Corpus pasurams 1952–1961

This page preserves the source-defined decade 11, chapter 1 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.

This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.

Pasuram 1005 · corpus 1952

Pasuram 1005

Study resources at Uveda
குன்றம் ஒன்று எடுத்து ஏந்தி * மா மழை
அன்று காத்த அம்மான் ** அரக்கரை
வென்ற வில்லியார் * வீரமே கொலோ *
தென்றல் வந்து * தீ வீசும்? என் செய்கேன்

Pasuram 1006 · corpus 1953

Pasuram 1006

Study resources at Uveda
காரும் வார் பனிக் * கடலும் அன்னவன் *
தாரும் மார்வமும் * கண்ட தண்டமோ **
சோரும் மா முகில் * துளியினூடு வந்து *
ஈர வாடை தான் * ஈரும் என்னையே?

Pasuram 1007 · corpus 1954

Pasuram 1007

Study resources at Uveda
சங்கும் மாமையும் * தளரும் மேனிமேல் *
திங்கள் வெம் கதிர் * சீறும் என் செய்கேன்? **
பொங்கு வெண் திரைப் * புணரி வண்ணனார் *
கொங்கு அலர்ந்த தார் * கூவும் என்னையே

Pasuram 1008 · corpus 1955

Pasuram 1008

Study resources at Uveda
அங்கு ஓர் ஆய்க்குலத்துள் * வளர்ந்து சென்று *
அங்கு ஓர் * தாய் உரு ஆகி வந்தவள் *
கொங்கை நஞ்சு உண்ட * கோயின்மை கொலோ *
திங்கள் வெம் கதிர் * சீறுகின்றதே?

Pasuram 1009 · corpus 1956

Pasuram 1009

Study resources at Uveda
அங்கு ஓர் ஆள் அரி ஆய் * அவுணனை
பங்கமா * இரு கூறு செய்தவன் **
மங்குல் மா மதி * வாங்கவே கொலோ *
பொங்கு மா கடல் * புலம்புகின்றதே?

Pasuram 1010 · corpus 1957

Pasuram 1010

Study resources at Uveda
சென்று வார் * சிலை வளைத்து * இலங்கையை
வென்ற வில்லியார் * வீரமே கொலோ **
முன்றில் பெண்ணைமேல் * முளரிக் கூட்டகத்து *
அன்றிலின் குரல் * அடரும் என்னையே?

Pasuram 1011 · corpus 1958

Pasuram 1011

Study resources at Uveda
பூவை வண்ணனார் * புள்ளின்மேல் வர *
மேவி நின்று நான் * கண்ட தண்டமோ **
வீவு இல் ஐங்கணை * வில்லி அம்பு கோத்து *
ஆவியே இலக்கு ஆக எய்வதே?

Pasuram 1012 · corpus 1959

Pasuram 1012

Study resources at Uveda
மால் இனம் துழாய் * வரும் என் நெஞ்சகம் *
மாலின் அம் துழாய் * வந்து என் உள்புக **
கோல வாடையும் * கொண்டு வந்தது ஓர் *
ஆலி வந்ததால் * அரிது காவலே

Pasuram 1013 · corpus 1960

Pasuram 1013

Study resources at Uveda
கெண்டை ஒண் கணும் துயிலும் * என் நிறம்
பண்டு பண்டு போல் ஒக்கும் ** மிக்க சீர்த்
தொண்டர் இட்ட * பூந் துளவின் வாசமே *
வண்டு கொண்டுவந்து * ஊதுமாகிலே

Pasuram 1014 · corpus 1961

Pasuram 1014

Study resources at Uveda
அன்று பாரதத்து * ஐவர் தூதனாய் *
சென்ற மாயனைச் * செங் கண் மாலினை **
மன்றில் ஆர் புகழ் * மங்கை வாள் கலி
கன்றி * சொல் வல்லார்க்கு * அல்லல் இல்லையே

Learn these pasurams a few at a time

Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.