Corpus pasurams 2645–2654

This neutral reading part groups 10 consecutive pasurams without inventing a traditional chapter division.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 61 · corpus 2645

Pasuram 61

Study resources at Uveda
இறை முறையான் சேவடிமேல் * மண் அளந்த அந் நாள் *
 மறை முறையால் வான் நாடர் கூடி ** முறைமுறையின்
 தாது இலகு * பூத் தெளித்தால் ஒவ்வாதே * தாழ் விசும்பின்
 மீது இலகித் தான் கிடக்கும் மீன்? 61

Pasuram 62 · corpus 2646

Pasuram 62

Study resources at Uveda
மீன் என்னும் கம்பில் * வெறி என்னும் வெள்ளி வேய் *
 வான் என்னும் கேடு இலா வான் குடைக்கு ** தான் ஓர்
 மணிக் காம்பு போல் * நிமிர்ந்து மண் அளந்தான் * நங்கள்
 பிணிக்கு ஆம் பெரு மருந்து பின் 62

Pasuram 63 · corpus 2647

Pasuram 63

Study resources at Uveda
பின் துரக்கும் காற்று இழந்த * சூல் கொண்டல் பேர்ந்தும் போய் *
 வன் திரைக்கண் வந்து அணைந்த வாய்மைத்தே ** அன்று
 திருச் செய்ய நேமியான் * தீ அரக்கி மூக்கும்
 பருச் செவியும் ஈர்ந்த பரன் 63

Pasuram 64 · corpus 2648

Pasuram 64

Study resources at Uveda
பரன் ஆம் அவன் ஆதல் * பாவிப்பர் ஆகில் *
 உரனால் ஒரு மூன்று போதும் ** மரம் ஏழ் அன்று
 எய்தானை * புள்ளின் வாய் கீண்டானையே * அமரர்
 கைதான் தொழாவே கலந்து? 64

Pasuram 65 · corpus 2649

Pasuram 65

Study resources at Uveda
கலந்து நலியும் * கடுந் துயரை நெஞ்சே *
 மலங்க அடித்து மடிப்பான் ** விலங்கல் போல்
 தொல்மாலை கேசவனை * நாரணனை மாதவனை *
 சொல் மாலை எப்பொழுதும் சூட்டு 65

Pasuram 66 · corpus 2650

Pasuram 66

Study resources at Uveda
சூட்டாய நேமியான் * தொல் அரக்கன் இன் உயிரை *
 மாட்டே துயர் இழைத்த மாயவனை ** ஈட்ட
 வெறி கொண்ட * தண் துழாய் வேதியனை * நெஞ்சே
 அறி கண்டாய் சொன்னேன் அது 66

Pasuram 67 · corpus 2651

Pasuram 67

Study resources at Uveda
அதுவோ நன்று என்று * அங்கு அமர் உலகோ வேண்டில் *
 அதுவோ பொருள் இல்லை அன்றே? ** அது ஒழிந்து
 மண் நின்று * ஆள்வேன் எனிலும் கூடும் மட நெஞ்சே *
 கண்ணன் தாள் வாழ்த்துவதே கல் 67

Pasuram 68 · corpus 2652

Pasuram 68

Study resources at Uveda
கல்லும் கனை கடலும் * வைகுந்த வான் நாடும் *
 புல் என்று ஒழிந்தனகொல்? ஏ பாவம் ** வெல்ல
 நெடியான் நிறம் கரியான் * உள்புகுந்து நீங்கான் *
 அடியேனது உள்ளத்து அகம் 68

Pasuram 69 · corpus 2653

Pasuram 69

Study resources at Uveda
அகம் சிவந்த கண்ணினர் ஆய் * வல்வினையர் ஆவார் *
 முகம் சிதைவராம் அன்றே முக்கி ** மிகும் திருமால்
 சீர்க் கடலை உள் பொதிந்த * சிந்தனையேன் தன்னை *
 ஆர்க்கு அடல் ஆம் செவ்வே அடர்த்து? 69

Pasuram 70 · corpus 2654

Pasuram 70

Study resources at Uveda
அடர் பொன் முடியானை * ஆயிரம் பேரானை *
 சுடர் கொள் சுடர் ஆழியானை ** இடர் கடியும்
 மாதா பிதுவாக * வைத்தேன் எனது உள்ளே *
 யாது ஆகில் யாதே இனி? 70

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.