Corpus pasurams 545–555

This page preserves the source-defined chapter 5 grouping and brings its 11 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 42 · corpus 545

Pasuram 42

Study resources at Uveda
மன்னு பெரும்புகழ் மாதவன் * மா மணி
 வண்ணன் மணி முடி மைந்தன்
 தன்னை * உகந்தது காரணமாக * என்
 சங்கு இழக்கும் வழக்கு உண்டே? **
 புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப் *
 பொதும்பினில் வாழும் குயிலே! *
 பன்னி எப்போதும் இருந்து விரைந்து * என்
 பவள வாயன் வரக் கூவாய் (1)

Pasuram 43 · corpus 546

Pasuram 43

Study resources at Uveda
வெள்ளை விளிசங்கு இடங்கையில் கொண்ட *
விமலன் எனக்கு உருக் காட்டான் *
 உள்ளம் புகுந்து என்னை நைவித்து * நாளும்
உயிர்ப்பெய்து கூத்தாட்டுக் காணும் **
 கள் அவிழ் செண்பகப்பூ மலர் கோதிக் *
களித்து இசை பாடும் குயிலே ! *
 மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது * என்
வேங்கடவன் வரக் கூவாய் (2)

Pasuram 44 · corpus 547

Pasuram 44

Study resources at Uveda
மாதலி தேர் முன்பு கோல்கொள்ள * மாயன்
இராவணன் மேல் * சர மாரி
 தாய் தலை அற்று அற்று வீழத் * தொடுத்த
தலைவன் வர எங்கும் காணேன் **
 போது அலர் காவில் புதுமணம் நாறப் *
பொறி வண்டின் காமரம் கேட்டு * உன்
 காதலியோடு உடன் வாழ் குயிலே ! * என்
கருமாணிக்கம் வரக் கூவாய் (3)

Pasuram 45 · corpus 548

Pasuram 45

Study resources at Uveda
என்பு உருகி இன வேல் நெடுங் கண்கள் *
இமை பொருந்தா பல நாளும் *
 துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பது * ஓர்
தோணி பெறாது உழல்கின்றேன் **
 அன்பு உடையாரைப் பிரிவு உறு நோயது
நீயும் அறிதி குயிலே *
 பொன் புரை மேனிக் கருளக் கொடி உடைப் *
புண்ணியனை வரக் கூவாய் (4)

Pasuram 46 · corpus 549

Pasuram 46

Study resources at Uveda
* மென்னடை அன்னம் பரந்து விளையாடும் *
வில்லிபுத்தூர் உறைவான் தன் *
 பொன்னடி காண்பது ஓர் ஆசையினால் * என்
பொரு கயல் கண்ணினை துஞ்சா **
 இன் அடிசிலொடு பால் அமுது ஊட்டி *
எடுத்த என் கோலக் கிளியை *
 உன்னொடு தோழமைக் கொள்ளுவன் குயிலே ! *
உலகு அளந்தான் வரக் கூவாய் (5)

Pasuram 47 · corpus 550

Pasuram 47

Study resources at Uveda
எத் திசையும் அமரர் பணிந்து ஏத்தும் *
இருடீகேசன் வலி செய்ய *
 முத்து அன்ன வெண் முறுவல் செய்ய வாயும் *
முலையும் அழகு அழிந்தேன் நான் **
 கொத்து அலர் காவில் மணித்தடம் * கண்படை
கொள்ளும் இளங் குயிலே! * என்
 தத்துவனை வரக் கூகிற்றியாகில் *
தலை அல்லால் கைம்மாறு இலேனே (6)

Pasuram 48 · corpus 551

Pasuram 48

Study resources at Uveda
பொங்கிய பாற்கடல் பள்ளிகொள்வானைப் *
புணர்வது ஓர் ஆசையினால் * என்
 கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து *
ஆவியை ஆகுலம் செய்யும்
 அம் குயிலே ** உனக்கு என்ன மறைந்து உறைவு? *
ஆழியும் சங்கும் ஒண் தண்டும் *
 தங்கிய கையவனை வரக் கூவில் * நீ
சாலத் தருமம் பெறுதி (7)

Pasuram 49 · corpus 552

Pasuram 49

Study resources at Uveda
சார்ங்கம் வளைய வலிக்கும் * தடக்கைச்
சதுரன் பொருத்தம் உடையன் *
 நாங்கள் எம் இல்லிருந்து ஒட்டிய கச்சங்கம் *
நானும் அவனும் அறிதும் **
 தேம் கனி மாம் பொழில் செந்தளிர் கோதும் *
சிறு குயிலே! * திருமாலை
 ஆங்கு விரைந்து ஒல்லைக் கூகிற்றியாகில் *
அவனை நான் செய்வன காணே (8)

Pasuram 50 · corpus 553

Pasuram 50

Study resources at Uveda
பைங்கிளி வண்ணன் சிரீதரன் என்பது ஓர் *
பாசத்து அகப்பட்டிருந்தேன் *
 பொங்கு ஒளி வண்டு இரைக்கும் பொழில் வாழ் குயிலே! *
குறிக்கொண்டு இது நீ கேள் **
 சங்கொடு சக்கரத்தான் வரக் கூவுதல் *
பொன்வளை கொண்டு தருதல் *
 இங்கு உள்ள காவினில் வாழக் கருதில் *
இரண்டத்து ஒன்றேல் திண்ணம் வேண்டும் (9)

Pasuram 51 · corpus 554

Pasuram 51

Study resources at Uveda
அன்று உலகம் அளந்தானை உகந்து *
 அடிமைக்கண் அவன் வலி செய்ய *
 தென்றலும் திங்களும் ஊடறுத்து * என்னை
 நலியும் முறைமை அறியேன் **
 என்றும் இக் காவில் இருந்திருந்து * என்னைத்
 ததர்த்தாதே நீயும் குயிலே *
 இன்று நாராயணனை வரக் கூவாயேல் *
 இங்குற்று நின்றும் துரப்பன் (10)

Pasuram 52 · corpus 555

Pasuram 52

Study resources at Uveda
விண் உற நீண்டு அடி தாவிய மைந்தனை *
வேற்கண் மடந்தை விரும்பி *
 கண்ணுற என் கடல் வண்ணனைக் * கூவு
கருங்குயிலே ! என்ற மாற்றம் **
 பண் உறு நான்மறையோர் புதுவைமன்னன் *
பட்டர்பிரான் கோதை சொன்ன *
 நண் உறு வாசக மாலை வல்லார் * நமோ
நாராயணாய என்பாரே (11)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.