Pasuram 31 · corpus 2615
Pasuram 31
அழகும் அறிவோமாய் * வல்வினையைத் தீர்ப்பான் *
நிழலும் அடி தாறும் ஆனோம் ** சுழலக்
குடங்கள் * தலைமீது எடுத்துக் கொண்டு ஆடி * அன்று அத்
தடங் கடலை மேயார் தமக்கு 31
Nammazhvar · Reading part · pasurams 31–40
Corpus pasurams 2615–2624
This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 31 · corpus 2615
அழகும் அறிவோமாய் * வல்வினையைத் தீர்ப்பான் *
நிழலும் அடி தாறும் ஆனோம் ** சுழலக்
குடங்கள் * தலைமீது எடுத்துக் கொண்டு ஆடி * அன்று அத்
தடங் கடலை மேயார் தமக்கு 31
Pasuram 32 · corpus 2616
தமக்கு அடிமை வேண்டுவார் * தாமோதரனார்
தமக்கு * அடிமை செய் என்றால் செய்யாது ** எமக்கு என்று
தாம் செய்யும் தீவினைக்கே * தாழ்வுறுவர் நெஞ்சினார் *
யாம் செய்வது இவ்விடத்து இங்கு யாது? 32
Pasuram 33 · corpus 2617
யாதானும் ஒன்று அறியில் * தன் உகக்கில் என் கொலோ *
யாதானும் நேர்ந்து அணுகா ஆறு தான் ** யாதானும்
தேறுமா * செய்யா அசுரர்களை * நேமியால்
பாறுபாறு ஆக்கினான்பால்? 33
Pasuram 34 · corpus 2618
பால் ஆழி நீ கிடக்கும் பண்பை * யாம் கேட்டேயும்
கால் ஆழும் * நெஞ்சு அழியும் கண் சுழலும் ** நீல் ஆழிச்
சோதியாய் ஆதியாய் * தொல்வினை எம்பால் கடியும் *
நீதியாய் நின் சார்ந்து நின்று 34
Pasuram 35 · corpus 2619
நின்றும் இருந்தும் * கிடந்தும் திரிதந்தும் *
ஒன்றும் ஓவாற்றான் என் நெஞ்சு அகலான் ** அன்று அம் கை
வன் புடையால் பொன்பெயரோன் * வாய் தகர்த்து மார்வு இடந்தான் *
அன்புடையன் அன்றே அவன்? 35
Pasuram 36 · corpus 2620
அவன் ஆம்? இவன் ஆம்? உவன் ஆம்? * மற்று உம்பர்
அவன் ஆம்? * அவன் என்று இராதே ** அவன் ஆம்
அவனே எனத் தெளிந்து * கண்ணனுக்கே தீர்ந்தால் *
அவனே எவனேலும் ஆம் 36
Pasuram 37 · corpus 2621
ஆம் ஆறு அறிவுடையார் * ஆவது அரிது அன்றே? *
நாமே அது உடையோம் நல் நெஞ்சே ** பூ மேய்
மதுகரம் மே * தண் துழாய் மாலாரை * வாழ்த்து ஆம்
அது கரமே அன்பால் அமை 37
Pasuram 38 · corpus 2622
அமைக்கும் பொழுது உண்டே * ஆராயில் நெஞ்சே *
இமைக்கும் பொழுதும்? இடைச்சி குமைத்திறங்கள் **
ஏசியே ஆயினும் * ஈன் துழாய் மாயனையே *
பேசியே போக்காய் பிழை 38
Pasuram 39 · corpus 2623
பிழைக்க முயன்றோமோ * நெஞ்சமே பேசாய்? *
தழைக்கும் துழாய் மார்வன் தன்னை ** அழைத்து ஒருகால்
போய் உபகாரம் * பொலியக் கொள்ளாது * அவன் புகழே
வாய் உபகாரம் கொண்ட வாய்ப்பு 39
Pasuram 40 · corpus 2624
வாய்ப்போ இது ஒப்ப * மற்று இல்லை வா நெஞ்சே *
போய்ப் போஒய் * வெம் நரகில் பூவியேல் ** தீப் பால
பேய்த் தாய் * உயிர் கலாய்ப் பால் உண்டு * அவள் உயிரை
மாய்த்தானை வாழ்த்தே வலி 40
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.