This page preserves the source-defined decade 10, chapter 9 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
மன்றில் மலிந்து கூத்து உவந்து ஆடி *
மால் விடை ஏழும் அடர்த்து * ஆயர்
அன்று நடுங்க ஆ நிரை காத்த *
ஆண்மை கொலோ? அறியேன் நான் **
நின்ற பிரானே நீள் கடல் வண்ணா *
நீ இவள் தன்னை நின் கோயில் *
முன்றில் எழுந்த முருங்கையில் தேனா *
முன் கை வளை கவர்ந்தாயே 2
ஆர் மலி ஆழி சங்கொடு பற்றி *
ஆற்றலை ஆற்றல் மிகுத்து *
கார் முகில் வண்ணா கஞ்சனை முன்னம் *
கடந்த நின் கடுந் திறல் தானோ **
நேர் இழை மாதை நித்திலத் தொத்தை *
நெடுங் கடல் அமுது அனையாளை *
ஆர் எழில் வண்ணா அம் கையில் வட்டு ஆம் *
இவள் எனக் கருதுகின்றாயே? 3
மல்கிய தோளும் மான் உரி அதளும் *
உடையவர் தமக்கும் ஓர் பாகம் *
நல்கிய நலமோ? நரகனைத் தொலைத்த *
கரதலத்து அமைதியின் கருத்தோ? **
அல்லி அம் கோதை அணி நிறம் கொண்டு
வந்து * முன்னே நின்று போகாய் *
சொல்லி என் நம்பி இவளை நீ உங்கள் *
தொண்டர் கைத் தண்டு என்ற ஆறே? 4
செரு அழியாத மன்னர்கள் மாளத் *
தேர் வலம் கொண்டு அவர் செல்லும் *
அரு வழி வானம் அதர்படக் கண்ட *
ஆண்மை கொலோ? அறியேன் நான் **
திருமொழி எங்கள் தே மலர்க் கோதை *
சீர்மையை நினைந்திலை அந்தோ *
பெரு வழி நாவல் கனியினும் எளியள் *
இவள் எனப் பேசுகின்றாயே 5
அரக்கியர் ஆகம் புல் என வில்லால் *
அணி மதிள் இலங்கையார் கோனை *
செருக்கு அழித்து அமரர் பணிய முன் நின்ற *
சேவகமோ செய்தது இன்று? **
முருக்கு இதழ் வாய்ச்சி முன் கை வெண் சங்கம் *
கொண்டு முன்னே நின்று போகாய் *
எருக்கு இலைக்கு ஆக எறி மழு ஓச்சல் *
என் செய்வது? எந்தை பிரானே 6
ஆழி அம் திண் தேர் அரசர் வந்து இறைஞ்ச *
அலை கடல் உலகம் முன் ஆண்ட *
பாழி அம் தோள் ஓர் ஆயிரம் வீழப் *
படை மழுப் பற்றிய வலியோ **
மாழை மென் நோக்கி மணி நிறம் கொண்டு
வந்து * முன்னே நின்று போகாய்? *
கோழி வெண் முட்டைக்கு என் செய்வது எந்தாய்! *
குறுந்தடி? நெடுங் கடல் வண்ணா 7
நீர் அழல் வான் ஆய் நெடு நிலம் கால் ஆய் *
நின்ற நின் நீர்மையை நினைந்தோ? *
சீர் கெழு கோதை என் அலது இலள் என்று *
அன்னது ஓர் தேற்றன்மை தானோ **
பார் கெழு பவ்வத்து ஆர் அமுது அனைய *
பாவையைப் பாவம் செய்தேனுக்கு *
ஆர் அழல் ஓம்பும் அந்தணன் தோட்டம்
ஆக * நின் மனத்து வைத்தாயே? 9