This page preserves the source-defined decade 1, chapter 5 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
கலையும் கரியும் பரிமாவும் * திரியும் கானம் கடந்து போய் *
சிலையும் கணையும் துணையாகச் * சென்றான் வென்றிச் செருக்களத்து **
மலை கொண்டு அலை நீர் அணை கட்டி * மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர்
தலைவன் * தலை பத்து அறுத்து உகந்தான் * சாளக்கிராமம் அடை நெஞ்சே 1 **
கடம் சூழ் கரியும் பரிமாவும் * ஒலி மாத் தேரும் காலாளும் *
உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை * பொடியா வடி வாய்ச் சரம் துரந்தான் **
இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில் * இமையோர் வணங்க மணம் கமழும் *
தடம் சூழ்ந்து எங்கும் அழகு ஆய * சாளக்கிராமம் அடை நெஞ்சே 2 **
அடுத்து ஆர்த்து எழுந்தாள் பில வாய் விட்டு அலற * அவள் மூக்கு அயில் வாளால்
விடுத்தான் * விளங்கு சுடர் ஆழி * விண்ணோர் பெருமான் நண்ணார் முன் **
கடுத்து ஆர்த்து எழுந்த பெரு மழையைக் * கல் ஒன்று ஏந்தி இன நிரைக் காத்
தடுத்தான் * தடம் சூழ்ந்து அழகு ஆய * சாளக்கிராமம் அடை நெஞ்சே 5 **
தாய் ஆய் வந்த பேய் உயிரும் * தயிரும் விழுதும் உடன் உண்ட
வாயான் * தூய வரி உருவின் குறளாய்ச் சென்று * மாவலியை
ஏயான் இரப்ப ** மூவடி மண் இன்றே தா என்று * உலகு ஏழும்
தாயான் * காயா மலர் வண்ணன் * சாளக்கிராமம் அடை நெஞ்சே 6
ஏனோர் அஞ்ச வெம் சமத்துள் * அரி ஆய்ப் பரிய இரணியனை *
ஊன் ஆர் அகலம் பிளவு எடுத்த * ஒருவன் தானே இரு சுடர் ஆய் **
வான் ஆய்த் தீ ஆய் மாருதம் ஆய் * மலை ஆய் அலை நீர் உலகு அனைத்தும்
தான் ஆய் * தானும் ஆனான் தன் * சாளக்கிராமம் அடை நெஞ்சே 7 **
தொண்டு ஆம் இனமும் இமையோரும் * துணை நூல் மார்பின் அந்தணரும் *
அண்டா எமக்கே அருளாய் என்று * அணையும் கோயில் அருகு எல்லாம் **
வண்டு ஆர் பொழிலின் பழனத்து * வயலின் அயலே கயல் பாய *
தண் தாமரைகள் முகம் அலர்த்தும் * சாளக்கிராமம் அடை நெஞ்சே 9 **
தாரா ஆரும் வயல் சூழ்ந்த * சாளக்கிராமத்து அடிகளை *
கார் ஆர் புறவின் மங்கை வேந்தன் * கலியன் ஒலிசெய் தமிழ்மாலை **
ஆர் ஆர் உலகத்து அறிவு உடையார் * அமரர் நல் நாட்டு அரசு ஆள *
பேர் ஆயிரமும் ஓதுமின்கள் * அன்றி இவையே பிதற்றுமினே 10 **
Learn these pasurams a few at a time
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.