Pasuram 41 · corpus 2625
Pasuram 41
வலியம் என நினைந்து * வந்து எதிர்ந்த மல்லர் *
வலிய முடி இடிய வாங்கி ** வலிய நின்
பொன் ஆழிக் கையால் * புடைத்திடுதி கீளாதே *
பல் நாளும் நிற்கும் இப் பார் 41
Nammazhvar · Reading part · pasurams 41–50
Corpus pasurams 2625–2634
This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 41 · corpus 2625
வலியம் என நினைந்து * வந்து எதிர்ந்த மல்லர் *
வலிய முடி இடிய வாங்கி ** வலிய நின்
பொன் ஆழிக் கையால் * புடைத்திடுதி கீளாதே *
பல் நாளும் நிற்கும் இப் பார் 41
Pasuram 42 · corpus 2626
பார் உண்டான் பார் உமிழ்ந்தான் * பார் இடந்தான் பார் அளந்தான் *
பார் இடம் முன் படைத்தான் என்பரால் ** பார் இடம்
ஆவானும் * தான் ஆனால் ஆர் இடமே? * மற்றொருவர்க்கு
ஆவான் புகாவால் அவை 42
Pasuram 43 · corpus 2627
அவையம் என நினைந்து * வந்த சுரர்பாலே *
நவையை நளிர்விப்பான் தன்னை ** கவை இல்
மனத்து உயர வைத்திருந்து * வாழ்த்தாதார்க்கு உண்டோ *
மனத் துயரை மாய்க்கும் வகை? 43
Pasuram 44 · corpus 2628
வகை சேர்ந்த நல் நெஞ்சும் * நா உடைய வாயும் *
மிக வாய்ந்து வீழா எனிலும் ** மிக ஆய்ந்து
மாலைத் தாம் * வாழ்த்தாது இருப்பர் இது அன்றே *
மேலைத் தாம் செய்யும் வினை? 44
Pasuram 45 · corpus 2629
வினையார் தர முயலும் * வெம்மையை அஞ்சி *
தினையாம் சிறிதளவும் செல்ல நினையாது **
வாசகத்தால் ஏத்தினேன் * வானோர் தொழுது இறைஞ்சும் *
நாயகத்தான் பொன் அடிக்கள் நான் 45
Pasuram 46 · corpus 2630
நான் கூறும் * கூற்றாவது இத்தனையே * நாள்நாளும்
தேங்கு ஓத நீர் உருவன் செங்கண் மால் ** நீங்காத
மா கதி ஆம் * வெம் நரகில் சேராமல் காப்பதற்கு *
நீ கதி ஆம் நெஞ்சே நினை 46
Pasuram 47 · corpus 2631
நினைத்து இறைஞ்சி மானிடவர் * ஒன்று இரப்பர் என்றே *
நினைத்திடவும் வேண்டா நீ நேரே ** நினைத்து இறைஞ்ச
எவ் அளவர்? * எவ் இடத்தோர்? மாலே * அது தானும்
எவ் அளவும் உண்டோ எமக்கு? 47
Pasuram 48 · corpus 2632
எமக்கு யாம் விண் நாட்டுக்கு * உச்சமது ஆம் வீட்டை *
அமைத்திருந்தோம் அஃது அன்றே ஆம் ஆறு? ** அமைப் பொலிந்த
மென் தோளி காரணமா * வெம் கோட்டு ஏறு ஏழ் உடனே *
கொன்றானையே மனத்துக் கொண்டு 48
Pasuram 49 · corpus 2633
கொண்டல் தான் மால் வரை தான் * மா கடல் தான் கூர் இருள் தான் *
வண்டு அறாப் பூவை தான் மற்றுத்தான் ** கண்ட நாள்
கார் உருவம் * காண்தோறும் நெஞ்சு ஓடும் * கண்ணனார்
பேர் உரு என்று எம்மைப் பிரிந்து 49
Pasuram 50 · corpus 2634
பிரிந்து ஒன்று நோக்காது * தம்முடைய பின்னே *
திரிந்து உழலும் சிந்தனையார் தம்மை ** புரிந்து ஒருகால்
ஆஆ என இரங்கார் * அந்தோ வலிதேகொல் *
மா வாய் பிளந்தார் மனம்? 50
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.