Corpus pasurams 597–606

This page preserves the source-defined chapter 10 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 94 · corpus 597

Pasuram 94

Study resources at Uveda
கார்க்கோடல் பூக்காள் * கார்க்கடல் வண்ணன் என்மேல் * உம்மைப்
 போர்க் கோலம் செய்து * போர விடுத்தவன் எங்கு உற்றான்? **
 ஆர்க்கோ இனி நாம் * பூசல் இடுவது? * அணி துழாய்த்
 தார்க்கு ஓடும் நெஞ்சந் தன்னைப் * படைக்க வல்லேன் அந்தோ (1)

Pasuram 95 · corpus 598

Pasuram 95

Study resources at Uveda
மேல் தோன்றிப் பூக்காள் * மேல் உலகங்களின் மீது போய் *
 மேல் தோன்றும் சோதி * வேத முதல்வர் வலங்கையில் **
 மேல் தோன்றும் ஆழியின் * வெஞ்சுடர் போலச் சுடாது * எம்மை
 மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து * வைத்துக்கொள்கிற்றிரே? (2)

Pasuram 96 · corpus 599

Pasuram 96

Study resources at Uveda
கோவை மணாட்டி * நீ உன் கொழுங்கனி கொண்டு * எம்மை
 ஆவி தொலைவியேல் * வாயழகர் தம்மை அஞ்சுதும் **
 பாவியேன் தோன்றிப் * பாம்பு அணையார்க்கும் தம் பாம்புபோல் *
 நாவும் இரண்டு உள ஆய்த்து * நாணிலியேனுக்கே (3)

Pasuram 97 · corpus 600

Pasuram 97

Study resources at Uveda
முல்லைப் பிராட்டி * நீ உன் முறுவல்கள் கொண்டு * எம்மை
 அல்லல் விளைவியேல் * ஆழி நங்காய் உன் அடைக்கலம் **
 கொல்லை அரக்கியை மூக்கு அரிந்திட்ட * குமரனார்
 சொல்லும் பொய்யானால் * நானும் பிறந்தமை பொய் அன்றே? (4)

Pasuram 98 · corpus 601

Pasuram 98

Study resources at Uveda
பாடும் குயில்காள் * ஈது என்ன பாடல்? * நல் வேங்கட
 நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் * வந்து பாடுமின் **
 ஆடும் கருளக் கொடி உடையார் * வந்து அருள்செய்து *
 கூடுவார் ஆயிடில் * கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே (5)

Pasuram 99 · corpus 602

Pasuram 99

Study resources at Uveda
கண மா மயில்காள் * கண்ணபிரான் திருக்கோலம் போன்று *
 அணி மா நடம் பயின்று ஆடுகின்றீர்க்கு * அடி வீழ்கின்றேன் **
 பணம் ஆடு அரவணைப் * பற்பல காலமும் பள்ளிகொள் *
 மணவாளர் நம்மை வைத்த * பரிசு இது காண்மினே (6)

Pasuram 100 · corpus 603

Pasuram 100

Study resources at Uveda
நடம் ஆடித் தோகை விரிக்கின்ற * மா மயில்காள் * உம்மை
 நடம் ஆட்டம் காணப் * பாவியேன் நான் ஓர் முதல் இலேன் **
 குடம் ஆடு கூத்தன் * கோவிந்தன் கோமிறை செய்து * எம்மை
 உடை மாடு கொண்டான் * உங்களுக்கு இனி ஒன்று போதுமே? (7)

Pasuram 101 · corpus 604

Pasuram 101

Study resources at Uveda
மழையே! மழையே! * மண் புறம் பூசி உள்ளாய் நின்று *
 மெழுகு ஊற்றினால் போல் * ஊற்று நல் வேங்கடத்து உள் நின்ற **
 அழகப்பிரானார் தம்மை * என் நெஞ்சத்து அகப்படத்
 தழுவ நின்று * என்னைத் ததைத்துக்கொண்டு * ஊற்றவும் வல்லையே? (8)

Pasuram 102 · corpus 605

Pasuram 102

Study resources at Uveda
கடலே! கடலே! உன்னைக் கடைந்து * கலக்கு உறுத்து *
 உடலுள் புகுந்துநின்று * ஊறல் அறுத்தவற்கு ** என்னையும்
 உடலுள் புகுந்துநின்று * ஊறல் அறுக்கின்ற மாயற்கு * என்
 நடலைகள் எல்லாம் * நாகணைக்கே சென்று உரைத்தியே? (9)

Pasuram 103 · corpus 606

Pasuram 103

Study resources at Uveda
நல்ல என் தோழி * நாகணைமிசை நம்பரர் *
 செல்வர் பெரியர் * சிறு மானிடவர் நாம் செய்வதென்? **
 வில்லி புதுவை * விட்டுசித்தர் தங்கள் தேவரை *
 வல்ல பரிசு வருவிப்பரேல் * அது காண்டுமே (10)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.