This page preserves the source-defined chapter 12 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
மற்று இருந்தீர்கட்கு அறியலாகா *
மாதவன் என்பது ஓர் அன்பு தன்னை *
உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம் *
ஊமையரோடு செவிடர் வார்த்தை **
பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப் *
பேர்த்து ஒரு தாய் இல் வளர்ந்த நம்பி *
மற்பொருந்தாமல் களம் அடைந்த *
மதுரைப் புறத்து என்னை உய்த்திடுமின் (1)
நாணி இனி ஓர் கருமம் இல்லை *
நால் அயலாரும் அறிந்தொழிந்தார் *
பாணியாது என்னை மருந்து செய்து *
பண்டு பண்டு ஆக்க உறுதிராகில் **
மாணி உருவாய் உலகு அளந்த *
மாயனைக் காணில் தலைமறியும் *
ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில் *
ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின் (2)
அங்கைத் தலத்திடை ஆழி கொண்டான் *
அவன் முகத்து அன்றி விழியேன் என்று *
செங்கச்சுக் கொண்டு கண் ஆடை ஆர்த்துச் *
சிறு மானிடவரைக் காணில் நாணும் **
கொங்கைத்தலம் இவை நோக்கிக் காணீர் *
கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா *
இங்குத்தை வாழ்வை ஒழியவே போய் *
யமுனைக் கரைக்கு என்னை உய்த்திடுமின் (4)
ஆர்க்கும் என் நோய் இது அறியலாகாது *
அம்மனைமீர் துழதிப் படாதே *
கார்க்கடல் வண்ணன் என்பான் ஒருவன் *
கைகண்ட யோகம் தடவத் தீரும் **
நீர்க் கரை நின்ற கடம்பை ஏறிக் *
காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து *
போர்க்களமாக நிருத்தம் செய்த *
பொய்கைக் கரைக்கு என்னை உய்த்திடுமின் (5)
வண்ணம் திரிவும் மனம்-குழைவும் *
மானம் இலாமையும் வாய்வெளுப்பும் *
உண்ண லுறாமையும் உள்மெலிவும் *
ஓத நீர் வண்ணன் என்பான் ஒருவன் **
தண்ணந் துழாய் என்னும் மாலை கொண்டு *
சூட்டத் தணியும் பிலம்பன் தன்னைப் *
பண் அழியப் பலதேவன் வென்ற *
பாண்டிவடத்து என்னை உய்த்திடுமின் (7)
கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப் பெற்றான் *
காடு வாழ் சாதியும் ஆகப் பெற்றான் *
பற்றி உரலிடை யாப்பும் உண்டான் *
பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கொலோ? **
கற்றன பேசி வசவு உணாதே *
காலிகள் உய்ய மழை தடுத்து *
கொற்றக் குடையாக ஏந்தி நின்ற *
கோவர்த்தனத்து என்னை உய்த்திடுமின் (8)
கூட்டில் இருந்து கிளி எப்போதும் *
கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும் *
ஊட்டக் கொடாது செறுப்பனாகில் *
உலகு அளந்தான் என்று உயரக் கூவும் **
நாட்டில் தலைப்பழி எய்தி *
உங்கள் நன்மை இழந்து தலையிடாதே *
சூட்டு உயர் மாடங்கள் சூழ்ந்துதோன்றும் *
துவராபதிக்கு என்னை உய்த்திடுமின் (9)