Pasuram 21 · corpus 2605
Pasuram 21
சென்று அங்கு வெம் நரகில் * சேராமல் காப்பதற்கு *
இன்று இங்கு என் நெஞ்சால் இடுக்குண்ட ** அன்று அங்குப்
பார் உருவும் * பார் வளைத்த நீர் உருவும் * கண் புதைய
கார் உருவன் தான் நிமிர்த்த கால் 21
Nammazhvar · Reading part · pasurams 21–30
Corpus pasurams 2605–2614
This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 21 · corpus 2605
சென்று அங்கு வெம் நரகில் * சேராமல் காப்பதற்கு *
இன்று இங்கு என் நெஞ்சால் இடுக்குண்ட ** அன்று அங்குப்
பார் உருவும் * பார் வளைத்த நீர் உருவும் * கண் புதைய
கார் உருவன் தான் நிமிர்த்த கால் 21
Pasuram 22 · corpus 2606
காலே பொதத் திரிந்து * கத்துவராம் இனநாள் *
மாலார் குடிபுகுந்தார் என் மனத்தே ** மேலால்
தருக்கும் இடம்பாட்டினொடும் * வல்வினையார் தாம் * வீற்று
இருக்கும் இடம் காணாது இளைத்து 22
Pasuram 23 · corpus 2607
இளைப்பாய் இளையாப்பாய் * நெஞ்சமே சொன்னேன் *
இளைக்க நமன் தமர்கள் பற்றி இளைப்பு எய்த **
நாய் தந்து மோதாமல் * நல்குவான் நல்காப்பான் *
தாய் தந்தை எவ் உயிர்க்கும் தான் 23
Pasuram 24 · corpus 2608
தானே தனித் தோன்றல் * தன் அளப்பு ஒன்று இல்லாதான் *
தானே பிறர்கட்கும் தன் தோன்றல் ** தானே
இளைக்கில் பார் கீழ் மேல் ஆம் * மீண்டு அமைப்பான் ஆனால் *
அளக்கிற்பார் பாரின்மேல் ஆர்? 24
Pasuram 25 · corpus 2609
ஆரானும் ஆதானும் செய்ய * அகலிடத்தை
ஆராய்ந்து * அது திருத்தல் ஆவதே? ** சீர் ஆர்
மனத்தலை * வன் துன்பத்தை மாற்றினேன் * வானோர்
இனத் தலைவன் கண்ணனால் யான் 25
Pasuram 26 · corpus 2610
யானும் என் நெஞ்சும் இசைந்தொழிந்தோம் * வல்வினையைக்
கானும் மலையும் புகக் கடிவான் ** தான் ஓர்
இருள் அன்ன மா மேனி * எம் இறையார் தந்த *
அருள் என்னும் தண்டால் அடித்து 26
Pasuram 27 · corpus 2611
அடியால் * படி கடந்த முத்தோ? * அது அன்றேல்
முடியால் * விசும்பு அளந்த முத்தோ? ** நெடியாய்
செறி கழல் கொள் தாள் நிமிர்த்துச் * சென்று உலகம் எல்லாம் *
அறிகிலமால் நீ அளந்த அன்று 27
Pasuram 28 · corpus 2612
அன்றே நம் கண் காணும் * ஆழியான் கார் உருவம் *
இன்றே நாம் காணாது இருப்பதுவும் ** என்றேனும்
கட்கண்ணால் * காணாத அவ் உருவை * நெஞ்சு என்னும்
உட்கண்ணேல் காணும் உணர்ந்து 28
Pasuram 29 · corpus 2613
உணர ஒருவர்க்கு * எளியேனே செவ்வே *
இணரும் துழாய் அலங்கல் எந்தை? ** உணரத்
தனக்கு எளியர் * எவ் அளவர் அவ் அளவன் ஆனால் *
எனக்கு எளியன் எம் பெருமான் இங்கு 29
Pasuram 30 · corpus 2614
இங்கு இல்லை பண்டுபோல் * வீற்றிருத்தல் * என்னுடைய
செங்கண் மால் சீர்க்கும் சிறிது உள்ளம் ** அங்கே
மடி அடக்கி நிற்பதனில் * வல்வினையார் தாம் * ஈண்டு
அடி எடுப்பது அன்றோ அழகு? 30
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.