Corpus pasurams 1048–1057

This page preserves the source-defined decade 2, chapter 1 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 101 · corpus 1048

Pasuram 101

Study resources at Uveda
வானவர் தங்கள் சிந்தை போல * என் நெஞ்சமே இனிது உவந்து * மா தவ
மானவர் தங்கள் சிந்தை * அமர்ந்து உறைகின்ற எந்தை **
கானவர் இடு கார் அகில் புகை * ஓங்கு வேங்கடம் மேவி * மாண் குறள்
ஆன அந்தணற்கு * இன்று அடிமைத் தொழில் பூண்டாயே 1

Pasuram 102 · corpus 1049

Pasuram 102

Study resources at Uveda
உறவு சுற்றம் என்று ஒன்று இலா * ஒருவன் உகந்தவர் தம்மை * மண்மிசைப்
பிறவியே கெடுப்பான் * அது கண்டு என் நெஞ்சம் என்பாய் **
குறவர் மாதர்களோடு * வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும் * வேங்கடத்து
அறவன் நாயகற்கு * இன்று அடிமைத் தொழில் பூண்டாயே 2

Pasuram 103 · corpus 1050

Pasuram 103

Study resources at Uveda
இண்டை ஆயின கொண்டு தொண்டர்கள் * ஏத்துவார் உறவோடும் * வானிடைக்
கொண்டு போய் இடவும் * அது கண்டு என் நெஞ்சம் என்பாய் **
வண்டு வாழ் வட வேங்கட மலை * கோயில் கொண்டு அதனோடும் * மீமிசை
அண்டம் ஆண்டு இருப்பாற்கு * அடிமைத் தொழில் பூண்டாயே 3

Pasuram 104 · corpus 1051

Pasuram 104

Study resources at Uveda
பாவியாது செய்தாய் * என் நெஞ்சமே பண்டு தொண்டு செய்தாரை * மண்மிசை
மேவி ஆட்கொண்டு போய் * விசும்பு ஏற வைக்கும் எந்தை **
கோவி நாயகன் கொண்டல் உந்து உயர் * வேங்கட மலை ஆண்டு * வானவர்
ஆவியாய் இருப்பாற்கு * அடிமைத் தொழில் பூண்டாயே 4

Pasuram 105 · corpus 1052

Pasuram 105

Study resources at Uveda
பொங்கு போதியும் பிண்டியும் உடைப் * புத்தர் நோன்பியர் பள்ளியுள் உறை *
 தங்கள் தேவரும் தாங்களுமே ஆக * என் நெஞ்சம் என்பாய் **
 எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும் * வேங்கடம் மேவி நின்று அருள் *
 அம் கண் நாயகற்கு * இன்று அடிமைத் தொழில் பூண்டாயே 5

Pasuram 106 · corpus 1053

Pasuram 106

Study resources at Uveda
துவரி ஆடையர் மட்டையர் * சமண் தொண்டர்கள் மண்டி உண்டு பின்னரும் *
 தமரும் தாங்களுமே தடிக்க * என் நெஞ்சம் என்பாய் **
 கவரி மாக் கணம் சேரும் * வேங்கடம் கோயில் கொண்ட கண் ஆர் விசும்பிடை *
 அமர நாயகற்கு * இன்று அடிமைத் தொழில் பூண்டாயே 6

Pasuram 107 · corpus 1054

Pasuram 107

Study resources at Uveda
தருக்கினால் சமண் செய்து * சோறு தண் தயிரினால் திரளை * மிடற்றிடை
 நெருக்குவார் அலக்கண் * அது கண்டு என் நெஞ்சம் என்பாய் *
 மருள்கள் வண்டுகள் பாடும் * வேங்கடம் கோயில் கொண்டு அதனோடும் * வானிடை
அருக்கன் மேவி நிற்பாற்கு * அடிமைத் தொழில் பூண்டாயே 7

Pasuram 108 · corpus 1055

Pasuram 108

Study resources at Uveda
சேயன் அணியன் சிறியன் பெரியன் என்பதும் * சிலர் பேசக் கேட்டிருந்தே *
 என் நெஞ்சம் என்பாய் * எனக்கு ஒன்று சொல்லாதே **
 வேய்கள் நின்று வெண் முத்தமே சொரி * வேங்கட மலை கோயில் மேவிய *
 ஆயர் நாயகற்கு * இன்று அடிமைத் தொழில் பூண்டாயே 8

Pasuram 109 · corpus 1056

Pasuram 109

Study resources at Uveda
கூடி ஆடி உரைத்ததே உரைத்தாய் * என் நெஞ்சம் என்பாய் துணிந்து கேள் *
 பாடி ஆடிப் பலரும் பணிந்து ஏத்திக் * காண்கிலர் **
 ஆடு தாமரையோனும் ஈசனும் * அமரர் கோனும் நின்று ஏத்தும் * வேங்கடத்து
 ஆடு கூத்தனுக்கு * இன்று அடிமைத் தொழில் பூண்டாயே 9

Pasuram 110 · corpus 1057

Pasuram 110

Study resources at Uveda
மின்னு மா முகில் மேவு * தண் திரு வேங்கட மலை கோயில் மேவிய *
 அன்னம் ஆய் நிகழ்ந்த * அமரர் பெருமானை **
 கன்னி மா மதிள் மங்கையர் கலி கன்றி * இன் தமிழால் உரைத்த * இம்
 மன்னு பாடல் வல்லார்க்கு * இடம் ஆகும் வான் உலகே 10

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.