Pasuram 5 · corpus 2717
Pasuram 5
தன் நாபி வலயத்துப் பேர் ஒளி சேர் *
மன்னிய தாமரை மா மலர் பூத்து * அம் மலர்மேல்
முன்னம் திசைமுகனைத் தான் படைக்க * 5
Thirumangai Azhwar · Pasurams 5–9
Corpus pasurams 2717–2721
This page preserves the source-defined chapter 3 grouping and brings its 5 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 5 · corpus 2717
தன் நாபி வலயத்துப் பேர் ஒளி சேர் *
மன்னிய தாமரை மா மலர் பூத்து * அம் மலர்மேல்
முன்னம் திசைமுகனைத் தான் படைக்க * 5
Pasuram 6 · corpus 2718
மற்று அவனும் முன்னம் படைத்தனன் நான்மறைகள் *
அம் மறை தான் மன்னும் அறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில் *
நல் நெறி மேம்பட்டன நான்கு அன்றே? * 6
Pasuram 7 · corpus 2719
நான்கினிலும் பின்னையது பின்னைப் பெயர்தரும் என்பது * ஓர்
தொல் நெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழ் இலையும் *
என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தி *
துன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் * வெம் சுடரோன் 7
Pasuram 8 · corpus 2720
மன்னும் அழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும் *
இன்னது ஓர் தன்மையராய் ஈங்கு உடலம் விட்டு எழுந்து *
தொல் நெறிக்கண் சென்றார் எனப்படும் சொல் அல்லால் *
இன்னது ஓர் காலத்து இனையார் இது பெற்றார் *
என்னவும் கேட்டு அறிவது இல்லை * உளது என்னில் 8
Pasuram 9 · corpus 2721
மன்னும் கடுங் கதிரோன் மண்டலத்தின் நல் நடுவுள் *
அன்னது ஓர் இல்லியின் ஊடு போய் * வீடு என்னும்
தொல் நெறிக்கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே * 9
அன்னதே பேசும் அறிவு இல் சிறு மனத்து * ஆங்கு
அன்னவரைக் கற்பிப்போம் யாமே * அது நிற்க 10
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.