Pasuram 61 · corpus 1008
Pasuram 61
அம் கண் ஞாலம் அஞ்ச * அங்கு ஓர் ஆள் அரி ஆய் * அவுணன்
பொங்க ஆகம் வள் உகிரால் * போழ்ந்த புனிதன் இடம் **
பைங் கண் ஆனைக் கொம்பு கொண்டு * பத்திமையால் * அடிக்கீழ்ச்
செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும் * சிங்கவேள்குன்றமே 1
Thirumangai Azhwar · Pasurams 61–70
Corpus pasurams 1008–1017
This page preserves the source-defined decade 1, chapter 7 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 61 · corpus 1008
அம் கண் ஞாலம் அஞ்ச * அங்கு ஓர் ஆள் அரி ஆய் * அவுணன்
பொங்க ஆகம் வள் உகிரால் * போழ்ந்த புனிதன் இடம் **
பைங் கண் ஆனைக் கொம்பு கொண்டு * பத்திமையால் * அடிக்கீழ்ச்
செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும் * சிங்கவேள்குன்றமே 1
Pasuram 62 · corpus 1009
அலைத்த பேழ் வாய் * வாள் எயிற்று ஓர் கோளரி ஆய் * அவுணன்
கொலைக் கையாளன் நெஞ்சு இடந்த * கூர் உகிராளன் இடம் **
மலைத்த செல் சாத்து எறிந்த பூசல் * வன் துடி வாய் கடுப்ப *
சிலைக் கை வேடர் தெழிப்பு அறாத * சிங்கவேள்குன்றமே 2
Pasuram 63 · corpus 1010
ஏய்ந்த பேழ் வாய் * வாள் எயிற்று ஓர் கோளரி ஆய் * அவுணன்
வாய்ந்த ஆகம் வள் உகிரால் * வகிர்ந்த அம்மானது இடம் **
ஓய்ந்த மாவும் உடைந்த குன்றும் * அன்றியும் நின்று அழலால் *
தேய்ந்த வேயும் அல்லது இல்லாச் * சிங்கவேள்குன்றமே 3
Pasuram 64 · corpus 1011
எவ்வும் வெவ் வேல் பொன்பெயரோன் * ஏதலன் இன் உயிரை
வவ்வி * ஆகம் வள் உகிரால் * வகிர்ந்த அம்மானது இடம் **
கவ்வும் நாயும் கழுகும் * உச்சிப்போதொடு கால் சுழன்று *
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாச் * சிங்கவேள்குன்றமே 4
Pasuram 65 · corpus 1012
மென்ற பேழ்வாய் * வாள் எயிற்று ஓர் கோளரி ஆய் * அவுணன்
பொன்ற ஆகம் வள் உகிரால் * போழ்ந்த புனிதன் இடம் **
நின்ற செந்தீ மொண்டு சூறை * நீள் விசும்பூடு இரிய *
சென்று காண்டற்கு அரிய கோயில் * சிங்கவேள்குன்றமே 5
Pasuram 66 · corpus 1013
எரிந்த பைங் கண் இலங்கு பேழ் வாய் * எயிற்றொடு இது எவ் உரு என்று *
இரிந்து வானோர் கலங்கி ஓட * இருந்த அம்மானது இடம் **
நெரிந்த வேயின் முழையுள் நின்று * நீள் நெறிவாய் உழுவை *
திரிந்த ஆனைச் சுவடு பார்க்கும் * சிங்கவேள்குன்றமே 6
Pasuram 67 · corpus 1014
முனைத்த சீற்றம் விண் சுடப் போய் * மூவுலகும் பிறவும் *
அனைத்தும் அஞ்ச ஆள் அரி ஆய் * இருந்த அம்மானது இடம் **
கனைத்த தீயும் கல்லும் அல்லா * வில் உடை வேடரும் ஆய் *
தினைத்தனையும் செல்ல ஒண்ணாச் * சிங்கவேள்குன்றமே 7
Pasuram 68 · corpus 1015
நாத் தழும்ப நான்முகனும் * ஈசனும் ஆய் முறையால்
ஏத்த * அங்கு ஓர் ஆள் அரி ஆய் * இருந்த அம்மானது இடம் **
காய்த்த வாகை நெற்று ஒலிப்பக் * கல் அதர் வேய்ங்கழை போய் *
தேய்த்த தீயால் விண் சிவக்கும் * சிங்கவேள்குன்றமே 8
Pasuram 69 · corpus 1016
நல்லை நெஞ்சே நாம் தொழுதும் * நம்முடை நம் பெருமான் *
அல்லிமாதர் புல்க நின்ற * ஆயிரந் தோளன் இடம் **
நெல்லி மல்கிக் கல் உடைப்பப் * புல் இலை ஆர்த்து * அதர்வாய்ச்
சில்லி சில் என்று ஒல் அறாத * சிங்கவேள்குன்றமே 9
Pasuram 70 · corpus 1017
செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும் * சிஙகவேள்குன்று உடைய *
எங்கள் ஈசன் எம் பிரானை * இருந் தமிழ் நூல் புலவன் **
மங்கை ஆளன் மன்னு தொல் சீர் * வண்டு அரை தார்க் கலியன் *
செங்கையாளன் செஞ்சொல் மாலை * வல்லவர் தீது இலரே 10
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.