This page preserves the source-defined decade 1, chapter 9 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
தாயே தந்தை என்றும் * தாரமே கிளை மக்கள் என்றும் *
நோயே பட்டொழிந்தேன் * நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால் **
வேய் ஏய் பூம் பொழில் சூழ் * விரை ஆர் திருவேங்கடவா! *
நாயேன் வந்து அடைந்தேன் * நல்கி ஆள் என்னைக் கொண்டருளே 1
கொன்றேன் பல் உயிரைக் * குறிக்கோள் ஒன்று இலாமையினால் *
என்றேனும் இரந்தார்க்கு * இனிது ஆக உரைத்து அறியேன் **
குன்று ஏய் மேகம் அதிர் * குளிர் மா மலை வேங்கடவா *
அன்றே வந்து அடைந்தேன் * அடியேனை ஆட் கொண்டருளே 3
குலம் தான் எத்தனையும் * பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன் *
நலம் தான் ஒன்றும் இலேன் * நல்லது ஓர் அறம் செய்தும் இலேன் **
நிலம் தோய் நீள் முகில் சேர் * நெறி ஆர் திருவேங்கடவா! *
அலந்தேன் வந்து அடைந்தேன் * அடியேனை ஆட் கொண்டருளே 4
எப் பாவம் பலவும் * இவையே செய்து இளைத்தொழிந்தேன் *
துப்பா நின் அடியே * தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன் **
செப்பு ஆர் திண் வரை சூழ் * திருவேங்கட மா மலை * என்
அப்பா! வந்து அடைந்தேன் * அடியேனை ஆட் கொண்டருளே 5
மண் ஆய் நீர் எரி கால் * மஞ்சு உலாவும் ஆகாசமும் ஆம் *
புண் ஆர் ஆக்கை தன்னுள் * புலம்பித் தளர்ந்து எய்த்தொழிந்தேன் **
விண் ஆர் நீள் சிகர * விரைஆர் திருவேங்கடவா! *
அண்ணா வந்து அடைந்தேன் * அடியேனை ஆட் கொண்டருளே 6
நோற்றேன் பல் பிறவி * நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால் *
ஏற்றேன் இப் பிறப்பே * இடர் உற்றனன் எம் பெருமான் **
கோல் தேன் பாய்ந்து ஒழுகும் * குளிர் சோலை சூழ் வேங்கடவா *
ஆற்றேன் வந்து அடைந்தேன் * அடியேனை ஆட் கொண்டருளே 8
பற்றேல் ஒன்றும் இலேன் * பாவமே செய்து பாவி ஆனேன் *
மற்றேல் ஒன்று அறியேன் * மாயனே எங்கள் மாதவனே **
கல் தேன் பாய்ந்து ஒழுகும் * கமலச் சுனை வேங்கடவா! *
அற்றேன் வந்து அடைந்தேன் * அடியேனை ஆட் கொண்டருளே 9
கண் ஆய் ஏழ் உலகுக்கு உயிர் ஆய * எம் கார் வண்ணனை *
விண்ணோர் தாம் பரவும் * பொழில் வேங்கட வேதியனை **
திண் ஆர் மாடங்கள் சூழ் * திரு மங்கையர் கோன் கலியன் *
பண் ஆர் பாடல் பத்தும் * பயில்வார்க்கு இல்லை பாவங்களே 10
Learn these pasurams a few at a time
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.