Corpus pasurams 534–544

This page preserves the source-defined chapter 4 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 31 · corpus 534

Pasuram 31

Study resources at Uveda
தெள்ளியார் * பலர் கைதொழும் தேவனார் *
 வள்ளல் * மாலிருஞ்சோலை மணாளனார் **
 பள்ளி கொள்ளும் இடத்து * அடி கொட்டிட *
 கொள்ளுமாகில் * நீ கூடிடு கூடலே (1)

Pasuram 32 · corpus 535

Pasuram 32

Study resources at Uveda
காட்டில் வேங்கடம் * கண்ணபுர நகர் *
 வாட்டம் இன்றி * மகிழ்ந்து உறை வாமனன் **
 ஓட்டரா வந்து * என் கைப் பற்றி தன்னொடும் *
 கூட்டு மாகில் * நீ கூடிடு கூடலே (2)

Pasuram 33 · corpus 536

Pasuram 33

Study resources at Uveda
பூ மகன் புகழ் வானவர் * போற்றுதற்கு
 ஆமகன் அணி வாணுதல் * தேவகி
 மா மகன் ** மிகு சீர் வசுதேவர்தம் *
 கோமகன் வரில் * கூடிடு கூடலே (3)

Pasuram 34 · corpus 537

Pasuram 34

Study resources at Uveda
ஆய்ச்சிமார்களும் * ஆயரும் அஞ்சிட *
 பூத்த நீள் * கடம்பு ஏறிப் புகப் பாய்ந்து **
 வாய்த்த காளியன்மேல் * நடம் ஆடிய *
 கூத்தனார் வரில் * கூடிடு கூடலே (4)

Pasuram 35 · corpus 538

Pasuram 35

Study resources at Uveda
மாட மாளிகை சூழ் * மதுரைப் பதி
 நாடி * நம் தெருவின் நடுவே வந்திட்டு **
 ஓடை மா * மத யானை உதைத்தவன் *
 கூடுமாகில் * நீ கூடிடு கூடலே (5)

Pasuram 36 · corpus 539

Pasuram 36

Study resources at Uveda
அற்றவன் * மருதம் முறிய நடை
 கற்றவன் * கஞ்சனை * வஞ்சனையிற்
 செற்றவன் ** திகழும் மதுரைப் பதி *
 கொற்றவன் வரில் * கூடிடு கூடலே (6)

Pasuram 37 · corpus 540

Pasuram 37

Study resources at Uveda
அன்று இன்னாதன செய் * சிசுபாலனும் *
 நின்ற நீள் * மருதும் எருதும் புள்ளும் **
 வென்றி வேல் * விறல் கஞ்சனும் வீழ * முன்
 கொன்றவன் வரில் * கூடிடு கூடலே (7)

Pasuram 38 · corpus 541

Pasuram 38

Study resources at Uveda
ஆவல் அன்பு உடையார் தம் * மனத்து அன்றி
 மேவலன் * விரை சூழ் * துவராபதிக்
 காவலன் ** கன்று மேய்த்து விளையாடும் *
 கோவலன் வரில் * கூடிடு கூடலே (8)

Pasuram 39 · corpus 542

Pasuram 39

Study resources at Uveda
கொண்ட கோலக் * குறள் உருவாய்ச் சென்று *
 பண்டு மாவலிதன் * பெரு வேள்வியில் **
 அண்டமும் நிலனும் * அடி ஒன்றினால் *
 கொண்டவன் வரில் * கூடிடு கூடலே (9)

Pasuram 40 · corpus 543

Pasuram 40

Study resources at Uveda
பழகு நான்மறையின் பொருளாய் * மதம்
 ஒழுகு வாரணம் * உய்ய அளித்த ** எம்
 அழகனார் * அணி ஆய்ச்சியர் சிந்தையுள் *
 குழகனார் வரில் * கூடிடு கூடலே (10)

Pasuram 41 · corpus 544

Pasuram 41

Study resources at Uveda
ஊடல் கூடல் * உணர்தல் புணர்தலை *
 நீடு நின்ற * நிறை புகழ் ஆய்ச்சியர் **
 கூடலைக் * குழல் கோதை முன் கூறிய *
 பாடல் பத்தும் வல்லார்க்கு * இல்லை பாவமே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.