாடின ஆடின கேட்டு * படு நரகம்
வீடின வாசல் கதவு 80
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.