Corpus pasurams 1942–1951

This page preserves the source-defined decade 10, chapter 10 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 995 · corpus 1942

Pasuram 995

Study resources at Uveda
திருத்தாய் செம்போத்தே *
திரு மா மகள் தன் கணவன் *
மருத் தார் தொல் புகழ் * மாதவனை வர *
திருத்தாய் செம்போத்தே 1

Pasuram 996 · corpus 1943

Pasuram 996

Study resources at Uveda
கரையாய் காக்கைப் பிள்ளாய் *
கரு மா முகில் போல் நிறத்தன் *
உரை ஆர் தொல் புகழ் * உத்தமனை வர *
கரையாய் காக்கைப் பிள்ளாய் 2

Pasuram 997 · corpus 1944

Pasuram 997

Study resources at Uveda
கூவாய் பூங் குயிலே *
குளிர் மாரி தடுத்து உகந்த *
மா வாய் கீண்ட * மணி வண்ணனை வர *
கூவாய் பூங் குயிலே 3

Pasuram 998 · corpus 1945

Pasuram 998

Study resources at Uveda
கொட்டாய் பல்லிக் குட்டி *
குடம் ஆடி உலகு அளந்த *
மட்டு ஆர் பூங் குழல் மாதவனை வர *
கொட்டாய் பல்லிக் குட்டி 4

Pasuram 999 · corpus 1946

Pasuram 999

Study resources at Uveda
சொல்லாய் பைங் கிளியே *
சுடர் ஆழி வலன் உயர்த்த *
மல் ஆர் தோள் * வட வேங்கடவனை வர *
சொல்லாய் பைங் கிளியே 5

Pasuram 1000 · corpus 1947

Pasuram 1000

Study resources at Uveda
கோழி கூ என்னுமால் *
தோழி நான் என் செய்கேன்? *
ஆழி வண்ணர் * வரும் பொழுது ஆயிற்று *
கோழி கூ என்னுமால் 6

Pasuram 1001 · corpus 1948

Pasuram 1001

Study resources at Uveda
காமற்கு என் கடவேன்? *
கரு மா முகில் வண்ணற்கு அல்லால் *
பூ மேல் ஐங்கணை * கோத்துப் புகுந்து எய்ய *
காமற்கு என் கடவேன்? 7

Pasuram 1002 · corpus 1949

Pasuram 1002

Study resources at Uveda
இங்கே போதும்கொலோ *
இன வேல் நெடுங் கண் களிப்ப? *
கொங்கு ஆர் சோலைக் * குடந்தைக் கிடந்த மால் *
இங்கே போதும்கொலோ? 8

Pasuram 1003 · corpus 1950

Pasuram 1003

Study resources at Uveda
இன்னார் என்று அறியேன் *
அன்னே ஆழியொடும் *
பொன் ஆர் சார்ங்கம் உடைய அடிகளை *
இன்னார் என்று அறியேன் 9

Pasuram 1004 · corpus 1951

Pasuram 1004

Study resources at Uveda
தொண்டீர் பாடுமினோ *
சுரும்பு ஆர் பொழில் மங்கையர் கோன் *
ஒண் தார் வேல் கலியன் ஒலி மாலைகள் *
தொண்டீர் பாடுமினோ 10

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.