Corpus pasurams 1018–1027

This page preserves the source-defined decade 1, chapter 8 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 71 · corpus 1018

Pasuram 71

Study resources at Uveda
கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த * கோவலன் எம் பிரான் *
 சங்கு தங்கு தடங் கடல் * துயில் கொண்ட தாமரைக் கண்ணினன் **
 பொங்கு புள்ளினை வாய் பிளந்த * புராணர் தம் இடம் * பொங்கு நீர்ச்
 செங் கயல் திளைக்கும் சுனைத் * திருவேங்கடம் அடை நெஞ்சமே 1

Pasuram 72 · corpus 1019

Pasuram 72

Study resources at Uveda
பள்ளி ஆவது பாற்கடல் அரங்கம் * இரங்க வன் பேய் முலை *
 பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை * பிரான் அவன் பெருகும் இடம் **
 வெள்ளியான் கரியான் * மணி நிற வண்ணன் என்று எண்ணி * நாள்தொறும்
 தெள்ளியார் வணங்கும் மலைத் * திருவேங்கடம் அடை நெஞ்சமே 2

Pasuram 73 · corpus 1020

Pasuram 73

Study resources at Uveda
நின்ற மா மருது இற்று வீழ * நடந்த நின்மலன் நேமியான் *
 என்றும் வானவர் கைதொழும் * இணைத்தாமரை அடி எம் பிரான் **
 கன்றி மாரி பொழிந்திடக் * கடிது ஆ நிரைக்கு இடர் நீக்குவான் *
 சென்று குன்றம் எடுத்தவன் * திருவேங்கடம் அடை நெஞ்சமே 3

Pasuram 74 · corpus 1021

Pasuram 74

Study resources at Uveda
பார்த்தற்கு ஆய் அன்று பாரதம் கைசெய் திட்டு * வென்ற பரஞ்சுடர் *
 கோத்து அங்கு ஆயர் தம் பாடியில் * குரவை பிணைந்த எம் கோவலன் **
 ஏத்துவார் தம் மனத்து உள்ளான் * இடவெந்தை மேவிய எம் பிரான் *
 தீர்த்த நீர்த் தடம் சோலை சூழ் * திருவேங்கடம் அடை நெஞ்சமே 4

Pasuram 75 · corpus 1022

Pasuram 75

Study resources at Uveda
வண் கையான் அவுணர்க்கு நாயகன் * வேள்வியில் சென்று மாணியாய் *
 மண் கையால் இரந்தான் * மராமரம் ஏழும் எய்த வலத்தினான் **
 எண் கையான் இமயத்து உள்ளான் * இருஞ்சோலை மேவிய எம் பிரான் *
 திண் கை மா துயர் தீர்த்தவன் * திருவேங்கடம் அடை நெஞ்சமே 5

Pasuram 76 · corpus 1023

Pasuram 76

Study resources at Uveda
எண் திசைகளும் ஏழ் உலகமும் வாங்கிப் * பொன் வயிற்றில் பெய்து *
 பண்டு ஓர் ஆல் இலைப் பள்ளி கொண்டவன் * பால் மதிக்கு இடர் தீர்த்தவன் **
 ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன் * ஒள் எயிற்றொடு *
 திண் திறல் அரியாயவன் * திருவேங்கடம் அடை நெஞ்சமே 6

Pasuram 77 · corpus 1024

Pasuram 77

Study resources at Uveda
பாரும் நீர் எரி காற்றினோடு * ஆகாசமும் இவை ஆயினான் *
 பேரும் ஆயிரம் பேச நின்ற * பிறப்பிலி பெருகும் இடம் **
 காரும் வார் பனி நீள் விசும்பிடைச் * சோரும் மா முகில் தோய்தர *
 சேரும் வார் பொழில் சூழ் எழில் * திருவேங்கடம் அடை நெஞ்சமே 7

Pasuram 78 · corpus 1025

Pasuram 78

Study resources at Uveda
அம்பரம் அனல் கால் நிலம் * சலம் ஆகி நின்ற அமரர் கோன் *
 வம்பு உலாம் மலர்மேல் * மலி மட மங்கை தன் கொழுநன் அவன் **
 கொம்பின் அன்ன இடை மடக் குற மாதர் * நீள் இதணம்தொறும்
 செம் புனம் அவை காவல் கொள் * திருவேங்கடம் அடை நெஞ்சமே 8

Pasuram 79 · corpus 1026

Pasuram 79

Study resources at Uveda
பேசும் இன் திருநாமம் எட்டு எழுத்தும் * சொல்லி நின்று பின்னரும் *
 பேசுவார் தமை உய்ய வாங்கிப் * பிறப்பு அறுக்கும் பிரான் இடம் **
 வாச மா மலர் நாறு வார் பொழில் * சூழ் தரும் உலகுக்கு எல்லாம் *
 தேசமாய்த் திகழும் மலைத் * திருவேங்கடம் அடை நெஞ்சமே 9

Pasuram 80 · corpus 1027

Pasuram 80

Study resources at Uveda
செங் கயல் திளைக்கும் சுனைத் * திருவேங்கடத்து உறை செல்வனை *
 மங்கையர் தலைவன் கலிகன்றி * வண் தமிழ்ச் செஞ்சொல் மாலைகள் **
 சங்கை இன்றித் தரித்து உரைக்க வல்லார்கள் * தஞ்சமதாகவே *
 வங்க மா கடல் வையம் காவலர் ஆகி * வான் உலகு ஆள்வரே 10

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.