Pasuram 21 · corpus 968
Pasuram 21
முற்ற மூத்துக் கோல் துணையா * முன் அடி நோக்கி வளைந்து *
இற்ற கால் போல் தள்ளி மெள்ள * இருந்து அங்கு இளையாமுன் **
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி * பெரு முலை ஊடு * உயிரை
வற்ற வாங்கி உண்ட வாயான் * வதரி வணங்குதுமே (1)
Thirumangai Azhwar · Pasurams 21–30
Corpus pasurams 968–977
This page preserves the source-defined decade 1, chapter 3 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 21 · corpus 968
முற்ற மூத்துக் கோல் துணையா * முன் அடி நோக்கி வளைந்து *
இற்ற கால் போல் தள்ளி மெள்ள * இருந்து அங்கு இளையாமுன் **
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி * பெரு முலை ஊடு * உயிரை
வற்ற வாங்கி உண்ட வாயான் * வதரி வணங்குதுமே (1)
Pasuram 22 · corpus 969
முதுகு பற்றிக் கைத்தலத்தால் * முன் ஒரு கோல் ஊன்றி *
விதிர் விதிர்த்துக் கண் சுழன்று * மேல் கிளைகொண்டு இருமி **
இது என் அப்பர் மூத்த ஆறு என்று * இளையவர் ஏசாமுன் *
மது உண் வண்டு பண்கள் பாடும் * வதரி வணங்குதுமே (2)
Pasuram 23 · corpus 970
உறிகள் போல் மெய்ந் நரம்பு எழுந்து * ஊன் தளர்ந்து உள்ளம் எள்கி *
நெறியை நோக்கிக் கண் சுழன்று * நின்று நடுங்காமுன் **
அறிதி ஆகில் நெஞ்சம்! அன்பாய் * ஆயிரம் நாமம் சொல்லி *
வெறி கொள் வண்டு பண்கள் பாடும் * வதரி வணங்குதுமே (3)
Pasuram 24 · corpus 971
பீளை சோரக் கண் இடுங்கிப் * பித்து எழ மூத்து இருமி *
தாள்கள் நோவத் தம்மில் முட்டித் * தள்ளி நடவாமுன் **
காளை ஆகிக் கன்று மேய்த்துக் * குன்று எடுத்து அன்று நின்றான் *
வாளை பாயும் தண் தடம் சூழ் * வதரி வணங்குதுமே (4)
Pasuram 25 · corpus 972
பண்டு காமர் ஆன ஆறும் * பாவையர் வாய் அமுதம்
உண்ட ஆறும் * வாழ்ந்த ஆறும் * ஒக்க உரைத்து இருமி **
தண்டு காலா ஊன்றி ஊன்றித் * தள்ளி நடவாமுன் *
வண்டு பாடும் தண் துழாயான் * வதரி வணங்குதுமே (5)
Pasuram 26 · corpus 973
எய்த்த சொல்லோடு ஈளை ஏங்கி * இருமி இளைத்து * உடலம்
பித்தர் போலச் சித்தம் வேறாய்ப் * பேசி அயராமுன் **
அத்தன் எந்தை ஆதி மூர்த்தி * ஆழ் கடலைக் கடைந்த *
மைத்த சோதி எம்பெருமான் * வதரி வணங்குதுமே (6)
Pasuram 27 · corpus 974
பப்ப அப்பர் மூத்த ஆறு * பாழ்ப்பது சீத் திரளை
ஒப்ப * ஐக்கள் போத உந்த * உன் தமர் காண்மின் என்று **
செப்பு நேர் மென் கொங்கை நல்லார் * தாம் சிரியாத முன்னம் *
வைப்பும் நங்கள் வாழ்வும் ஆனான் * வதரி வணங்குதுமே (7)
Pasuram 28 · corpus 975
ஈசி போமின் ஈங்கு இரேன்மின் * இருமி இளைத்தீர் * உள்ளம்
கூசி இட்டீர் என்று பேசும் * குவளை அம் கண்ணியர் பால் **
நாசம் ஆன பாசம் விட்டு * நல் நெறி நோக்கல் உறில் *
வாசம் மல்கு தண் துழாயான் * வதரி வணங்குதுமே (8)
Pasuram 29 · corpus 976
புலன்கள் நைய மெய்யில் மூத்துப் * போந்து இருந்து உள்ளம் எள்கி *
கலங்க ஐக்கள் போத உந்திக் * கண்ட பிதற்றாமுன் **
அலங்கல் ஆய தண் துழாய்கொண்டு * ஆயிரம் நாமம் சொல்லி *
வலங்கொள் தொண்டர் பாடி ஆடும் * வதரி வணங்குதுமே (9)
Pasuram 30 · corpus 977
வண்டு தண் தேன் உண்டு வாழும் * வதரி நெடு மாலைக் *
கண்டல் வேலி மங்கை வேந்தன் * கலியன் ஒலி மாலை **
கொண்டு தொண்டர் பாடி ஆடக் * கூடிடில் நீள் விசும்பில் *
அண்டம் அல்லால் மற்று அவர்க்கு * ஓர் ஆட்சி அறியோமே (10)
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.