Pasuram 91 · corpus 1038
Pasuram 91
கண் ஆர் கடல் சூழ் * இலங்கைக்கு இறைவன் தன் *
திண் ஆகம் பிளக்கச் * சரம் செல உய்த்தாய் **
விண்ணோர் தொழும் * வேங்கட மா மலை மேய *
அண்ணா அடியேன் * இடரைக் களையாயே 1
Thirumangai Azhwar · Pasurams 91–100
Corpus pasurams 1038–1047
This page preserves the source-defined decade 1, chapter 10 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 91 · corpus 1038
கண் ஆர் கடல் சூழ் * இலங்கைக்கு இறைவன் தன் *
திண் ஆகம் பிளக்கச் * சரம் செல உய்த்தாய் **
விண்ணோர் தொழும் * வேங்கட மா மலை மேய *
அண்ணா அடியேன் * இடரைக் களையாயே 1
Pasuram 92 · corpus 1039
இலங்கைப் பதிக்கு * அன்று இறை ஆய * அரக்கர்
குலம் கெட்டு அவர் மாளக் * கொடிப் புள் திரித்தாய் **
விலங்கல் குடுமித் * திருவேங்கடம் மேய *
அலங்கல் துளப முடியாய் * அருளாயே 2
Pasuram 93 · corpus 1040
நீர் ஆர் கடலும் * நிலனும் முழுது உண்டு *
ஏர் ஆலம் இளந் தளிர்மேல் * துயில் எந்தாய் **
சீர் ஆர் * திருவேங்கட மா மலை மேய *
ஆரா அமுதே * அடியேற்கு அருளாயே 3
Pasuram 94 · corpus 1041
உண்டாய் உறிமேல் * நறு நெய் அமுது ஆக *
கொண்டாய் குறள் ஆய் * நிலம் ஈர் அடியாலே **
விண் தோய் சிகரத் * திருவேங்கடம் மேய *
அண்டா அடியேனுக்கு * அருள்புரியாயே 4
Pasuram 95 · corpus 1042
தூண் ஆய் அதனூடு * அரியாய் வந்து தோன்றி *
பேணா அவுணன் உடலம் * பிளந்திட்டாய் **
சேண் ஆர் * திருவேங்கட மா மலை மேய *
கோள் நாகணையாய் * குறிக்கொள் எனை நீயே 5
Pasuram 96 · corpus 1043
மன்னா * இம் மனிசப் பிறவியை நீக்கி *
தன் ஆக்கித் * தன் இன் அருள் செய்யும் தலைவன் **
மின் ஆர் முகில் சேர் * திருவேங்கடம் மேய *
என் ஆனை என் அப்பன் * என் நெஞ்சில் உளானே 6
Pasuram 97 · corpus 1044
மான் ஏய் மட நோக்கி * திறத்து எதிர் வந்த *
ஆன் ஏழ் விடை செற்ற * அணி வரைத் தோளா **
தேனே * திருவேங்கட மா மலை மேய *
கோனே என் மனம் * குடிகொண்டு இருந்தாயே 7
Pasuram 98 · corpus 1045
சேயன் அணியன் * என சிந்தையுள் நின்ற
மாயன் * மணி வாள் ஒளி * வெண் தரளங்கள் **
வேய் விண்டு உதிர் * வேங்கட மா மலை மேய *
ஆயன் அடி அல்லது * மற்று அறியேனே 8
Pasuram 99 · corpus 1046
வந்தாய் என் மனம் புகுந்தாய் * மன்னி நின்றாய் *
நந்தாத கொழுஞ் சுடரே * எங்கள் நம்பீ **
சிந்தாமணியே * திருவேங்கடம் மேய *
எந்தாய்! இனி யான் உன்னை * என்றும் விடேனே 9
Pasuram 100 · corpus 1047
வில்லார் மலி * வேங்கட மா மலை மேய *
மல் ஆர் திரள் தோள் * மணி வண்ணன் அம்மானை **
கல் ஆர் திரள் தோள் * கலியன் சொன்ன மாலை *
வல்லார் அவர் * வானவர் ஆகுவர் தாமே 10
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.