Corpus pasurams 2635–2644

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 51 · corpus 2635

Pasuram 51

Study resources at Uveda
மனம் ஆளும் ஓர் ஐவர் * வன் குறும்பர் தம்மை *
 சினம் மாள்வித்து ஓர் இடத்தே சேர்த்து ** புனம் மேய
 தண் துழாயான் அடியைத் * தாம் காணும் அஃது அன்றே *
 வண் துழாம் சீரார்க்கு மாண்பு? 51

Pasuram 52 · corpus 2636

Pasuram 52

Study resources at Uveda
மாண் பாவித்து அஞ்ஞான்று * மண் இரந்தான் * மாயவள் நஞ்சு
 ஊண் பாவித்து உண்டானது * ஓர் உருவம் ** காண்பான் நம்
 கண் அவா * மற்று ஒன்று காண் உறா * சீர் பரவாது
 உண்ண வாய் தான் உறுமோ ஒன்று? 52

Pasuram 53 · corpus 2637

Pasuram 53

Study resources at Uveda
ஒன்று உண்டு செங்கண்மால் * யான் உரைப்பது * உன் அடியார்க்கு
 என் செய்வன் என்றே இருத்தி நீ ** நின் புகழில்
 வைகும் * தம் சிந்தையிலும் மற்று இனிதோ * நீ அவர்க்கு
 வைகுந்தம் என்று அருளும் வான்? 53

Pasuram 54 · corpus 2638

Pasuram 54

Study resources at Uveda
வானோ மறி கடலோ * மாருதமோ தீயகமோ *
 கானோ ஒருங்கிற்று? கண்டிலமால் ** ஆன் ஈன்ற
 கன்று உயர தாம் எறிந்து * காய் உதிர்த்தார் தாள் பணிந்தோம் *
 வன் துயரை ஆஆ மருங்கு 54

Pasuram 55 · corpus 2639

Pasuram 55

Study resources at Uveda
மருங்கு ஓதம் மோதும் * மணி நாகணையார் *
 மருங்கே வர அரியரேலும் ** ஒருங்கே
 எமக்கு அவரைக் காணலாம் * எப்பொழுதும் உள்ளால் *
 மனக் கவலை தீர்ப்பார் வரவு 55

Pasuram 56 · corpus 2640

Pasuram 56

Study resources at Uveda
வரவு ஆறு ஒன்று இல்லையால் * வாழ்வு இனிதால் * எல்லே!
 ஒரு ஆறு ஒருவன் புகாவாறு ** உரு மாறும்
 ஆயவர் தாம் சேயவர் தாம் * அன்று உலகம் தாயவர் தாம் *
 மாயவர் தாம் காட்டும் வழி 56

Pasuram 57 · corpus 2641

Pasuram 57

Study resources at Uveda
வழித் தங்கு வல்வினையை * மாற்றானோ? நெஞ்சே! *
 தழீஇக்கொண்டு போர் அவுணன் தன்னை ** சுழித்து எங்கும்
 தாழ்வு இடங்கள் பற்றி * புலால் வெள்ளம் தான் உகள *
 வாழ்வு அடங்க மார்வு இடந்த மால் 57

Pasuram 58 · corpus 2642

Pasuram 58

Study resources at Uveda
மாலே படிச் சோதி மாற்றேல் * இனி உனது
 பாலே போல் * சீரில் பழுத்தொழிந்தேன் ** மேலால்
 பிறப்பு இன்மை பெற்று * அடிக்கீழ்க் குற்றேவல் அன்று *
 மறப்பு இன்மை யான் வேண்டும் மாடு 58

Pasuram 59 · corpus 2643

Pasuram 59

Study resources at Uveda
மாடே வரப்பெறுவராம் என்றே * வல்வினையார்
 காடானும் ஆதானும் கைக்கொள்ளார் ** ஊடே போய்ப்
 பேர் ஓதம் சிந்து * திரைக் கண்வளரும் * பேராளன்
 பேர் ஓத சிந்திக்க பேர்ந்து? 59

Pasuram 60 · corpus 2644

Pasuram 60

Study resources at Uveda
பேர்ந்து ஒன்று நோக்காது * பின் நிற்பாய் நில்லாப்பாய் *
 ஈன் துழாய் மாயனையே என் நெஞ்சே ** பேர்ந்து எங்கும்
 தொல்லை மா வெம் நரகில் * சேராமல் காப்பதற்கு *
 இல்லை காண் மற்றோர் இறை 60

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.