Pasuram 74 · corpus 577
Pasuram 74
விண் நீல மேலாப்பு * விரித்தாற்போல் மேகங்காள் ! *
தெண் நீர் பாய் வேங்கடத்து * என் திருமாலும் போந்தானே? **
கண்ணீர்கள் முலைக்குவட்டில் * துளி சோரச் சோர்வேனை *
பெண் நீர்மை ஈடழிக்கும் * இது தமக்கு ஓர் பெருமையே? (1)
Andal · Pasurams 74–83
Corpus pasurams 577–586
This page preserves the source-defined chapter 8 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 74 · corpus 577
விண் நீல மேலாப்பு * விரித்தாற்போல் மேகங்காள் ! *
தெண் நீர் பாய் வேங்கடத்து * என் திருமாலும் போந்தானே? **
கண்ணீர்கள் முலைக்குவட்டில் * துளி சோரச் சோர்வேனை *
பெண் நீர்மை ஈடழிக்கும் * இது தமக்கு ஓர் பெருமையே? (1)
Pasuram 75 · corpus 578
மா முத்தநிதி சொரியும் * மா முகில்காள் ! * வேங்கடத்துச்
சாமத்தின் நிறங்கொண்ட * தாளாளன் வார்த்தை என்னே? **
காமத்தீ உள்புகுந்து * கதுவப்பட்டு இடைக் கங்குல் *
ஏமத்து ஓர் தென்றலுக்கு * இங்கு இலக்காய் நான் இருப்பேனே? (2)
Pasuram 76 · corpus 579
ஒளி வண்ணம் வளை சிந்தை * உறக்கத்தோடு இவை எல்லாம் *
எளிமையால் இட்டு என்னை * ஈடழியப் போயினவால் **
குளிர் அருவி வேங்கடத்து * என் கோவிந்தன் குணம் பாடி *
அளியத்த மேகங்காள் * ஆவி காத்து இருப்பேனே? (3)
Pasuram 77 · corpus 580
மின் ஆகத்து எழுகின்ற * மேகங்காள் ! * வேங்கடத்துத்
தன் ஆகத் திருமங்கை * தங்கிய சீர் மார்வற்கு **
என் ஆகத்து இளங்கொங்கை * விரும்பித் தாம் நாள்தோறும் *
பொன் ஆகம் புல்குதற்கு * என் புரிவுடைமை செப்புமினே (4)
Pasuram 78 · corpus 581
வான் கொண்டு கிளர்ந்து எழுந்த * மா முகில்காள் ! * வேங்கடத்துத்
தேன் கொண்ட மலர் சிதறத் * திரண்டு ஏறிப் பொழிவீர்காள் **
ஊன் கொண்ட வள் உகிரால் * இரணியனை உடல் இடந்தான் *
தான் கொண்ட சரி வளைகள் * தருமாகில் சாற்றுமினே (5)
Pasuram 79 · corpus 582
சலங் கொண்டு கிளர்ந்து எழுந்த * தண் முகில்காள் ! * மாவலியை
நிலங் கொண்டான் வேங்கடத்தே * நிரந்து ஏறிப் பொழிவீர்காள் ! **
உலங்கு உண்ட விளங்கனி போல் * உள் மெலியப் புகுந்து * என்னை
நலங் கொண்ட நாரணற்கு * என் நடலை நோய் செப்புமினே (6)
Pasuram 80 · corpus 583
சங்க மா கடல் கடைந்தான் * தண் முகில்காள்! * வேங்கடத்துச்
செங்கண் மால் சேவடிக் கீழ் * அடி வீழ்ச்சி விண்ணப்பம் **
கொங்கை மேல் குங்குமத்தின் * குழம்பு அழியப் புகுந்து * ஒருநாள்
தங்குமேல் * என் ஆவி தங்கும் என்று உரையீரே (7)
Pasuram 81 · corpus 584
கார் காலத்து எழுகின்ற * கார்முகில்காள் ! * வேங்கடத்துப்
போர் காலத்து எழுந்தருளிப் * பொருதவனார் பேர் சொல்லி **
நீர் காலத்து எருக்கின் * அம் பழ இலை போல் வீழ்வேனை *
வார் காலத்து ஒருநாள் * தம் வாசகம் தந்தருளாரே (8)
Pasuram 82 · corpus 585
மத யானை போல் எழுந்த * மா முகில்காள் * வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள் * பாம்பு அணையான் வார்த்தை என்னே ! **
கதி என்றும் தான் ஆவான் * கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல் * வையகத்தார் மதியாரே? (9)
Pasuram 83 · corpus 586
நாகத்தின் அணையானை * நன்னுதலாள் நயந்து உரை செய் *
மேகத்தை வேங்கடக்கோன் * விடு தூதில் விண்ணப்பம் **
போகத்தில் வழுவாத * புதுவையர்கோன் கோதை தமிழ் *
ஆகத்து வைத்து உரைப்பார் * அவர் அடியார் ஆகுவரே (10)
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.