Corpus pasurams 567–576

This page preserves the source-defined chapter 7 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 64 · corpus 567

Pasuram 64

Study resources at Uveda
கருப்பூரம் நாறுமோ? * கமலப் பூ நாறுமோ? *
 திருப் பவளச் செவ்வாய்தான் * தித்தித்திருக்குமோ? **
 மருப்பு ஒசித்த மாதவன் தன் * வாய்ச்சுவையும் நாற்றமும் *
 விருப்புற்றுக் கேட்கின்றேன் * சொல் ஆழி வெண்சங்கே (1)

Pasuram 65 · corpus 568

Pasuram 65

Study resources at Uveda
கடலிற் பிறந்து கருதாது * பஞ்சசனன்
 உடலில் வளர்ந்துபோய் * ஊழியான் கைத்தலத்து
 திடரில் ** குடியேறி * தீய அசுரர் *
 நடலைப் பட முழங்கும் * தோற்றத்தாய் நற் சங்கே (2)

Pasuram 66 · corpus 569

Pasuram 66

Study resources at Uveda
தட வரையின் மீதே * சரற்கால சந்திரன் *
 இடை உவாவில் வந்து * எழுந்தாலே போல நீயும் **
 வட மதுரையார் மன்னன் * வாசுதேவன் கையில் *
 குடியேறி வீற்றிருந்தாய் * கோலப் பெருஞ் சங்கே (3)

Pasuram 67 · corpus 570

Pasuram 67

Study resources at Uveda
சந்திர மண்டலம் போல் * தாமோதரன் கையில் *
 அந்தரம் ஒன்று இன்றி * ஏறி அவன் செவியில் **
 மந்திரம் கொள்வாயே போலும் * வலம்புரியே ! *
 இந்திரனும் உன்னோடு * செல்வத்துக்கு ஏலானே (4)

Pasuram 68 · corpus 571

Pasuram 68

Study resources at Uveda
உன்னோடு உடனே * ஒரு கடலில் வாழ்வாரை *
 இன்னார் இனையார் என்று * எண்ணுவார் இல்லை காண் **
 மன் ஆகி நின்ற * மதுசூதன் வாயமுதம் *
 பன்னாளும் உண்கின்றாய் * பாஞ்சசன்னியமே (5)

Pasuram 69 · corpus 572

Pasuram 69

Study resources at Uveda
போய்த் தீர்த்தம் ஆடாதே * நின்ற புணர் மருதம் *
 சாய்த்து ஈர்த்தான் கைத்தலத்தே * ஏறிக் குடிகொண்டு **
 சேய்த் தீர்த்தமாய் நின்ற * செங்கண் மால்தன்னுடைய *
 வாய்த் தீர்த்தம் பாய்ந்து ஆட வல்லாய் * வலம்புரியே (6)

Pasuram 70 · corpus 573

Pasuram 70

Study resources at Uveda
செங்கமல நாள் மலர்மேல் * தேன் நுகரும் அன்னம் போல் *
 செங்கண் கருமேனி * வாசுதேவனுடைய **
 அங்கைத் தலம் ஏறி * அன்ன வசஞ் செய்யும் *
 சங்கு அரையா உன் செல்வம் * சால அழகியதே (7)

Pasuram 71 · corpus 574

Pasuram 71

Study resources at Uveda
உண்பது சொல்லில் * உலகு அளந்தான் வாயமுதம் *
 கண்படை கொள்ளில் * கடல்வண்ணன் கைத்தலத்தே **
 பெண் படையார் உன் மேல் * பெரும் பூசல் சாற்றுகின்றார் *
 பண் பல செய்கின்றாய் * பாஞ்சசன்னியமே (8)

Pasuram 72 · corpus 575

Pasuram 72

Study resources at Uveda
பதினாறாம் ஆயிரவர் * தேவிமார் பார்த்திருப்ப *
 மது வாயிற் கொண்டாற்போல் * மாதவன் தன் வாயமுதம் **
 பொதுவாக உண்பதனைப் * புக்கு நீ உண்டக்கால் *
 சிதையாரோ? உன்னோடு * செல்வப் பெருஞ்சங்கே (9)

Pasuram 73 · corpus 576

Pasuram 73

Study resources at Uveda
பாஞ்சசன்னியத்தைப் * பற்பநாபனோடும் *
 வாய்ந்த பெருஞ் சுற்றம் * ஆக்கிய வண்புதுவை **
 ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் * கோதை தமிழ் ஈரைந்தும் *
 ஆய்ந்து ஏத்த வல்லார் * அவரும் அணுக்கரே (10)

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.