Pasuram 84 · corpus 587
Pasuram 84
சிந்துரச் செம்பொடிப் போல் * திருமாலிருஞ்சோலை எங்கும் *
இந்திர கோபங்களே * எழுந்தும் பரந்திட்டனவால் **
மந்தரம் நாட்டி அன்று * மதுரக் கொழுஞ்சாறு கொண்ட *
சுந்தரத் தோளுடையான் * சுழலையில் நின்று உய்துங்கொலோ? (1)
Andal · Pasurams 84–93
Corpus pasurams 587–596
This page preserves the source-defined chapter 9 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 84 · corpus 587
சிந்துரச் செம்பொடிப் போல் * திருமாலிருஞ்சோலை எங்கும் *
இந்திர கோபங்களே * எழுந்தும் பரந்திட்டனவால் **
மந்தரம் நாட்டி அன்று * மதுரக் கொழுஞ்சாறு கொண்ட *
சுந்தரத் தோளுடையான் * சுழலையில் நின்று உய்துங்கொலோ? (1)
Pasuram 85 · corpus 588
போர்க்களிறு பொரும் * மாலிருஞ்சோலை அம் பூம்புறவில் *
தார்க்கொடி முல்லைகளும் * தவள நகை காட்டுகின்ற **
கார்க்கொள் பிடாக்கள் நின்று * கழறிச் சிரிக்கத் தரியேன் *
ஆர்க்கு இடுகோ? தோழீ * அவன் தார் செய்த பூசலையே (2)
Pasuram 86 · corpus 589
கருவிளை ஒண்மலர்காள் * காயா மலர்காள் * திருமால்
உரு ஒளி காட்டுகின்றீர் * எனக்கு உய் வழக்கு ஒன்று உரையீர் **
திரு விளையாடு திண் தோள் * திருமாலிருஞ்சோலை நம்பி *
வரிவளை இல் புகுந்து * வந்திபற்றும் வழக்கு உளதே? (3)
Pasuram 87 · corpus 590
பைம்பொழில் வாழ் குயில்காள் மயில்காள் * ஒண் கருவிளைகாள் *
வம்பக் களங்கனிகாள் * வண்ணப் பூவை நறுமலர்காள் **
ஐம் பெரும் பாதகர்காள் * அணி மாலிருஞ்சோலை நின்ற *
எம்பெருமானுடைய நிறம் * உங்களுக்கு என் செய்வதே? (4)
Pasuram 88 · corpus 591
துங்க மலர்ப் பொழில் சூழ் * திருமாலிருஞ்சோலை நின்ற *
செங்கண் கருமுகிலின் * திருவுருப் போல் ** மலர்மேல்
தொங்கிய வண்டினங்காள் * தொகு பூஞ்சுனைகாள் * சுனையில்
தங்கு செந்தாமரைகாள் * எனக்கு ஓர் சரண் சாற்றுமினே (5)
Pasuram 89 · corpus 592
நாறு நறும் பொழில் * மாலிருஞ்சோலை நம்பிக்கு * நான்
நூறு தடாவில் வெண்ணெய் * வாய்நேர்ந்து பராவி வைத்தேன் **
நூறு தடா நிறைந்த * அக்கார அடிசில் சொன்னேன் *
ஏறு திருவுடையான் * இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ? (6)
Pasuram 90 · corpus 593
இன்று வந்து இத்தனையும் * அமுது செய்திடப் பெறில் * நான்
ஒன்று நூறாயிரமாக் கொடுத்துப் * பின்னும் ஆளும் செய்வன் **
தென்றல் மணம் கமழும் * திருமாலிருஞ்சோலை தன்னுள்
நின்றபிரான் * அடியேன் மனத்தே வந்து நேர்படிலே (7)
Pasuram 91 · corpus 594
காலை எழுந்திருந்து * கரிய குருவிக் கணங்கள் *
மாலின் வரவு சொல்லி * மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ? **
சோலைமலைப் பெருமான் * துவாராபதி எம்பெருமான் *
ஆலின் இலைப் பெருமான் * அவன் வார்த்தை உரைக்கின்றதே (8)
Pasuram 92 · corpus 595
கோங்கு அலரும் பொழில் * மாலிருஞ்சோலையில் கொன்றைகள்மேல் *
தூங்கு பொன் மாலைகளோடு * உடனாய் நின்று தூங்குகின்றேன் **
பூங்கொள் திருமுகத்து * மடுத்து ஊதிய சங்கு ஒலியும் *
சார்ங்க வில் நாண் ஒலியும் * தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ? (9)
Pasuram 93 · corpus 596
சந்தொடு காரகிலும் சுமந்து * தடங்கள் பொருது *
வந்திழியும் சிலம்பாறு உடை * மாலிருஞ்சோலை நின்ற **
சுந்தரனைச் சுரும்பு ஆர் குழல் * கோதை தொகுத்து உரைத்த *
செந்தமிழ் பத்தும் வல்லார் * திருமாலடி சேர்வர்களே (10)
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.