Corpus pasurams 978–987

This page preserves the source-defined decade 1, chapter 4 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 31 · corpus 978

Pasuram 31

Study resources at Uveda
ஏனம் முன் ஆகி இரு நிலம் இடந்து * அன்று இணை அடி இமையவர் வணங்க *
 தானவன் ஆகம் தரணியில் புரளத் * தடஞ் சிலை குனித்த என் தலைவன் **
 தேன் அமர் சோலைக் கற்பகம் பயந்த * தெய்வ நல் நறு மலர் கொணர்ந்து *
 வானவர் வணங்கும் கங்கையின் கரைமேல் * வதரி ஆச்சிராமத்து உள்ளானே (1) *

Pasuram 32 · corpus 979

Pasuram 32

Study resources at Uveda
கானிடை உருவைச் சுடு சரம் துரந்து * கண்டு முன் கொடுந் தொழில் உரவோன் *
 ஊன் உடை அகலத்து அடு கணை குளிப்ப * உயிர் கவர்ந்து உகந்த எம் ஒருவன் **
 தேன் உடைக் கமலத்து அயனொடு தேவர் * சென்று சென்று இறைஞ்சிட * பெருகு
 வானிடை முது நீர்க் கங்கையின் கரைமேல் * வதரி ஆச்சிராமத்து உள்ளானே (2)

Pasuram 33 · corpus 980

Pasuram 33

Study resources at Uveda
இலங்கையும் கடலும் அடல் அரும் துப்பின் * இரு நிதிக்கு இறைவனும் * அரக்கர்
 குலங்களும் கெட முன் கொடுந் தொழில் புரிந்த கொற்றவன் * கொழுஞ் சுடர் சுழன்ற **
 விலங்கலில் உரிஞ்சி மேல்நின்ற விசும்பில் * வெண் துகில் கொடி என விரிந்து *
 வலம் தரு மணி நீர்க் கங்கையின் கரைமேல் * வதரி ஆச்சிராமத்து உள்ளானே (3)

Pasuram 34 · corpus 981

Pasuram 34

Study resources at Uveda
துணிவு இனி உனக்குச் சொல்லுவன் மனமே! * தொழுது எழு தொண்டர்கள் தமக்கு *
 பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும் * பேர் அருளாளன் எம் பெருமான் **
 அணி மலர்க் குழலார் அரம்பையர் துகிலும் * ஆரமும் வாரி வந்து * அணி நீர்
 மணி கொழித்து இழிந்த கங்கையின் கரைமேல் * வதரி ஆச்சிரமத்து உள்ளானே (4)

Pasuram 35 · corpus 982

Pasuram 35

Study resources at Uveda
பேய் இடைக்கு இருந்து வந்த மற்று அவள் தன் * பெரு முலை சுவைத்திட * பெற்ற
 தாய் இடைக்கு இருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட * வளர்ந்த என் தலைவன் **
 சேய் முகட்டு உச்சி அண்டமும் சுமந்த * செம்பொன் செய் விலங்கலில் இலங்கு *
 வாய் முகட்டு இழிந்த கங்கையின் கரைமேல் * வதரி ஆச்சிராமத்து உள்ளானே (5)

Pasuram 36 · corpus 983

Pasuram 36

Study resources at Uveda
தேர் அணங்கு அல்குல் செழுங் கயல் கண்ணி * திறத்து ஒரு மறத் தொழில் புரிந்து *
 பார் அணங்கு இமில் ஏறு ஏழும் முன் அடர்த்த * பனி முகில் வண்ணன் எம் பெருமான் **
 காரணம் தன்னால் கடும் புனல் கயத்த * கரு வரை பிளவு எழக் குத்தி *
 வாரணம் கொணர்ந்த கங்கையின் கரைமேல் * வதரி ஆச்சிராமத்து உள்ளானே 6 **

Pasuram 37 · corpus 984

Pasuram 37

Study resources at Uveda
வெம் திறல் களிறும் வேலைவாய் அமுதும் * விண்ணொடு விண்ணவர்க்கு அரசும் *
 இந்திரற்கு அருளி எமக்கும் ஈந்தருளும் * எந்தை எம் அடிகள் எம் பெருமான் **
 அந்தரத்து அமரர் அடி இணை வணங்க * ஆயிரம் முகத்தினால் அருளி *
 மந்தரத்து இழிந்த கங்கையின் கரைமேல் * வதரி ஆச்சிராமத்து உள்ளானே 7 **

Pasuram 38 · corpus 985

Pasuram 38

Study resources at Uveda
மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த மன்னவன் * பொன் நிறத்து உரவோன் *
 ஊன் முனிந்து அவனது உடல் இரு பிளவா * உகிர் நுதி மடுத்து ** அயன் அரனைத்
 தான் முனிந்து இட்ட * வெம் திறல் சாபம் தவிர்த்தவன் * தவம்புரிந்து உயர்ந்த
 மா முனி கொணர்ந்த கங்கையின் கரைமேல் * வதரி ஆச்சிராமத்து உள்ளானே 8 **

Pasuram 39 · corpus 986

Pasuram 39

Study resources at Uveda
கொண்டல் மாருதங்கள் குல வரை தொகு நீர்க் * குரை கடல் உலகு உடன் அனைத்தும் *
 உண்ட மா வயிற்றோன் ஒண் சுடர் ஏய்ந்த * உம்பரும் ஊழியும் ஆனான் **
 அண்டம் ஊடு அறுத்து அன்று அந்தரத்து இழிந்து * அங்கு அவனியாள் அலமர * பெருகும்
 மண்டு மா மணி நீர்க் கங்கையின் கரைமேல் * வதரி ஆச்சிராமத்து உள்ளானே 9 **

Pasuram 40 · corpus 987

Pasuram 40

Study resources at Uveda
வரும் திரை மணி நீர்க் கங்கையின் கரைமேல் * வதரி ஆச்சிரமத்து உள்ளானை *
 கருங் கடல் முந்நீர் வண்ணனை எண்ணிக் * கலியன் வாய் ஒலிசெய்த பனுவல் **
 வரம்செய்த ஐந்தும் ஐந்தும் வல்லார்கள் * வானவர் உலகு உடன் மருவி *
 இருங் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ் * இமையவர் ஆகுவர் தாமே 10 **

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.