Corpus pasurams 607–616

This page preserves the source-defined chapter 11 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 104 · corpus 607

Pasuram 104

Study resources at Uveda
தாம் உகக்கும் தம் கையில் * சங்கமே போலாவோ *
 யாம் உகக்கும் எம் கையில் * சங்கமும்? ஏந்திழையீர் **
 தீ முகத்து நாகணைமேல் * சேரும் திருவரங்கர் *
 ஆ முகத்தை நோக்காரால் * அம்மனே அம்மனே (1)

Pasuram 105 · corpus 608

Pasuram 105

Study resources at Uveda
எழில் உடைய அம்மனைமீர் * என் அரங்கத்து இன்னமுதர் *
 குழல் அழகர் வாய் அழகர் * கண் அழகர் கொப்பூழில் **
 எழு கமலப் பூ அழகர் * எம்மானார் * என்னுடைய
 கழல் வளையைத் * தாமும் கழல் வளையே ஆக்கினரே (2)

Pasuram 106 · corpus 609

Pasuram 106

Study resources at Uveda
பொங்கு ஓதம் சூழ்ந்த * புவனியும் விண் உலகும் *
 அங்கு ஆதும் சோராமே * ஆள்கின்ற எம்பெருமான் **
 செங்கோல் உடைய * திருவரங்கச் செல்வனார் *
 எம் கோல் வளையால் * இடர் தீர்வர் ஆகாதே? (3)

Pasuram 107 · corpus 610

Pasuram 107

Study resources at Uveda
மச்சு அணி மாட * மதில் அரங்கர் வாமனனார் *
 பச்சைப் பசுந் தேவர் * தாம் பண்டு நீர் ஏற்ற **
 பிச்சைக் குறையாகி * என்னுடைய பெய்வளை மேல் *
 இச்சை உடையரேல் * இத் தெருவே போதாரே? (4)

Pasuram 108 · corpus 611

Pasuram 108

Study resources at Uveda
பொல்லாக் குறள் உருவாய்ப் * பொன் கையில் நீர் ஏற்று *
 எல்லா உலகும் * அளந்து கொண்ட எம்பெருமான் **
 நல்லார்கள் வாழும் * நளிர் அரங்க நாகணையான் *
 இல்லாதோம் கைப்பொருளும் * எய்துவான் ஒத்து உளனே (5)

Pasuram 109 · corpus 612

Pasuram 109

Study resources at Uveda
கைப் பொருள்கள் முன்னமே * கைக்கொண்டார் * காவிரி நீர்
 செய்ப் புரள ஓடும் * திருவரங்கச் செல்வனார் **
 எப் பொருட்கும் நின்று ஆர்க்கும் * எய்தாது * நான் மறையின்
 சொற்பொருளாய் நின்றார் * என் மெய்ப்பொருளும் கொண்டாரே (6)

Pasuram 110 · corpus 613

Pasuram 110

Study resources at Uveda
உண்ணாது உறங்காது * ஒலிகடலை ஊடறுத்து *
 பெண் ஆக்கை யாப்புண்டு * தாம் உற்ற பேது எல்லாம் **
 திண்ணார் மதிள் சூழ் * திருவரங்கச் செல்வனார் *
 எண்ணாதே தம்முடைய * நன்மைகளே எண்ணுவரே (7)

Pasuram 111 · corpus 614

Pasuram 111

Study resources at Uveda
பாசி தூர்த்தக் கிடந்த * பார் மகட்கு * பண்டு ஒரு நாள்
 மாசு உடம்பில் நீர் வாரா * மானம் இலாப் பன்றி ஆம் **
 தேசு உடைய தேவர் * திருவரங்கச் செல்வனார் *
 பேசி இருப்பனகள் * பேர்க்கவும் பேராவே (8)

Pasuram 112 · corpus 615

Pasuram 112

Study resources at Uveda
கண்ணாலம் கோடித்துக் * கன்னி தன்னைக் கைப்பிடிப்பான் *
 திண் ஆர்ந்து இருந்த * சிசுபாலன் தேசு அழிந்து **
 அண்ணாந்து இருக்கவே * ஆங்கு அவளைக் கைப்பிடித்த *
 பெண்ணாளன் பேணும் ஊர் * பேரும் அரங்கமே (9)

Pasuram 113 · corpus 616

Pasuram 113

Study resources at Uveda
செம்மை உடைய * திருவரங்கர் தாம் பணித்த *
 மெய்ம்மைப் பெரு வார்த்தை * விட்டுசித்தர் கேட்டிருப்பர் **
 தம்மை உகப்பாரைத் * தாம் உகப்பர் என்னும் சொல் *
 தம்மிடையே பொய்யானால் * சாதிப்பார் ஆர் இனியே? (10)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.