Pasuram 941 · corpus 1888
Pasuram 941
பூங் கோதை ஆய்ச்சி * கடை வெண்ணெய் புக்கு உண்ண *
ஆங்கு அவள் ஆர்த்துப் * புடைக்கப் புடையுண்டு **
ஏங்கி இருந்து * சிணுங்கி விளையாடும் *
ஓங்கு ஓத வண்ணனே சப்பாணி * ஒளி மணி வண்ணனே சப்பாணி 1
Thirumangai Azhwar · Pasurams 941–950
Corpus pasurams 1888–1897
This page preserves the source-defined decade 10, chapter 5 grouping and brings its 10 pasurams together for uninterrupted Tamil reading.
This page presents public-domain Tamil text. Each pasuram includes an ordinary external link to its Uveda page for independent commentary and other study material.
Pasuram 941 · corpus 1888
பூங் கோதை ஆய்ச்சி * கடை வெண்ணெய் புக்கு உண்ண *
ஆங்கு அவள் ஆர்த்துப் * புடைக்கப் புடையுண்டு **
ஏங்கி இருந்து * சிணுங்கி விளையாடும் *
ஓங்கு ஓத வண்ணனே சப்பாணி * ஒளி மணி வண்ணனே சப்பாணி 1
Pasuram 942 · corpus 1889
தாயர் மனங்கள் தடிப்பத் * தயிர் நெய் உண்டு
ஏ எம் பிராக்கள் * இரு நிலத்து எங்கள் தம் **
ஆயர் அழக * அடிகள் * அரவிந்த
வாயவனே கொட்டாய் சப்பாணி * மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி 2
Pasuram 943 · corpus 1890
தாம் மோர் உருட்டித் * தயிர் நெய் விழுங்கிட்டு *
தாமோ தவழ்வர் என்று * ஆய்ச்சியர் தாம்பினால் **
தாம் மோதரக் கையால் * ஆர்க்கத் தழும்பு இருந்த *
தாமோதரா கொட்டாய் சப்பாணி * தாமரைக் கண்ணனே சப்பாணி 3
Pasuram 944 · corpus 1891
பெற்றார் தளை கழலப் * பேர்ந்து அங்கு அயல் இடத்து *
உற்றார் ஒருவரும் இன்றி * உலகினில் **
மற்றாரும் அஞ்சப் போய் * வஞ்சப் பெண் நஞ்சு உண்ட *
கற்றாயனே கொட்டாய் சப்பாணி * கார் வண்ணனே கொட்டாய் சப்பாணி 4
Pasuram 945 · corpus 1892
சோத்து என நின்னைத் * தொழுவன் வரம் தர *
பேய்ச்சி முலை உண்ட பிள்ளாய் ** பெரியன
ஆய்ச்சியர் * அப்பம் தருவர் * அவர்க்காகச்
சாற்றி ஓர் ஆயிரம் சப்பாணி * தடங் கைகளால் கொட்டாய் சப்பாணி 5
Pasuram 946 · corpus 1893
கேவலம் அன்று * உன் வயிறு வயிற்றுக்கு *
நான் அவல் அப்பம் தருவன் ** கருவிளைப்
பூ அலர் நீள் முடி * நந்தன் தன் போர் ஏறே *
கோவலனே கொட்டாய் சப்பாணி * குடம் ஆடீ கொட்டாய் சப்பாணி 6
Pasuram 947 · corpus 1894
புள்ளினை வாய் பிளந்து * பூங் குருந்தம் சாய்த்து *
துள்ளி விளையாடி * தூங்கு உறி வெண்ணெயை **
அள்ளிய கையால் * அடியேன் முலை நெருடும் *
பிள்ளைப் பிரான் கொட்டாய் சப்பாணி * பேய் முலை உண்டானே சப்பாணி 7
Pasuram 948 · corpus 1895
யாயும் பிறரும் * அறியாத யாமத்து *
மாய வலவைப் * பெண் வந்து முலை தர **
பேய் என்று அவளைப் * பிடித்து உயிர் உண்ட *
வாயவனே கொட்டாய் சப்பாணி * மால்வண்ணனே கொட்டாய் சப்பாணி 8
Pasuram 949 · corpus 1896
கள்ளக் குழவி ஆய்க் * காலால் சகடத்தை *
தள்ளி உதைத்திட்டுத் * தாய் ஆய் வருவாளை **
மெள்ளத் தொடர்ந்து * பிடித்து ஆர் உயிர் உண்ட *
வள்ளலே கொட்டாய் சப்பாணி * மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி 9
Pasuram 950 · corpus 1897
கார் ஆர் புயல் கைக் * கலிகன்றி மங்கையர் கோன் *
பேராளன் நெஞ்சில் * பிரியாது இடம்கொண்ட
சீராளா ** செந்தாமரைக் கண்ணா * தண் துழாய்த் *
தார் ஆளா கொட்டாய் சப்பாணி * தட மார்வா கொட்டாய் சப்பாணி 10
Use a personal daily schedule, recall practice and spaced reviews to work through the pasurams steadily. This Tamil reading library stays free.