Corpus pasurams 524–533

This page preserves the source-defined chapter 3 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 21 · corpus 524

Pasuram 21

Study resources at Uveda
கோழி அழைப்பதன் முன்னம் * குடைந்து நீராடுவான் போந்தோம் *
 ஆழியஞ் செல்வன் எழுந்தான் * அரவு அணைமேல் பள்ளி கொண்டாய் **
 ஏழைமை ஆற்றவும் பட்டோம் * இனி என்றும் பொய்கைக்கு வாரோம் *
 தோழியும் நானும் தொழுதோம் * துகிலைப் பணித்தருளாயே (1)

Pasuram 22 · corpus 525

Pasuram 22

Study resources at Uveda
இது என் புகுந்தது இங்கு? அந்தோ! * இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்? *
 மதுவின் துழாய் முடி மாலே! * மாயனே எங்கள் அமுதே *
 விதி இன்மையால் அது மாட்டோம் * வித்தகப் பிள்ளாய்! விரையேல் *
 குதிகொண்டு அரவில் நடித்தாய் * குருந்திடைக் கூறை பணியாய் (2)

Pasuram 23 · corpus 526

Pasuram 23

Study resources at Uveda
எல்லே ஈது என்ன இளமை? * எம் அனைமார் காணில் ஒட்டார் *
 பொல்லாங்கு ஈது என்று கருதாய் * பூங்குருந்து ஏறி இருத்தி **
 வில்லால் இலங்கை அழித்தாய் * நீ வேண்டியது எல்லாம் தருவோம் *
 பல்லாரும் காணாமே போவோம் * பட்டைப் பணித்தருளாயே (3)

Pasuram 24 · corpus 527

Pasuram 24

Study resources at Uveda
பரக்க விழித்து எங்கும் நோக்கிப் * பலர் குடைந்து ஆடும் சுனையில் *
 அரக்க நில்லா கண்ண நீர்கள் * அலமருகின்றவா பாராய் **
 இரக்கமேல் ஒன்றும் இலாதாய்! * இலங்கை அழித்த பிரானே *
 குரக்கு அரசு ஆவது அறிந்தோம் * குருந்திடைக் கூறை பணியாய் (4) **

Pasuram 25 · corpus 528

Pasuram 25

Study resources at Uveda
காலைக் கதுவிடுகின்ற * கயலொடு வாளை விரவி *
 வேலைப் பிடித்து என்னைமார்கள் ஓட்டில் * என்ன விளையாட்டோ? **
 கோலச் சிற்றாடை பலவும் கொண்டு * நீ ஏறியிராதே *
 கோலம் கரிய பிரானே * குருந்திடைக் கூறை பணியாய் (5)

Pasuram 26 · corpus 529

Pasuram 26

Study resources at Uveda
தடத்து அவிழ் தாமரைப் பொய்கைத் * தாள்கள் எம் காலைக் கதுவ *
 விடத் தேள் எறிந்தாலே போல * வேதனை ஆற்றவும் பட்டோம் **
 குடத்தை எடுத்து ஏறவிட்டுக் * கூத்தாட வல்ல எம் கோவே ! *
 படிற்றை எல்லாம் தவிர்ந்து * எங்கள் பட்டைப் பணித்தருளாயே (6)

Pasuram 27 · corpus 530

Pasuram 27

Study resources at Uveda
நீரிலே நின்று அயர்க்கின்றோம் * நீதி அல்லாதன செய்தாய் *
 ஊரகம் சாலவும் சேய்த்தால் * ஊழி எல்லாம் உணர்வானே **
 ஆர்வம் உனக்கே உடையோம் * அம்மனைமார் காணில் ஒட்டார் *
 போர விடாய் எங்கள் பட்டைப் * பூங்குருந்து ஏறியிராதே (7)

Pasuram 28 · corpus 531

Pasuram 28

Study resources at Uveda
மாமிமார் மக்களே அல்லோம் * மற்றும் இங்கு எல்லாரும் போந்தார் *
 தூமலர்க் கண்கள் வளரத் * தொல்லை இராத் துயில்வானே **
 சேமமேல் அன்று இது சால * சிக்கென நாம் இது சொன்னோம் *
 கோமள ஆயர் கொழுந்தே ! * குருந்திடைக் கூறை பணியாய் (8)

Pasuram 29 · corpus 532

Pasuram 29

Study resources at Uveda
கஞ்சன் வலைவைத்த அன்று * காரிருள் எல்லில் பிழைத்து *
 நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய் * நின்ற இக் கன்னியரோமை **
 அஞ்ச உரப்பாள் அசோதை * ஆணாட விட்டிட்டு இருக்கும் *
 வஞ்சகப் பேய்ச்சிபால் உண்ட * மசிமையிலீ ! கூறை தாராய் (9)

Pasuram 30 · corpus 533

Pasuram 30

Study resources at Uveda
கன்னியரோடு எங்கள் நம்பி * கரிய பிரான் விளையாட்டை *
 பொன் இயல் மாடங்கள் சூழ்ந்த * புதுவையர்கோன் பட்டன் கோதை **
 இன்னிசையால் சொன்ன மாலை * ஈரைந்தும் வல்லவர் தாம் போய் *
 மன்னிய மாதவனோடு * வைகுந்தம் புக்கு இருப்பாரே (10)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.